தகாத காதலில் ஏமாறும் பிள்ளைகள் (முக்கிய பதிவு-முழுவதும் படிக்கவும்)


இரண்டரை  வருடம் முன்பு தாந்த்ரோக்த ராகு உபாசனை கொடுத்த சமயம் ,ஒரு பெண்ணின்  தாய் எம்மிடம் ஒரு கேள்வியெழுப்பினார் : இள வயது பெண்ணை கொண்டுள்ள இவரின் பெண்ணுக்கு ராகு திசை நடந்துவருவதாகவும், வேற்று மத பையன்  ஒருவரை காதலிப்பதாகவும், அவரை தான் மணப்பேன் என அழிச்சாட்டியம் (இது அவர் கூறிய வார்த்தையே) செய்து, வீட்டில் அனைவரையும் நிம்மதி இழக்க செய்து வருகிறாள் என்றும் தெரிவித்தார். மதம் மட்டும் தான் தாங்கள் நிராகரிப்பதற்கு காரணமா என கேட்டதில், இல்லை, அந்த நபரை பற்றி தீர விசாரித்ததில், அவனின் நோக்கம் 'வேறு' எனவும், ஏற்கனவே ஒரு சில பெண்களிடம் பழகி, பின் தற்போது இவர் பெண்ணிடம் பழகி வருவதாகவும் கூறினார். பல ஜோதிடர்களை சந்தித்ததில், பெண் கண்டிப்பாக அவனை தான் திருமணம் செய்வாள், ஆனால் திருமணம் நிலைக்காது என்கின்றனர்-அவள் இந்த பூஜை முறையை செய்ய மாட்டாள்-தாயாகிய நான் செய்தால், பலன் கிட்டுமா என கேட்டார். அப்படி பெண் ஓடிப்போய் திருமணம் செய்தால்,தாங்கள் உயிருடன் இருக்க மாட்டோம் எனவும் கூறினார். அதற்கு 'ராகுவை போல் கொடுப்பார் இல்லை எனவே, பலன் கண்டிப்பாக கிட்டும் என கூறி, மந்திரத்தை கூறும் பொழுது ஒரு கிண்ணத்தில் சுத்தமான நீரை விட்டு, அதில் ஒரு தர்பையை தொட்டு கொண்டே மந்திரம் கூறி, பின் மறு நாள் அந்த நீரை பெண்ணுக்கு கொடுத்து வரச்சொல்லி  கூறினோம். இப்படியே பதினெட்டு நாட்களும் செய்து வந்தார் அவர். பெற்றோர்களான அவர்களின் முடிவில், தீர்மானமாக இருக்கும் படியும் அறிவுரை செய்யப்பட்டது. இது முடிந்த  சரியாக, மூன்று மாதத்தில், அந்த பையன் வேறொரு பெண்ணுடன் பழக்கம் கொண்டு, யாருக்கும் தெரியாமல் அந்த பெண்ணுடன் திருமணம் செய்து கொண்டான். இவரின் பெண் தப்பித்தாள். எதற்காக இதை கூறுகிறோம் என்றால், இந்த முறையும் கிட்ட தட்ட இதே விஷயத்திற்காக ஒரு பெரியவர் உபாஸனைக்கு பதிவு செய்துள்ளார். எம் அனுபவத்தில், ராகு மற்றும் சுக்கிர திசைகள் இளம் வயதில் வந்தால், நபரை தகாத செயல்கள் செய்ய வைத்து ஆட்டி படைத்து விடும். அதிலும் ராகு திசை இளம் வயதில் வரின், துர் நட்புகள் தேடி வரும். இது பொதுவான கருத்தே ஆனாலும், முக்காலே முழு சதவீதம் இப்படி தான் நடக்கிறது. பெற்றோர் அது போன்ற தருணங்களில் மிக கவனமாக, தங்கள் பிள்ளைகளை இது போன்ற சிக்கல்களில் இருப்பின், வெளிக்கொணர வேண்டும்.

இம்முறை தாந்த்ரோக்த ராகு உபாசனை வரும் 06.6.18 புதனன்று நடைபெறும்-மேலும் விவரங்களுக்கு தொலைபேசியில் மட்டும் அழைத்து விவரங்கள் பெறவும்.

ஹரி ஓம் தத் சத்

தாந்த்ரீக ஸ்ரீ.வாமனன் சேஷாத்ரி
ருத்ர பரிஹார் ரக்‌ஷா சென்டர்
ஜோதிஷ தாந்த்ரீக தீர்வுகள்
9840130156 / 8754402857
www.yantramantratantra.com

Post a comment

0 Comments