செப்டம்பர் மாத ராசி பலன் 2021 சிம்மம் | SIMAMM SEPTEMBER MONTH RASI PALAN 2021 | Vamanan Seshadri Remedies
சிம்ம ராசியினருக்கு செப்டம்பர் மாதம் முழுதும் நெருப்பு கூர்மையான ஆயுதங்கள் வாகனங்கள் போன்றவற்றில் கவனம் தேவை. மேலும் இந்த மாதம் புதிதாக கடன் வாங்குவதை தவிர்க்கவும். பேச்சில் இனிமையும் கவனமும் சேர்த்து கொண்டால் அனைத்திலும் சுபம் உண்டாகும்.எந்த ஒரு நபரையும் இந்த மாதம் அதிகாரம் மற்றும் உஷ்ணமான வார்த்தைகளால் அடக்கி வைக்க நினைப்பதை தவிர்க்கவும்.மற்றபடி வசதி வாய்ப்புகள் பெருகும் சூழ்நிலை உருவாகும். பண வரவிற்கு பஞ்சமில்லை. பிறர் ஆசை வார்த்தைகள் எதையும் நம்பி யூக வியாபாரத்தில் இந்த மாதம் முதலீடு செய்வதை தவிர்க்கவும். செவ்வாய்க்கிழமைகளில் ஆஞ்சநேயர் கோவிலில் நெய் தீபம் ஏற்றுவதும் தினசரி ஆஞ்சநேய வழிபாடு செய்வதும் ராம நாமம் சொல்வதும் அதிக பலன் தரும்.