குரு பெயர்ச்சி எவரெவருக்கு நன்மை தரும் ??வருகின்ற குரு பெயர்ச்சி மேஷம், மிதுனம், கன்னி, தனுசு மற்றும் கும்ப ராசியினருக்கு சுப பலன்கள் குறைவாகவும், விருச்சிகம், சிம்ம ராசியினருக்கு மத்திம சுப பலனும், மற்ற ரிஷபம், கடகம், மகரம் மற்றும் மீன ராசியினருக்கு சுப பலன்களும் கொடுக்கக்கூடிய நிலையில் அமைந்திருக்கிறது. பின் மாலை நேரத்தில் பெயர்ச்சி நடக்க இருப்பதால், ஹோமமாக அல்லாமல், விசேஷ குரு பெயர்ச்சி பூஜையாக அன்றைய தினத்தில் நடத்த எண்ணம். இந்த ஓராண்டுகாலத்தில் ஒவ்வொரு ராசியினருக்கு என்னென்ன செய்யலாம், எவற்றை தவிர்க்க வேண்டும் போன்ற  பலன்களை கிரந்தங்களில் கூறியுள்ளபடி வரும் பதிவுகளில் கொடுக்க இருக்கின்றோம். அதற்கு முன் ஒரு விளக்கம். பொதுவாக குருவானவர் தன் பெயர்ச்சிக்கு ஒரு மாதம் முன்னரே, அதற்குரிய பலனை கொடுக்க தொடங்கி விடுவார் என்கின்றன பண்டைய கிரந்தங்கள். அதை உபயோகப்படுத்தி கொள்வது போல் வரும் வெள்ளி, செப்டம்பர் 21  நாள் வாமன ஜெயந்தி வருகின்றது. கிரகங்களில் குருவிற்கு உரியவராக விஷ்ணு அவதாரமான வாமனர் அவதாரம் உள்ளது. அன்றைய நாளில் மாலை ஆறு மணிக்குள் வாமனரின் படத்தை ஒரு வாழை இலையில் வைத்து நெய் தீபம் ஏற்றி, வாமன காயத்ரி பதினொன்று முறை கூறி, மஞ்சள் வாழைப்பழம் நிவேதனம் செய்து படத்தையும் தீபத்தையும் சேர்த்து பன்னிரண்டு முறை பிரதட்சிணம் செய்து வழிபடவும்.  அடுத்து வரும் ஒரு வருடம் சுப பலன்களை அதிகரித்து கொள்ள இது நிச்சயம் உதவும்.

வாமன காயத்ரி மந்திரம்

ஓம் தவ ரூபாய வித்மஹே
ஸ்ருஷ்டி கர்த்தாய தீமஹி
தந்நோ வாமன ப்ரசோதயாத் :


ஹரி ஓம் தத் சத்

ஸ்ரீ.வாமனன் சேஷாத்ரி
ருத்ர பரிஹார் ரக்‌ஷா சென்டர்
ஜோதிஷ தாந்த்ரீக தீர்வுகள்
9840130156 / 8754402857
www.youtube.com/amanushyam

Post a comment

0 Comments