கால சக்ர தந்த்ரம் 2


வேறொரு சுவாரஸ்யமான நிகழ்வு கூறுகிறேன் என்று கூறியிருந்தேன் அல்லவா? அதை இப்பொழுது பார்ப்போம். இவை உங்கள் ஆன்மீக அறிவிற்கு, ஜோதிட தேடுதலுக்கும் தீனி போடும் ஒன்றாக இருக்கும். 

காதல் படம் எடுத்து தோல்வியுற்று இரண்டு வருடங்கள் எந்த படமும் வருமானமும் இல்லாது இருந்த இயக்குனர் ஒருவர் சந்தித்தார். அவருக்கு பத்திற்கதிபதி  ராகுவுடன்  இணைவு.(வேறு சில விஷயங்களை பதிவின் சுருக்கத்திற்கு வேண்டி கூறவில்லை) . இது போன்று அமைப்பு உள்ள ஒருவர் பேய் ஆவி போன்ற விஷயங்களை கொண்டு படம் எடுத்தால் வெற்றியுறும், அதை விடுத்து காதல் படங்களை கொடுத்தால் வெற்றி கிட்டாது என்றும் கூறி, தற்சமய நிலையினை கருத்தில் கொண்டு அவர் குடிக்க வேண்டிய வண்ண நீரை, கால சக்ர தந்த்ர முறைப்படி அறிவுறுத்தினோம். பின்னர், அவர் மக்கள் மூச்சுமுட்ட திகில் படங்கள் ஒன்றிரண்டை  இங்கும் தெலுங்கிலும் கொடுத்து வெற்றியும் பெற்றுள்ளார்.  பொதுவாக எந்தவொரு தொழிலும் வெற்றி பெற இதுபோன்ற சில சூட்சும விஷங்களை ஆராய வேண்டும். ஜோதிடத்துடன் பரமேஸ்வரர் அருளியுள்ள தந்த்ர முறைகளை கொண்டு சிரமங்களை தாண்டி ஒருவரை வெற்றி பெற வைக்க முடியும்.

அடுத்து, ஆஸ்துமாவை குணப்படுத்த மற்றும் நெஞ்சுவலியை தவிர்க்க காலசக்ர தந்த்ர முறையை கூறுகிறேன். காத்திருங்கள்.. 

ஹரி ஓம் தத் சத்
ஸ்ரீ.வாமனன் சேஷாத்ரி
ருத்ர பரிஹார் ரக்‌ஷா சென்டர்
ஜோதிஷ தாந்த்ரீக தீர்வுகள்
9840130156 / 8754402857

Post a comment

0 Comments