செப்டம்பர் மாத ராசி பலன் 2021 கடகம் | KADAKAM SEPTEMBER MONTH RASI PALAN 2021 | Vamanan Seshadri Remedies
கடக ராசியினருக்கு மாத முதல் வாரத்தில் பேச்சில் கவனமும் உடல் நிலையில் கவனமும் அவசியம்-தலைவலி,ஜுரம்,வயிற்று போக்கு போன்ற உபாதைகள் வராத வண்ணம் உணவில் கவனம் செலுத்தவும். பேச்சில் எரிச்சல் மற்றும் கோபத்தை குறைத்து நிதானத்தை மேற்கொண்டால் நல்ல பலன் நிச்சயம். வருகின்ற செப்டம்பர் 10 தேதிக்கு மேல் கடக ராசியினருக்கு நிலை சுமுகமாகும்-எதிலும் எளிதாக தடையின்றி நல்ல பலன் வந்து சேரும். இரண்டாம் வாரத்திற்கு பிறகு மேலும் சில நல்ல பலன்களை எதிர்பார்க்கலாம். தன வரவு தம்பதிகளுக்குள் அன்னியோன்னியம் போன்றவை நிச்சயம் மேம்படும். கணபதி வழிபாடு தினசரி செய்து வேலையை துவங்க நலன்கள் அனைத்தும் இரட்டிப்பாகும்.