karuppu manjal benefits

கருப்பு மஞ்சளின் தாந்த்ரீக பயன்கள் கருப்பு மஞ்சளை பற்றி வெளிஉலகம் அறியாத உண்மைகள் 

KARUPPU MANJAL BENEFITS IN TAMIL  

கருப்பு மஞ்சள் என்பது ஒன்று உண்மையாகவே உள்ளதா ? இது தான் 2014 வாக்கில் நாம் அதை தமிழ் கூறும் நல்லுலககுக்கு கருப்பு மஞ்சளின் தன்மைகள் மற்றும் தாந்த்ரீக பயன்கள் என அறிமுகப்படுத்திய சமயம் பலருக்கும் இருந்த குழப்பம். எனினும் தாந்த்ரீக பரிகார முறைகளை முதன் முதலாக முகநூலில் தமிழில் 2013 வாக்கில் துவக்கிய நபர் (பின்னர் பல்வேறு புல்லுருவிகள் அதை திருடி தங்கள் முக நூலில் இடுவதும், இங்கே நீங்கள் படித்து கொண்டிருக்கும் yantramantratantra.com ல் வழங்கிய பல பதிவுகளை திருடி தங்கள் வலைப்பக்கத்தில் இடுவதும் வாடிக்கையானது. பின்னர் இவை அனைத்தும் திருடப்பட்டு பல்வேறு யூடியூப் சானல்களில் இடப்பட்டது., பல போலிகள் தங்களை தாந்த்ரீகர் என கூறிக்கொண்டு எம் பதிவை திருடி பணம் சேர்க்க துவங்கினர். நேரமின்மை காரணம் மற்றும் technical facility கரணம் கொண்டு நாம் இவற்றை அப்படியே விட்டு விடும் நிலை ஏற்பட்டது. கருப்பு மஞ்சள் பற்றிய பதிவை கண்டு 2014 வாக்கில் ஜெலுசில் கிடைக்காத ஒரு 'வாஸ்து' திருடர் தன்னுடைய முகநூல் பக்கத்தில் எம்மை பற்றி அவதூறு பரப்பியும், கருப்பு மஞ்சள் என ஒன்று இல்லவே இல்லை எனவும் கூறி வந்தார். அவசியமில்லாத செயல் என இப்போது தோன்றினாலும், அந்த சமயத்தில் அதை நிரூபிக்க பல்வேறு மத்திய அரசு தோட்டக்கலை நிபுணர்களை அணுகி அதன் உண்மை தன்மையை மக்களே புரிந்து கொள்ள மத்திய அரசின் ஆராய்ச்சி நிறுவனம் மற்றும் தொடர்புடைய நபர் விவரங்களை அப்போதே முகநூலில் விளக்கி உள்ளோம். 

Black Turmeric Uses in Tamil-See Screenshots Here :
பின்னர் கருப்பு மஞ்சளின் தாந்த்ரீக பயன்கள் பற்றி எமது வேந்தர் டிவி மூன்றாவது கண் நிகழ்ச்சி (2014 அல்லது 2015 வாக்கில் என நினைவு) வெளிவந்ததும் இவை மக்களிடையே பெரும் பரபரப்பை ஏற்படுத்தி பல இடங்களில் விசாரிக்க இவை வியாபாரிகளின் கைகளுக்கு சென்று தற்சமயம் 800 ருபாய் முதல் 1000 ருபாய் வரை ஒரு கிலோ என விற்கப்பட்டு வருகிறது.இதுவும் நமக்கு சிறிது தாமதமாக தான் தெரிந்த நிலையில் 'நிஜ' கருப்பு மஞ்சளை தாந்த்ரீக பூமிகளான சண்டிகர்,ஒரிசா,மத்திய பிரதேசம் போன்று இடங்களில் இருந்து தருவிப்பதை நிறுத்தினோம். எனினும் பல காலமாக எம்மை தொடர்ந்து வரும் அன்பர்கள் கருப்பு மஞ்சள் பற்றி கேட்டு கொண்டே இருந்தனர். நாம் தருவிக்கும் கருப்பு மஞ்சள் தாந்த்ரீக பயன்களுக்கும், பணம் வர, பணம் சேர,பணம் பெருக ,செல்வம் சேர,செல்வம் வர,செல்வம் பெருக பிரத்யேக முறையில் தகுந்த முகூர்த்தத்தில் தகுந்த லக்கினத்தில் அதற்க்கு உண்டான பிரத்யேக மண்ணில் இருந்து தருவிப்பவை.

நாம் அளிக்கும் தாந்த்ரீக கருப்பு மஞ்சள் எப்படி வருகிறது கருப்பு மஞ்சளின்  பயன்கள் 

பசுவை பலகாலம் உலவ விட்டு அதன் கோமியம், சாணம்,உமிழ் நீர் சேர்ந்த மண் மற்றும் பிரத்யேக காளி பூஜைகள் செய்யப்பட்டு சில பல காரணங்களுக்காக எருமைகளை சில காலம் உலவ விட்டு பின்னர் கிழங்கு விதைகளை இடுவர்-மஞ்சள் நன்கு வளர்ந்ததும் அதை எடுப்பதற்கும் தகுந்த பூஜை முறை, காப்பு முறை என உண்டு. ஆகையால் தான் நம்முடைய கருப்பு மஞ்சளின் சக்தி வீரியமும் அதிகம்-விலையும் அதற்கு தகுந்தாற் போல் இருக்கும். அப்படியென்றால் தற்சமயம் கடைகளில் கிடைக்கும் கருப்பு மஞ்சளுக்கு சக்தியே இல்லையா என கேள்வி உங்கள் மனதில் எழும். கண்டிப்பாக சக்தி உண்டு.மருத்துவத்திற்கு பயன்படுத்தலாம். கருப்பு மஞ்சள் காளிக்கு,துர்க்கைக்கு உகந்த ஒன்று. கிரகங்களில் சனிக்கும் ராகுவிற்கும் பரிகாரமாக இதை (முறையாக வளர்க்கப்பட்டதை) வீட்டில் வளர்க்கலாம். (இந்த பதிவை பார்த்ததும் உடனே இணைய தளம் எங்கும் இந்த முறையில் தான் நங்கள் கருப்பு மஞ்சள் விற்கிறோம் என ஒரு போலி கூட்டம் கிளம்புவதை ஓரிரு மாதங்களில் காண்பீர்கள்)

கருப்பு மஞ்சளை உபயோகிப்பது எப்படி? 

இதை (நிஜ) தாந்த்ரீகர்கள் பல்வேறு சக்திகளை பெற தங்களுடைய மோதிர விரல் ரத்தத்தோடு கலந்து நெற்றியில் இட்டு சில சாதனைகள் உபாசனையில் செய்வது  வழக்கம். அன்றாட மக்கள் இவற்றை கருப்பு துணியில் அல்லது சிகப்பு துணியில் முடிந்து தாங்கள் பணம் வைக்கும் பீரோ,பணப்பெட்டி, நகைகள் வைக்கும் இடத்தில் மற்றும் பூஜையோ அறையில் வைப்பது அதீத பலனை தரும். வளர்த்த விரும்புவோர் சிகப்பு நிற தொட்டி வைத்து அதிக வெய்யில் படாத இடத்தில் வளர்த்து வரலாம். வாஸ்து ரீதியாகவும் கருப்பு மஞ்சள்  பலனளிக்கும் என தற்சமயம் பலர் கிளப்பி விட ஆரம்பித்துள்ளனர். பொதுவாக கருப்பு மஞ்சள் இருக்கும் இடம் சர்வ வசியம் அதாகப்பட்டது ஜன வசியம் தன வசியம் போன்றவை ஆகும். கருப்பு மஞ்சளை குழைத்து மோதிர விரல் (வலது கை) கொண்டு திலகமிட்டு செல்ல வசீகர சக்தி உண்டாகும். இதை அணியும் சமயம் அல்லது வீட்டில் விதைக்கும் சமயம் கங்கை நீரால் கழுவி பின்னர் "ஓம் தும்(DHUM ) துர்காயை நமஹ" என்ற மந்திரம் இதை கையில் வைத்தவாறு 1008 முறை கூறி விதைத்தால் பல்வேறு நற்பயன்களை நிரந்தரமாக பெறலாம். ஒரே நாளில் மையமாக வசிய சக்தியை பெற மற்றும் ஒரே நாளில் அல்லது ஒரே மாதத்தில் லட்சாதிபதி அல்லது கோடீஸ்வரர் ஆகும் எண்ணம் உடையவர்கள் இதை தவிர்ப்பது நல்லது. முதல் முறை திலகமிடும் சமயம் 1008 பின்னர் தினசரி திலகமிட்டால் 27 முறை என கூறுவதால் போதுமானது. 

கருப்பு மஞ்சளின் தாந்த்ரீக பயன்களை பற்றி கூறுவதென்றால் இந்த பக்கம் போதாது. மேலும் இதை பற்றி ஓரிரு வீடியோக்கள் நமது சானலில் கொடுக்க எண்ணம். அதையும் பின்தொடர விரும்புவோர் இங்கே க்ளிக் செய்யவும்.

தாந்த்ரீக கருப்பு மஞ்சள் வேண்டுவோர் இங்கே க்ளிக் செய்யவும். 


Post a Comment

Previous Post Next Post

Get in touch!