சமீபத்தில் ஆலோசனைக்கு வந்த அன்பர் ஒருவர், தான் மிகவும் தேர்ச்சி பெற்ற துறையில் வேறு ஒருவரிடம் ஜோதிட ஆலோசனைக்கு பிறகு நாள் பார்த்து தொழில் தொடங்கியதாகவும், ஆனால் அது தோல்வியில் முடிந்து பெரு நஷ்டமாகி, தற்சமயம் வேறு ஏதேனும் தொழில் தொடங்கலாமா என்றும், அந்த தொழில் தோல்விக்கு என்ன காரணம் என்றும் கேட்டிருந்தார். மேலும் தான் மிகவும் நேசித்த பெண்ணை மணமுடிக்கமுடியாது வேறு பெண்ணை திருமணம் செய்து கொண்டதாகவும் அதற்கும் காரணம் கேட்டு கோரிக்கை வைத்தார். அவரின் நிலையை ஆராய்ந்ததில் அவர் கூறியபடியே அவர் அந்த துறையில் ஆளுமை பெற்றவர் எனவும் அவருக்கு ஏற்ற தொழில் தான் அது என்றும் விளங்கியது. ஆனால் தோல்வி ஏன் ? மிகுந்த சிந்தனையுடன் அவர் தொழில் தொடங்கிய நாள் எது என விசாரித்ததில், அது சுப முகூர்த்த தினம் தான் என்றும் அந்த தேதியை குறிப்பிட்டார். அதை அலசியதில் விளங்கியது சூட்சுமம். பல பஞ்சாங்கம் மற்றும் காலண்டர்களில் சுபமுகூர்த்தம் என குறிப்பிட்டுள்ள நாளை அப்படியே எடுத்து கொள்ளக்கூடாது. இதை பல வருடங்களாக கூறி வருகிறோம். ஒவ்வொரு மாதத்திலும், விஷ யோகம் எனப்படும் 4 நாட்கள் உள்ளன. சந்திரன் சனியுடன் இணையும் நாட்கள் அல்லது நேரெதிர் நிலையில் இருக்கும் நாட்கள் அவை.இந்நாட்களில் செய்யப்படும் எவையும் தோல்வியில் முடிந்து மறுமுறை செய்யவைக்கும். இது காதல்,திருமணம்,புதிய நட்பு சேர்க்கை, தொழில்,புதிய விஷயங்கள் தொடங்குதல்,வாகனம் வாங்குதல், பங்குச்சந்தை போன்ற அனைத்திற்கும் பொருந்தும். தாயுடன், பிள்ளை அல்லது மகளுக்கு கருத்து வேறுபாடு, சண்டைகள் போன்றவையும் தோன்றும் நாட்கள் இவை எனலாம். இதை குறிப்பிட்டு கூறி, வேறு நல்ல நாளையும் நேரத்தையும் கணித்து அதே தொழிலை வேறு இடத்தில தொடங்குமாறு கூறி அனுப்பி வைத்தோம். இந்நாட்களில் உங்கள் அனைவரையும் கவனமாக இருக்கும் படி கேட்டுக்கொள்கிறோம். (புதிய விஷயங்களை மட்டும் தள்ளி வைத்தால் போதுமானது). இம்மாதம் ஜூலை 25,26  நாட்களில் சனியுடன் சந்திரன் இணையும் நாட்கள் வருகிறது. 

ஹரி ஓம் தத் சத்

ஸ்ரீ.வாமனன் சேஷாத்ரி
ருத்ர பரிஹார் ரக்‌ஷா சென்டர்
ஜோதிஷ தாந்த்ரீக தீர்வுகள்
9840130156 / 8754402857
www.yantramantratantra.com

Post a Comment

Previous Post Next Post

Get in touch!