அக்ஷய திருதியையில் முன்னோர் வழிபாடு 18.4.18

இந்த நாளில் நம் முன்னோர்களுக்கு தர்ப்பணம் செய்து அவர்களின் ஆசிகளை பெறுவது மிக மிக முக்கியமான ஒன்று. பல்வேறு குழப்பங்களும், இனம் தெரியாத சங்கடங்களும் மிகுந்திருப்பின் அவை அனைத்தும் மேற்கண்டபடி செய்வதால், பனி போல் விலகும். மனமுருக அவர்களை வேண்டி வழிபட்டால், பலன் கை மேல். மேலும், இந்த நாளில் மரங்களை நடுவது,பறவைகள் மிருகங்களுக்கு உணவு மற்றும் நீர் அளிப்பது அளவற்ற புண்ணிய பலன்களை தேடித்தரும்.வருடத்தில் ஒரே முறை அமையும் இந்த அருமையான சந்தர்ப்பத்தை தவற விடாதீர். குறிப்பு : இந்து சமயத்தை கடைபிடிக்கும் அனைவரும், மேற்கூறிய முன்னோர்களுக்கு வழிபாடு செய்வது அவசியம். குறிப்பிட்ட சமூகத்தினருக்கு மட்டும் என நினைப்பது தவறு. ஹரி ஓம் தத் சத்

Post a comment

0 Comments