பொதுவாக பவுர்ணமி நாள் திங்கட்கிழமையில் வருவது மிக
சிறப்பு- அதுவும் வைகாசி பௌர்ணமி இப்படி திங்கட்கிழமையில் ஆரம்பிப்பது மிக சிறப்பான ஒன்று. இம்முறை திங்கள் இரவு 7:30 அளவில் ஆரம்பித்து மறு நாள் இரவு முடிகிறது. பவுர்ணமி என்றால் நிலவு தரிசனம் தான் நினைவிற்கு வரும். இந்த பவுர்ணமிக்கு வேறொரு சிறப்பும் உண்டு. திங்கட்கிழமை நிலவு தரிசனம் குறைந்தது பதினைந்து நிமிடங்களாவது செய்து, இரவில் குறைந்தது இரு நபர்களுக்கு தயிரன்னம், குடிநீருடன் தானம் செய்து, பின் செவ்வாய் அதிகாலை சூரிய உதயத்திலிருந்து ஒரு மணி நேரத்திற்குள் சூரியனை வழிபட்டு, 'ஓம் சூர்யாய நமஹ' மந்திரம் இயன்றவரை கூறி, பின் மண் அகலில் நல்லெண்ணெய் தீபம் ஆரஞ்சு (சிகப்பு அல்ல ) திரியிட்டு சூரியனுக்கு காட்டியவாறு  ஏற்றி வைக்கவும். இப்படி செய்வதால், காரணம் அறியாமல் வரும் அனைத்து துன்பங்களும் முடிவுக்கு வரும். மேலும் இந்நாளில் மதியம் எலுமிச்சை ஊறுகாய் வைத்து தயிரன்னம் தானம் செய்து, மாலை சிவன் சன்னதி சென்று கர்ப கிரக விளக்கிற்கு சுத்தமான நெய் கொடுத்து வழிபடுவது, பரிகாரத்திற்கு மேலும் வலுவூட்டும். தம்பதிகளுக்குள் உள்ள பிரச்சனைகள் நீங்க, இன்று (செவ்வாய்)அர்த்தநாரீஸ்வரர்  தரிசனம் செய்து வழிபடுவதும். அரவாணிகளுக்கு இயன்ற உதவிகள் தானம் செய்வதும் சிறப்பு தரும். 

ஹரி ஓம் தத் சத்

தாந்த்ரீக ஸ்ரீ.வாமனன் சேஷாத்ரி
ருத்ர பரிஹார் ரக்‌ஷா சென்டர்
ஜோதிஷ தாந்த்ரீக தீர்வுகள்
9840130156 / 8754402857
www.yantramantratantra.com

Post a Comment

Previous Post Next Post

Get in touch!