சியார் சிங்கி, மற்றுமொரு அறிய தாந்த்ரீக பொருளாகும்-சிறு நரி கொம்பு எனப்படும் இதை வைத்திருக்கும் இடம் செல்வவளமாக மாறும் என்பது காலம் காலமாக இருந்து வரும் நம்பிக்கையும் கூட. குறிப்பிட்ட இன மக்களிடம் இவை இன்றளவும் புழக்கத்தில் உண்டு. எனினும், வேட்டையாடப்படாத அதாவது இயற்கையாக மரணமடைந்தவற்றில் இருந்து எடுக்கப்படும் சியார் சிங்கி மட்டுமே நல்ல பலன்களை தரும். இந்த காரணத்தால் இவை மிகவும் அரிதான ஒன்றாக மாறிவிட்டது.
வசீகரம், பண வசீகரம், அதிர்ஷ்டம் மற்றும் எதிரிகளிடம் செய்வினை துட்ட சக்திகளிடம் இருந்து பாதுகாக்கும் சக்தி இவற்றிக்கு உண்டு. தாந்த்ரீக விஷயங்களில் முக்கிய பிரயோகம் ஒன்றிற்கு இவை அதிக அளவில் பயன்படுத்தப்படுவதாக உள்ளது.
