சித்ரா பௌர்ணமி-சித்ர குப்தா பூஜை 29.4.18சித்திரை மாதத்து பௌர்ணமி வியாழன், சனி மற்றும் ஞாயிறு ஏதேனும் தினத்தில் வருவது பன்மடங்கு சக்தி கொண்டதாகும். இந்த முறை ஞாயிறு தினத்தில் வருவதால், தங்களால் முடிந்த புனித நதி, ஏரி,அருவி அல்லது கோவில் குளங்கள் அல்லது  சமுத்திர ஸ்னானம் என ஏதேனும் ஒன்றை செய்து நாளை துவக்குவது மிகுந்த நன்மையை தரும். அப்படி வாய்ப்பில்லாதோர் சிறிது கங்கை நீரை குளிக்கும் நீரில் விட்டு, பின் கல் உப்பை அந்த நீரில் கரைத்து கங்கையை தியானித்தவாறு குளிக்கலாம். இந்த நாளில் நீர் மோர் தானம் (உப்பு தவிர்க்கவும்) , சக்கரை பொங்கல் தானம் அல்லது சப்பாத்தி தானம் செய்வது சிறப்பு. சப்பாத்தியை முதலில் மாட்டிற்கும், பின்  நாய், காக்கை போன்றவற்றுக்கும் இடுவது சிறப்பு. மாலையில் சித்திர குப்தரை தியானித்து, வசதிப்படின் அவருக்கான பூஜைகளை செய்து வணங்கி, வசதி குறைந்த மாணவர்களுக்கு நோட்டு புத்தகங்கள் வாங்கி கொடுக்க, சித்திர குப்தரின் கணக்கில் உங்களின் புண்ணிய பலன் கூடும்.

ஹரி ஓம் தத் சத்

தாந்த்ரீக ஸ்ரீ.வாமனன் சேஷாத்ரி
ருத்ர பரிஹார் ரக்‌ஷா சென்டர்
ஜோதிஷ தாந்த்ரீக தீர்வுகள்
9840130156 / 8754402857
www.yantramantratantra.com

Post a comment

0 Comments