குரு பெயர்ச்சி 2018 மகரம் கும்பம் மீனம்மகரம் : பல காலமாக நினைத்து வந்த திட்டமிட்ட அனைத்தையும் வெற்றிகரமாக முடிக்க முடியும். நட்புக்கள், தொடர்புகள், மூத்த சகோதர சகோதரிகளின் அனைத்து வித ஆதரவும் கிட்டும். தனியாக இருப்பதை தவிர்த்து குழுவாக அல்லது ஓரிருவருடன் இருந்து செயல்படுவது இக்காலகட்டத்தில் அவசியமாகிறது. உங்களை சுற்றி இருக்கும் அனைத்தையும் அனைவரையும் நேர்மறையாக நீங்கள் மாற்ற முயற்சிக்கும் காலமிது. கவனமாக செயல்படின் , இக்காலகட்டத்தில் செடிக்கு விதையிட்டால் மரமே முளைத்து விடும்.

கும்பம் :  கவனமாக குறிபார்த்து கல் எரிய வேண்டிய நேரமிது. ஒவ்வொன்றையும் திட்டமிட்டு செய்தால் வெற்றி நிச்சயம். அடுத்தவரை, எவராயினும், அதிகாரம் செய்ய முற்பட்டால் விளைவுகள் சிரமம் தரும். அனுசரித்து வெற்றி காண வேண்டிய காலகட்டம். அவசர சிந்தனைகள், தன்னை மட்டுமே பெரிதாக எண்ணம் கொள்ளல், வேலைகளை தள்ளி போடுதல் தவிர்க்கவும். வெளிநாட்டு தொடர்பினால் வெற்றி வரும் நேரமிது.

மீனம் : பல புதிய விஷயங்களை கற்றுணரும் நேரமிது. வாழ்க்கை நன்முறையாக விரிவடையும், எண்ணங்கள் நேர்மறையாக மேலோங்கும். கற்றல் மற்றும் கற்று கொடுத்தல் என்ற நிலையில் இருப்போருக்கு இது ஒரு அற்புத காலம். மதம், ஆன்மிகம், எழுத்தாளர்கள், ஆன்மீக சொற்பொழிவு ஆற்றுவோர், மற்றும் வெளிநாட்டு சம்மந்தம் போன்றவற்றால் வெற்றிகள் குவியும். ஆன்மீக மற்றும் சாத்வீக விஷயங்களால் நலம் பெற இருக்கிறீர்கள்.

ஹரி ஓம் தத் சத்

ஸ்ரீ.வாமனன் சேஷாத்ரி
ருத்ர பரிஹார் ரக்‌ஷா சென்டர்
ஜோதிஷ தாந்த்ரீக தீர்வுகள்
9840130156 / 8754402857
www.youtube.com/amanushyam

Post a comment

0 Comments