ரகசிய பண வசிய பரிகாரம்


சிறிது காலம் முன்பு ஒருவர் நீங்கா பணவளம் ஏற்பட  எளிய பரிகாரம் ஒன்றை கூறும்படியும் மிகுந்த பணக்கஷ்டத்தில் இருப்பதாகவும் கூறினார். ஒரு பெரிய பூஜைப்பொருட்கள் விற்கும் அங்காடியில் முக்கிய பொறுப்பில் உள்ளவர். அவரின் ஜாதகத்தை ஆராய்ந்து புதன் வீற்றிருக்கும் வீட்டின் திசையில் அவர் வீட்டில் நரியின் படம் ஒன்றை மாட்டி, அதன் கீழ் பித்தளை எழுத்துக்களில் அவரின் பெயரை பொறித்த பெயர் பலகையையும் மாட்டிவைக்குமாறு  கூறினோம்.  இது நடந்தது முதல் புத்தகமான தாந்த்ரீக ரகசியங்கள் வெளியீட்டின் சமயம் என்று நினைவு. ஒன்பது மாதங்கள் கழிந்து, இன்று அதே அங்காடியில் அவரை சந்தித்தபொழுது, மிகவும் நல்ல நிலையில் முன்னேற்றம் ஏற்பட்டுவிட்டதாகவும், தற்சமயம் ஏதோ ஒரு வகையில் பண முடை இல்லாது , தடையின்றி வந்துகொண்டிருப்பதாக கூறி மகிழ்ந்தார். இதை நீங்கள் ஒவ்வொருவரும் செய்யலாம். தங்கள் ஜாதகத்தில் புதன் இருக்கும் வீட்டின் திசையை தெரிந்து கொண்டு , அதே திசையில் தங்கள் வசிக்கும் வீட்டின் திசையினில் மேற்கண்டவாறு செய்யலாம். புதபகவான் அருளாசியுடன் பணமுடை நீங்கும். முயற்சித்து வெற்றியினை பகிர்ந்து கொள்ளுங்கள்.ஹரி ஓம் தத் சத்

ஸ்ரீ.வாமனன் சேஷாத்ரி
ருத்ர பரிஹார் ரக்‌ஷா சென்டர்
ஜோதிஷ தாந்த்ரீக தீர்வுகள்
9840130156 / 8754402857 
www.youtube.com/amanushyam

Post a comment

0 Comments