நிஷித்த முகூர்த்தம் நிஷித்த காலம் என்றால் என்ன? நிஷித்த கால மஹாலக்ஷ்மி பூஜை
இந்தியா மற்றும் இலங்கைக்கான தினசரி துல்லிய நிஷித்த முகூர்த்த நேரம் மற்றும் ப்ரம்ம முகூர்த்த நேரம் இந்த வலைத்தளத்தில் கொடுத்து வருகின்றோம்.மேலும் தினசரி அதி சக்தி வாய்ந்த நிஷித்த முகூர்த்த மஹாலக்ஷ்மி பூஜை 10 நிமிடத்தில் செய்ய இந்த சானலில் பார்க்கவும்.
மகாநிஷித்த காலம்,- இந்த மங்களகரமான காலத்தில் செய்யப்படும் லட்சுமி பூஜை இணையற்ற செழிப்பையும் செல்வத்தையும் கொண்டு வரும் என்று கூறப்படுகிறது. மஹாநிஷித்த காலத்தில் மஹாலக்ஷ்மி தன்னை அன்புடனும் மனம் ஒன்றிய பக்தியுடனும் தினசரி பூஜிப்பவர்களுக்கு அவர்களின் வறுமை நிலை மற்றும் தரித்திரம் நீக்கி வேண்டியதை கொடுப்பாள். ஸ்ரீகுரு.வாமனன் சேஷாத்ரியின் தங்களுக்கான பிரத்யேக நிஷித்த பூஜை முறைகளை அறிந்து, செய்து வந்து மிகப்பெரிய அளவில் வெகுவிரைவில் வாழ்வில் உச்சத்தை தொட்டவர்கள் ஏராளம்.
நள்ளிரவில் விழித்திருந்து குளித்து அல்லது சுத்தத்துடன் நெய் விளக்கேற்றி மஹாலக்ஷ்மி பாதங்களை வணங்கி அவளின் நாமங்களை சொல்பவர்களுக்கு, எங்கும் நிலையாக இல்லாமல் பல இடங்களில் பரவி செல்லும் மஹாலக்ஷ்மி அருள் நிலைத்தன்மையுடன் கிடைக்கும். மேலும், மாயையான ஆற்றல்கள் நிறைந்திருக்கும் இந்த நிஷித்த முகூர்த்த நேரத்தில் செய்யும் பூஜைகள் மஹாலக்ஷ்மி தேவியை முழுதாக சென்றடையும் என்பது முன்னோர் வாக்கு.
சிவராத்ரி நாளிலும் இந்த மஹாநிஷித்த முகூர்த்த நேரத்தை விட்டு விட கூடாது. நமசிவாய நாமம் சொல்வதற்கும் சிவ பூஜைகள் செய்வதற்கும் மிகவும் ஏற்ற காலம் நிஷித்த காலமாகும். தீபாவளி மற்றும் நவராத்ரி, அக்ஷய திருதியை அக்ஷய நவமி ஸ்தாணு அஷ்டமி போன்ற நாட்களில் நிஷித்த முகூர்த்த மஹாலக்ஷ்மி பூஜையை எவர் ஒருவரும் செய்யாமல் விட்டு விடக்கூடாது.தினசரி நாட்களை காட்டிலும் மஹாலக்ஷ்மி தேவியின் அருள் ஆற்றல் மேற்சொன்ன நாட்களில் மிக அதீதமாய் காணப்படும்.ஆனால்,தினசரி இதை தொடர்ந்து செய்து வருவோருக்கு எதோ ஒரு நாள் மட்டும் இதை செய்வோருக்கும் உள்ள மனநிலைபாட்டை மஹாலக்ஷ்மி தேவி நன்குணர்வாள். ஆகவே, இன்று முதல் தினசரி 10 நிமிடங்களேனும் ஒதுக்கி நிஷித்த முகூர்த்த பூஜையை துவங்குங்கள்.