செப்டம்பர் மாத ராசி பலன் 2021 மேஷம் | MESHAM SEPTEMBER MONTH RASI PALAN 2021 | Vamanan Seshadri Remedies
மேஷம் : முதல் வாரம் வரை அலுவலகம் தொழில் வீடு மற்றும் முக்கிய வேளைகளில் முன்கோபம் மற்றும் எரிச்சலையும் தவிர்க்கவும். முதல் வாரம் முதல் நல்ல முன்னேற்றம் காணலாம்-எனினும் உழைப்பை அதிகம் எடுத்து பலனை கொடுப்பார் சனிபகவான். ஆகையால் வேலை தொழில் விஷயத்தில் செப்டம்பர் மாதம் மேஷ ராசியினர் கூர்மையான போக்கை கடைபிடிப்பது நன்று. பெண்களிடத்தில் மரியாதையுடனும் மதிப்பு கொடுத்ததும் இம்மாதம் முழுதும் நடந்து கொள்ளுதல் அவசியம் வீட்டிலும் சரி வெளியிலும் சரி. காரிய தடைகள்,விரக்தி மனப்பான்மை வந்து போகாமல் இருக்க தினசரி காலை குளித்ததும் 'ஓம் கம் கணபதயே நமஹ' பலன் முறை கூறி நாளை ஆரம்பிப்பது பல வகையில் முன்னேற்றம் தரும். மற்றபடி பணப்புழக்கம் தைரியம் போன்றவை சாதமாகவே உள்ளன. வெள்ளிக்கிழமைகளில் மஹாலக்ஷ்மி சன்னதி கர்ப கிரக விளக்கிற்கு தூய பசு நெய் சேர்த்து வழிபடுவது மேஷ ராசியினருக்கு செப்டம்பர் மாதத்தை நன்மை அளிக்க கூடிய ஒன்றாக மாற்றும்.