சூரியனுக்குரிய பானு சப்தமி 16.9.18ஞாயிறும் சப்தமியும் இணையும் நாட்களை பானுசப்தமி என்றழைப்பர். குறிப்பாக வளர்பிறையில் இது வருவது மிகுந்த விசேஷம். இவ்வருடத்தில் இது கடைசி ஒன்றாகும். முன்னர் சென்ற ஏப்ரில் 22 மற்றும் செப்டம்பர் 2 ல் வந்தது. இம்முறை வரும் ஞாயிறு செப்டம்பர் பதினாறாம்  நாள் வந்துள்ளது. அதிகாலை எழுந்து குளித்ததும், சூரியனை வணங்கி அவருக்கு நீர் வார்த்து, விளக்கேற்றி முடிந்தளவு 'ஓம் சூர்யாய நமஹ' மந்திரம் கூறி வழிபட்டு, பின்னர் ஆதித்ய ஹ்ருதயம் கூறியோ கேட்டோ வருவது மிகுந்த நன்மை தரும். இந்நாளில் காலை வேளையில் 'சூரிய நாராயணர்' கோவில் சென்று வழிபட்டு கோவிலில் ஒன்றரை மணி நேரம் தங்கி தெரிந்த மந்திரங்களை அல்லது 'ஓம் சூர்யாய நமஹ' மந்திரத்தை கூறி வருவதும், முடிந்தளவு மந்திர உபாசனைகள் செய்வதும், பணம், பொருள், உணவு தானமிடுவதும் இந்நாளில் செய்வது பன்மடங்கு நன்மைகளை பெருக்கும். அரசியலில் இருப்போர் அல்லது ஈடுபட நினைப்போர், அரசு வேலைக்கு காத்திருப்போர், அரசாங்கத்தால் தொல்லைகளை சந்திப்போர், அரசாங்கத்தால் லாபத்தை வேண்டி இருப்போர்க்கு மேற்கண்ட நாளும் கொடுத்துள்ள வழிபாடுகளும் ஒரு மிகசிறந்த வரப்பிரசாதமாகும். 

ஹரி ஓம் தத் சத்

ஸ்ரீ.வாமனன் சேஷாத்ரி
ருத்ர பரிஹார் ரக்‌ஷா சென்டர்
ஜோதிஷ தாந்த்ரீக தீர்வுகள்
9840130156 / 8754402857   
www.youtube.com/amanushyam

Post a comment

0 Comments