முக்கிய குறிப்பு : இது வரலக்ஷ்மி விரதம் லகு பூஜை முறை எனினும் மிகுந்த சக்தி வாய்ந்த ஒன்றாக கொடுக்கப்பட்டுள்ளது. செய்முறையை இந்த காணொளியில் கண்ட பின் அதன் படி செய்து வரவும்.
வரலக்ஷ்மி விரதம் தேவையான பொருட்கள் :
திருவிளக்கு, எண்ணை, நெய், திரி மற்றும் ஏற்ற வத்தி பெட்டி. பூமாலை மற்றும் உதிரிப்பூக்கள் (அர்ச்சனைக்கு) பூஜை சாமான்கள் வைக்க தேவையான தட்டுக்கள் மஞ்சள் தூள், சந்தனம், குங்குமம், அட்சதை வெற்றிலை, பாக்கு ,சுண்ணாம்பு மற்றும் அவைகளை வைக்க கிண்ணங்கள் ஊதுபத்தி, கற்பூரம், சாம்பிராணி மணி மற்றும் கற்பூரம் ஏற்ற தட்டு. பஞ்ச பாத்திரம், உத்தரினி. மாக்கோலம் போட தேவையான பொருட்கள் மஞ்சள் சரடு நைவேத்தியங்கள் (முடிந்ததை செய்யவும்,பாயசம் கட்டாயம்) இட்லி,அப்பம்,வடை (உளுந்து வடை) கொழுக்கட்டை,வெல்ல பாயசம், சர்க்கரை பொங்கல்,வாழைப்பழம் மற்றும் கிடைக்கும் எல்லா பழங்களும். (உங்கள் வசதிக்குட்பட்டு)
வரலக்ஷ்மி விரதம் லக்ஷ்மி ராவே மா இண்டிக்கி-வரலக்ஷ்மி விரதம் பாடல் | Varalakshmi Vratham Song
வரலக்ஷ்மி விரதம் கணபதி பூஜை
ஓம் சுமுகாய நம: |
ஓம் ஏகதந்தாய நம: |
ஓம் கபிலாய நம: |
ஓம் கஜகர்ணாய நம: |
ஓம் லம்போதராய நம: |
ஓம் விகடாய நம: |
ஓம் விக்னராஜாய நம: |
ஓம் விநாயகாய நம: |
ஓம் தூமகேதவே நம: |
ஓம் கணாத்யக்ஷாய நம: |
ஓம் பாலசந்த்ராய நம: |
ஓம் கஜானனாய நம: |
ஓம் வக்ரதுண்டாய நம: |
ஓம் சூர்ப்பகர்ணாய நம: |
ஓம் ஹேரம்பாய நம: |
ஓம் ஸ்கந்த பூர்வஜாய நம: |
ஓம் ஸித்திவிநாயகாய நம: |
அர்ச்சனை செய்த பின், தூபம், தீபம் காட்டி, நிவேதனம் செய்ய வேண்டும்.
மேற்கண்ட முறை அல்லது மஞ்சள் பிள்ளையார் பிடித்து அருகம்புல் சாற்றி 'ஓம் கம் கணபதயே நமஹ' 54 அல்லது 108 முறை கூறவும்.
பின்னர்
ஓம் ஸ்ரீ மஹாகணபதயே நம: நானாவித பரிமள பத்ர புஷ்பாணி சமர்பயாமி- உதிரி பூ அல்லது அருகம்புல் இட்டு தூப தீபம் காட்டி மஞ்சள் வாழைப்பழம் நிவேதனம் செய்யவும் (முதல் நிவேதனம்) பின்னர் உங்களின் வேண்டுதல்களை (சங்கல்பம்) கூறவும்.
வரலக்ஷ்மியை கலசத்தில் ஆவாஹனம் செய்ய மந்திரம் :
ஸர்வ மங்கள மாங்கல்யே விஷ்ணு வக்ஷஸ்த்தலாலயே | ஆவாஹயாமி தேவி த்வாம் அபீஷ்ட பலதா பவ || அஸ்மின் கலசே ஸ்ரீ வரலக்ஷ்மீம் ஆவாஹயாமி
(கை கூப்பி வரலக்ஷ்மி தேவியை வீட்டிற்கு வருமாறு மனதார பக்தியுடன் அழைக்கவும்-கலசத்தில் புஷ்பம் போடவும்)
கலசம் வைக்காதவர்கள் மஹாகணபதி பூஜை செய்த பின் வரலக்ஷ்மி தேவியை இல்லத்திற்கு பூஜையை ஏற்க வருமாறு மனதார அழைத்து மஹாலக்ஷ்மி அஷ்டோத்திரம் கூறி பூஜையை ஆரம்பம் செய்யவும்.
பின், நூற்றியெட்டு போற்றி அல்லது அஷ்டோத்ரசத நாமம் சொல்லி, புஷ்பம் அல்லது குங்குமம் அல்லது பூவினால் அர்ச்சனை செய்யவும்.
ஸ்ரீ லட்சுமி அஷ்டோத்ர சத நாமாவளி :
ஓம் ப்ரக்ருத்யை நம:
ஓம் விக்ருத்யை நம:
ஓம் வித்யாயை நம:
ஓம் ஸர்வபூத ஹிதப்ரதாயைநம:
ஓம் ச்ரத்தாயை நம:
ஓம் விபூத்யை நம:
ஓம் ஸுரப்யை நம:
ஓம் பரமாத்மிகாயை நம:
ஓம் வாசே நம:
ஓம் பத்மாலயாயை நம:
ஓம் பத்மாயை நம:
ஓம் சுசயே நம:
ஓம் ஸ்வாஹாயை நம:
ஓம் ஸ்வதாயை நம:
ஓம் ஸுதாயை நம:
ஓம் தன்யாயை நம:
ஓம் ஹிரண்மய்யை நம:
ஓம் லக்ஷ்ம்யை நம:
ஓம் நித்யபுஷ்டாயை நம:
ஓம் விபாவர்யை நம:
ஓம் அதித்யை நம:
ஓம் தித்யை நம:
ஓம் தீப்தாயை நம:
ஓம் வஸுதாயை நம:
ஓம் வஸுதாரிண்யை நம:
ஓம் கமலாயை நம:
ஓம் காந்தாயை நம:
ஓம் காமாக்ஷ்யை நம:
ஓம் க்ரோதஸம்பவாயை நம:
ஓம் அனுக்ரஹப்ரதாயை நம:
ஓம் புத்தயே நம:
ஓம் அநகாயை நம:
ஓம் ஹரிவல்லபாயை நம:
ஓம் அசோகாயை நம:
ஓம் அம்ருதாயை நம:
ஓம் தீப்தாயை நம:
ஓம் லோகசோக விநாசின்யை நம:
ஓம் தர்மநிலயாயை நம:
ஓம் கருணாயை நம:
ஓம் லோகமாத்ரே நம:
ஓம் பத்மப்ரியாயை நம:
ஓம் பத்மஹஸ்தாயை நம:
ஓம் பத்மாக்ஷ்யை நம:
ஓம் பத்மஸுந்தர்யை நம:
ஓம் பத்மோத்பவாயை நம:
ஓம் பத்மமுக்யை நம:
ஓம் பத்மநாபப்ரியாயை நம:
ஓம் ரமாயை நம:
ஓம் பத்மமாலாதராயை நம:
ஓம் தேவ்யை நம:
ஓம் பத்மின்யை நம:
ஓம் பத்மகந்தின்யை நம:
ஓம் புண்யகந்தாயை நம:
ஓம் ஸுப்ரஸன்னாயை நம:
ஓம் ப்ரஸாதாபிமுக்யை நம:
ஓம் ப்ரபாயை நம:
ஓம் சந்த்ரவதனாயை நம:
ஓம் சந்த்ராயை நம:
ஓம் சந்த்ரஸஹோதர்யை நம:
ஓம் சதுர்ப்புஜாயை நம:
ஓம் சந்த்ரரூபாயை நம:
ஓம் இந்திராயை நம:
ஓம் இந்துசீதளாயை நம:
ஓம் ஆஹ்லாதரூஜனன்யை நம:
ஓம் புஷ்ட்யை நம:
ஓம் சிவாயை நம:
ஓம் சிவகர்யை நம:
ஓம் ஸத்யை நம:
ஓம் விமலாயை நம:
ஓம் விச்வஜனன்யை நம:
ஓம் துஷ்ட்யை நம:
ஓம் தாரித்ர்யரூநாசின்யை நம:
ஓம் ப்ரீதிபுஷ்கரிண்யை நம:
ஓம் சாந்தாயை நம:
ஓம் சுக்லமால்யாம்பராயை நம:
ஓம் ச்ரியை நம:
ஓம் பாஸ்கர்யை நம:
ஓம் பில்வநிலயாயை நம:
ஓம் வராரோஹாயை நம:
ஓம் யசஸ்வின்யை நம:
ஓம் வஸுந்தராயை நம:
ஓம் உதாராங்காயை நம:
ஓம் ஹரிண்யை நம:
ஓம் ஹேமமாலின்யை நம:
ஓம் தனதான்யகர்யை நம:
ஓம் ஸித்தயே நம:
ஓம் ஸ்த்ரைண ஸெளம்யாயை நம:
ஓம் சுபப்ரதாயை நம:
ஓம் ந்ருபவேச்ம கதானந்தாயை நம:
ஓம் வரலக்ஷ்ம்யை நம:
ஓம் வஸுப்ரதாயை நம:
ஓம் சுபாயை நம:
ஓம் ஹிரண்யப்ராகாராயை நம:
ஓம் ஸமுத்ரதனயாயை நம:
ஓம் ஜயாயை நம:
ஓம் மங்களாதேவ்யை நம:
ஓம் விஷ்ணுவக்ஷஸ்தல ஸ்திதாயை நம:
ஓம் விஷ்ணுபத்ன்யை நம:
ஓம் ப்ரஸன்னாக்ஷ்யை நம:
ஓம் நாராயண ஸமாச்ரிதாயை நம:
ஓம் தாரித்ர்ய த்வம்ஸின்யை நம:
ஓம் தேவ்யை நம:
ஓம் ஸர்வோபத்ரவரூவாரிண்யை நம:
ஓம் நவதுர்காயை நம:
ஓம் மஹாகால்யை நம:
ஓம் ப்ரஹ்மவிஷ்ணுரூ சிவாத்மிகாயை நம:
ஓம் த்ரிகாலஜ்ஞான ஸம்பன்னாயை நம:
ஓம் புவனேஸ்வர்யை நம:
ஸ்ரீ லட்சுமி அஷ்டோத்ர சத நாமாவளி சம்பூர்ணம். (ஒவ்வொரு நாமங்களை கூறும் பொழுதும் புஷ்பமிடவேண்டியது-முடிவில் 'சம்பூர்ணம்' என கூறும் இடத்தில காய் நிறைய பூக்கள் எடுத்து மனதார பிரார்த்தனை செய்து கலசத்தில் பூக்களை இடவும்-அர்ச்சனை கலசம் இருந்தால் கலசத்திற்கு தான் செய்ய வேண்டும்-கலசம் வைக்காமல் படத்தை வைத்து பூஜிப்பவர்கள் மஹாலக்ஷ்மி படத்தில் பூக்களை இடலாம்-நிறைய பூக்கள் வாங்க முடியாத நிலையில் உள்ளார்-பச்சரிசி சிறிது மஞ்சள் கலந்த அட்சதை பூக்களுக்கு பதிலாக இடலாம்.