ஒரு அன்பர் மேற்கண்ட நாட்களே ஒரு மாதத்தில்
பெரும்பான்மையான நாட்களை விழுங்கி விடுமே என கேள்வி எழுப்பி இருந்தார்.நாம் செய்யும் எந்த ஒரு காரியமும் முதல் முயற்சியிலேயோ அல்லது சில விஷயங்கள் எவ்வளவோ முயற்சித்தும் வெற்றி பெற்று விடுவதில்லை. அப்படி செய்யப்படும் சில காரியங்கள் பல பிரச்சனைகள் அல்லது துன்பங்களுக்கும் வித்திட்டு விடுகிறது. அவற்றை எல்லாம் கூடிய அளவு தவிர்க்கத்தான் மேற்கூறிய நாட்களில் புதிய விஷயங்களை தவிர்க்க சொல்லப்பட்டு இருக்கின்றது. சந்திராஷ்டமத்தை பொறுத்த வரை ஒரு நபருக்கு அதிக பட்சம் ஏழு மணி நேரம் மட்டுமே. அதற்கும் பரிகாரம் உண்டு. மனதை ஒரு நிலை படுத்தி காரியங்களில் ஈடுபடுவதே  அந்த பரிகாரம். இவற்றை பற்றி விரிவாக எம் புத்தகங்களில் கொடுத்துள்ளோம். கரணத்தை பொறுத்தவரை மாதத்தில் ஒரு சில நாட்களில் சில மணி நேரங்களே வருகின்றன. விஷயோகத்தை பொறுத்தவரை ஒரு நேர்மறையான விஷயம் உண்டு. இந்நேரத்தில் செய்யப்படும் தானங்கள்,பூஜைகள், யாகங்கள், மற்றும் மந்திர உபாசனைகள்  மிக பெரிய வெற்றியை கொண்டு சேர்க்கும் என்பதே அது. மேற்கண்ட நாட்களில் புதிய விஷயங்கள் தொடங்கிய ஆக வேண்டிய கட்டாயம் இருப்பின், பால் மற்றும் உப்பு அவ்வேளைகளில் தவிர்த்து செயல்படுவதும் ஒரு சிறந்த பரிகாரமாக இருக்கும். 

ஒரு வேலையை தவறான தவிர்க்கவேண்டிய நேரத்தில் தொடங்கி பின் வருட கணக்கில் அதற்காக பாடுபடுவதை விட, சிறந்த வெற்றி தரும் நேரத்தில் தொடங்கி உடனடியாக முடித்து வெற்றி காண்பது, நன்மை தரும் அன்றோ? 

ஹரி ஓம் தத் சத்

ஸ்ரீ.வாமனன் சேஷாத்ரி
ருத்ர பரிஹார் ரக்‌ஷா சென்டர்
ஜோதிஷ தாந்த்ரீக தீர்வுகள்
9840130156 / 8754402857   
www.youtube.com/amanushyam

Post a Comment

Previous Post Next Post

Get in touch!