ஆவணி மாத ராசி பலன் 2021 துலாம் முதல் மீனம் வரை | VAMANAN SESHADRI TIPS


ஆவணி மாத ராசி பலன்கள் ஆகஸ்ட் 17 முதல் செப்டம்பர் 16 2021 வரை 

துலாம் ராசி 

ஆவணி மாத ராசி பலன் 2021 துலாம்
மதிப்பும் புகழும் மரியாதையும் அதிகரிக்க கூடிய காலகட்டம் இந்த ஆவணி மாதத்தில் துலா ராசியினருக்கு.பணவரவு மற்றும் தந்தை வழி ஆதாயம்,தந்தை இல்லாதோருக்கு தந்தை ஸ்தானத்தில் அல்லது வயதில் உள்ளோரால் மகிழ்ச்சி போன்றவை எதிர்பார்க்கலாம். அரசு ரீதியான ஆதாயம் அரசு வேளையில் உள்ளோருக்கு பலவித ஆதாயங்கள் மற்றும் அரசியலில் உள்ள துலாம் ராசியினருக்கு ஆவணி மாதம் பெரிதும் உதவும். வகைகளில் செல்லுபொழுது கவனம் தேவை. வாகனங்களை எடுக்கும் சமயம் எரிபொருள் சரிபார்த்து கொள்வது மற்றும் வேறு குறைகள் உள்ளதா என சரிபார்த்து கொண்டு எடுக்கவும். புதிய வாகனங்கள் எடுப்பதற்கு இம்மாதம் உகந்ததல்ல துலாம் ராசியினருக்கு. செவ்வாய்கிழமைகளில் காலை 9-10:30 மணியளவில் வீட்டில் அல்லது அரச மாற விநாயகருக்கு நெய் தீபம் ஏற்றி வணங்கி "ஓம் மங்களாய நமஹ மற்றும் ஓம் கணேஷாய நமஹ' 108 கூறி பின் காரியங்களை தொட்டால் மட்டுமே ஜெயமாகும். 

விருச்சிகம் ராசி 

ஆவணி மாத ராசி பலன் 2021 விருச்சிகம்



தகுந்த முயற்சியால் உழைப்பால் எந்த ஒரு காரியத்திலும் வெற்றியும் மகிழ்ச்சியும் தரக்கூடியது இந்த ஆவணி மாதம் விருச்சிக ராசியினருக்கு. மனதில் புது தெம்பும் தைரியமும் பிறக்கும். ஆனால் பேச்சில் மிகுந்த கவனம் தேவை இந்த மாதம் முழுதும். உழைப்பும் நல்ல படியாக சேர்ந்தால் வெற்றி நிச்சயம். தேவையற்ற வாக்குவாதங்கள் அல்லது கடும் சொற்கள் எவரிடமாவது உபயோகித்தால் அதன் பலன் விபரீதமாக முடியலாம். மற்றபடி பணவரத்துக்கு குறைவில்லை. புதிய பொருட்கள் மற்றும் சுப காரியங்கள் செய்ய திட்டமிட்டால் ஒன்றிற்கு இரண்டு முறை வீட்டில் உள்ளோரிடம் கலந்து ஆலோசித்து முடிவு செய்யவும்.தனியாக முடிவு செய்தல் விருச்சிக ராசியினருக்கு ஆவணி மாதத்தில் பெரும் வெற்றியை தேடி தரும் நிலையில் இல்லை. அரசு ரீதியான வேலையாட்களை துணிந்து செய்யலாம். வெற்றி நிச்சயம்.எந்தவொரு காரியத்திற்கும் செல்லும் முன் மஹாலக்ஷ்மி மற்றும் சிவ வழிபாடு-விளக்கேற்றி அவர்களை வழிபட்டு வேண்டி, 'ஓம் மஹாலக்ஷ்மியை நமஹ' மற்றும் 'ஓம் நமசிவாய' மந்திரம் கூறி பின் துவங்கவும். 

தனுசு ராசி 

ஆவணி மாத ராசி பலன் 2021 தனுசு

அனுகூலமும் பிரதிகூலமும் கலந்து வரக்கூடிய மாதம் ஆவணி மாதம் விருச்சிக ராசியினருக்கு. பிறருக்கு வாக்கு கொடுப்பதில் மிகுந்த கவனம் தேவை. நிறைவேற்ற முடியாமல் போகலாம். சிலர் புதிய ஆடைகள் ஆபரணங்கள் வாகனங்கள் புதிய வீடு மாறும் யோகங்கள் போன்றவையே சந்திப்பார்கள். அது நன்மையை செய்யும் காலம் இது. உழைப்பு அதிகம் தேவைப்படும் மாதம் தனுசு ராசியினருக்கு இந்த ஆவணி மாதம் என்றாலும் அதற்கேற்ற ஊதியம் வந்து சேரும். எதிரிகளை வெற்றி கொள்வீர்கள்-இருப்பினும் மறைமுக எதிரிகளிடத்தில் கவனம் தேவை. அதிக ஆசை ஆபத்தில் முடியலாம்-ஆகையால் பண ரீதியான விஷயத்தில் பிறரின் ஆசை வார்த்தைகளில் இந்த மாதம் தனுசு ராசியினர் கவனமாக இருக்க வேண்டிய அவசியம் உண்டாகிறது. திங்கட்கிழமைகளில் ராகு வேளையில் ஆவணி மாதம் முழுதும் துர்க்கைக்கு விளக்கேற்றி வழிபடுவது நன்மையை தரும்-வேண்டாத தொல்லைகளை நீக்கும். தினசரி 'ஓம் தும் துர்காயை நமஹ' மந்திரம் 108 முறை ஆவணி மாதம் முழுதும் கூறி வரவும்.  

மகரம் ராசி 

ஆவணி மாத ராசி பலன் 2021 மகரம்
தைரியம் பெருக்கெடுக்கும். அதே சமயம், அரசு காரியங்களில் கவனமின்மை ,உடல் நலத்தில் கவனமின்மை, இரவில் வெகு நேரம் விழித்திருத்தல், தந்தையுடன் வாக்குவாதத்தில் ஈடுபடுதல் அல்லது தந்தை வயதில் ஸ்தானத்தில் உள்ளோரிடம் வீண் வம்பு செய்தல் போன்றவற்றை தவிர்த்தால் இந்த ஆவணி மாதத்தை ஜெயமாக்கலாம் மகரம் ராசியினர். இரவு நேரத்தில் வெளியிடங்களில் உணவு உண்பது, தேவையின்றி வெளியில் சுற்றுவது குறிப்பாக இரவு நேரத்தில்.வயிற்று வலி வாயு முழங்கால் வலி தென்பட்டால் உடனடியாக தகுந்த மருத்துவம் மேற்கொள்ளவும்.இம்மாதம் அசைவம் தவிர்ப்பது மகர ராசியினருக்கு சிக்கல் இன்றி கழிப்பதற்கு ஏதுவாகும். தினசரி வீட்டிலேயே பைரவருக்கு கருநீலத்திரியில் விளக்கேற்றி 'ஓம் பைரவாய நமஹ' 108கூறி காரியத்தை துவங்குவது அனைத்திலும் நன்மையை சேர்க்கும். புதிய முடிவுகள் எடுக்கும் சமயம் கவனம் தேவை.  வாழ்க்கை துணையுடன் தேவையற்ற வாக்குவாதங்கள் சண்டைகள் தவிர்ப்பது அவசியம். 

கும்பம் ராசி 

ஆவணி மாத ராசி பலன் 2021 கும்பம்

முன்னேற்றம் தைரியம் எதையும் எதிர் கொள்ளும் மனப்பாங்கு அதிகரிக்கும் காலம் இந்த ஆவணி மாதம் கும்ப ராசியினருக்கு.உடல் ஆரோக்கியம், வாகனங்களில் பயணம் செய்வதில் கவனம், ஹெல்மெட் சீட் பெல்ட் போன்றவை அணிவது,வாகனம் சிறிது பழுதானாலும் உடனடியாக கவினிப்பது போன்றவை நன்மையை தரும். காவலர்கள், செக்யூரிட்டிகள் போன்றவர்களுக்கு தானம் செய்வது செவ்வாய்க்கிழமைகளில் நரசிம்மர் வழிபாடு சிகப்பு திரியிட்டு நரசிம்ம பிரபத்தி 11 முறை தினசரி கூறுவது நன்மையை தரும் கும்பம் ராசிக்கு. கும்ப ராசி ஆண்கள் எதிர் பாலினரிடத்தில் கவனமாக பேசுவது தொடர்பில் கண்ணியம் கூடுதலாக காக்க வேண்டிய மாதம் இது. வீட்டில் தேவையற்ற வாக்குவாதங்களை தவிர்த்தல் நலம் தரும். 

 மீனம் ராசி 


ஆவணி மாத ராசி பலன் 2021 மீனம்

அனைத்து காரியங்களும் ஜெயமாகும் ஆவணி மாதம் மீன ராசியினருக்கு. குடும்பம் மற்றும் நண்பர்களுடன் மகிழ்ச்சியுடன் உறவாடுவது மற்றும் வெளியிடங்களை சுற்றி பார்ப்பது போன்றவை சிலருக்கு நடக்கலாம். ஆன்மீக நாட்டம் குரு தரிசனம் போன்றவற்றை எதிர்பார்க்கலாம். குருமார்களுக்கு அந்தணர்களுக்கு இந்த ஆவணி மாதத்தில் மீன ராசியினர் செய்யும் உதவிகள் பெரும் வெற்றியை தேடி தரும். தினசரி 30 முறை 'ஓம் நமசிவாய' மந்திரம் கூறி காரியத்தை துவங்கினால் வெற்றி நிச்சயம். விஷ்ணு சஹஸ்ரநாமம் கேட்டு வருவதும் நல்ல பலன் தரும் மீனத்திற்கு. 


ஆவணி மாத ராசி பலன் 2021 | AVANI MATHA RASI PALAN 2021 | VAMANAN SESHADRI TIPS | மேஷம் முதல் கன்னி வரை 








Post a Comment

Previous Post Next Post

Get in touch!