வசீகர சக்தி பெற கிருஷ்ண மந்திரம் VASIYAM MANTHIRAM
வசீகர சக்தி பெற கிருஷ்ண ஜெயந்தி மந்திரம் VASIYA MANTHIRAM #shortsஎன்கிற தலைப்பில் கொடுத்துள்ள காணொளிகள் மந்திரம்-காணொளியை காண இதில் க்ளிக்கவும்.
மந்திரங்கள் : ஓம் க்லீம் கிருஷ்ணாய நமஹ (108) ஓம் ராதாயை நமஹ (108) ஓம் ராதிகாயை நமஹ (108)
KRISHNA JAYANTHI VASIYAM MANTHIRAM IN ENGLISH :
OM KLEEM KRISHNAYA NAMAHA (108)
OM RADHAAYAI NAMAHA (108)
OM RADHIKAYAI NAMAHA (108)
For other Details use a translator facility from this Site. For the Exact mantra, we've given in English. வசீகர சக்தி பெற உலகில் தலைசிறந்த வழிபாடு என்றால் கிருஷ்ண வழிபாடு மிக முக்கிய ஒன்றாகும்-மேற்கண்ட மந்திரங்களை கூறவேண்டிய கிருஷ்ண ஜெயந்தி பூஜை நேரம் மற்றும் வழிபாடு பற்றி அறிய இங்கே க்ளிக்கவும். பிரயோக முறை: பச்சரிசியை சிறிது எடுத்து கொள்ளவும். கிருஷ்ணரின் படத்தின் முன் அருகம்புல் விருப்பி அல்லது பலகையில் அமர்ந்து நெய் விளக்கேற்றி வைக்கவும். வசீகர சக்தி வேண்டி வசீகர மந்திரம் கூறுவதாக சங்கல்பம் (வேண்டுதல்) செய்து கொள்ளவும்.
KRISHNA JAYANTHI 2021 | கோகுலாஷ்டமி 2021 | கிருஷ்ண ஜெயந்தி முக்கிய மந்திரம்
இந்த வசீகர மந்திரம் பூஜை முறையை செய்யும் முன் முக்கிய பூஜை செய்து விடுவது நன்று -விவரங்கள் அறிய இங்கே க்ளிக்கவும்.தனியான பூஜை பாத்திரத்தில் அரிசியை வைத்து கொள்வது நன்று. தனியான பூஜை பாத்திரம் இல்லாதோர் வாழை இலையில் வைத்து கொள்ளவும். மஞ்சள் எதுவும் சேர்க்க கூடாது-ஒன்றிரண்டு துளசி மற்றும் அரிசி சேர்த்து ஒவ்வொரு மந்திரத்திற்கும் கிருஷ்ண ஜெயந்தி நாளில் கிருஷ்ணரின் முன் சிறிய வாழை இலை அல்லது பூஜை தட்டு வைத்து அதில் அர்ச்சிக்கலாம். மந்திரங்களை ஒன்று முடித்து மற்றொன்று என வரிசையில் சொல்ல வேண்டும். அர்ச்சித்து முடித்து தூப தீபம் காட்டி கட்டி கற்கண்டு நிவேதனம் செய்யவும்.
KRISHNA MANTRA FOR WEALTH IN TAMIL Vamanan Seshadri Tips
பின்னர் தூப தீபம் காட்டி வணங்கி, குடும்பத்தினர் அனைவரும் கட்டி கற்கண்டு பிரசாதம் உண்ணலாம். பின்னர் கிருஷ்ணர் சிலையை தாங்கள் வைத்திருக்கும் இடத்தில இருந்து ஒரு துளி வடக்கு பக்கம் இரு கைகளை கொண்டு நகர்த்தவும். பின்னர் துளசியை தனியாகவும் அரிசியை தனியாகவும் வெவ்வேறு டப்பிகளில் பத்திரப்படுத்தி,தினசரி ஒரு துளி அரிசி மற்றும் துளசியை தினசரி குளித்தவுடன் உண்டு வரவும்-குடும்பத்தினரும் தேவைப்பட்டால் உண்ணலாம். இதை உண்ணும் சமயம் மனதினுள் கிருஷ்ண ஜெயந்தி முதல் மந்திரமான ஓம் க்லீம் கிருஷ்ணாய நமஹ சொல்லிக்கொண்டே உண்ணலாம்.
முக்கிய குறிப்பு : கிருஷ்ண ஜெயந்தி நாளில் இதை செய்ய முடியாதவர்கள் வெள்ளிக்கிழமை சனிக்கிழமை அல்லது ரோகினி நட்சத்திர நாளில் செய்து பயன் பெறலாம்.