கால சக்ர தந்த்ரம்


சமீபத்தில் ஒரு திரைப்படம் நன்றாக வசூல் செய்வதற்காக பரிகாரம் அல்லது கணிப்பு வேண்டி திரைக்குழுவை சேர்ந்த ஒருவர் திரைப்படத்தின் டைரக்டர் மற்றும் தயாரிப்பாளரின் விவரங்களுடன் வந்திருந்தார். தயாரிப்பாளரின் நிலை நன்றாக இருந்தும், இயக்குனரின் நிலை சரியில்லாத நிலையினை விவரித்தோம். மிகுந்த பொருட்செலவும், கடனும் இருப்பதாகவும், திரைப்படம் வெளியிட தயார் நிலை எனினும், ஏதேனும் செய்தால் வசூல் நன்றாக இருக்கோமோ என்றெண்ணி வந்து இது போன்ற செய்தி அவருக்கு மிகுந்த அதிர்ச்சியை கொடுப்பதாக கூறினார். பொதுவாக திரையுலகில் ஜொலிக்க முக்கியமாக சுக்கிரன் மற்றும் சூரிய கிரகங்கள் துணை புரிய வேண்டும். நடப்பு  தசை புத்தியும் மிக முக்கியம். அவருக்கு எந்த வித பரிகாரம் கொடுக்கலாம் என்றெண்ணிப்பார்த்ததில், கால சக்ர தந்த்ரம் மற்றும் பஞ்ச பட்சியும் துணைக்கு வந்தன. குறிப்பிட்ட நாள், மற்றும் அந்நாளில் அணிய வேண்டிய நிறம், வெளியீட்டின் போது பொருட்களில் சுற்ற வேண்டி துணியின் நிறம் மற்றும் குறிப்பிட்ட நேரம் கொடுத்து அனுப்பிவைக்கப்பட்டது. அவர்களும் அவ்வாறே வெளியிட்டுள்ளனர். படத்தின் பெயருக்கு மெல்லிய தொடர்புள்ள கதை, தற்சமயம் நல்ல நிலையில் பெயரெடுத்து ஓடி முடித்துள்ளது என அறிகின்றேன்.  சில நேரங்களில் ஜோதிடம் எச்சரிக்கும் நிலையில் இருப்பின், அதிலிருந்து மீண்டு வர பரமேஸ்வரன் அருளிய கால சக்ர தந்த்ரம் கைகொடுக்கும். பலரிடத்தில் நான் சோதித்து வெற்றி கண்ட முறை இது.

இதன் சுவாரஸ்யமான தொடர்ச்சி நாளை வெளிவரும். உங்களுக்கு மேலும் சில முக்கிய விஷயங்கள் புரிபடும். காத்திருங்கள்..

ஹரி ஓம் தத் சத்

ஸ்ரீ.வாமனன் சேஷாத்ரி
ருத்ர பரிஹார் ரக்‌ஷா சென்டர்
ஜோதிஷ தாந்த்ரீக தீர்வுகள்
9840130156 / 8754402857

Post a comment

0 Comments