Monday, 13 April 2015

மன்மத புத்தாண்டை சிறப்பாக்க சக்தி வாய்ந்த பரிகாரம்இந்நாளில் மதியம் பணிரெண்டிலிருந்து ஒரு மணிக்குள் அரச மரம் ஒன்றை தேர்ந்தெடுத்து அதன் வேருக்கு முதலில் நீர் பின்பு சிறிது பால் ஊற்றி வழிபட்டு அதனடியில் ஒரு மண் அகலில் சுத்தமான நெய் விளக்கேற்றி, தூபம் காண்பித்து, மரத்தை 21 முறை சுற்றி வந்து பின் மரத்தினை வேண்டி கொண்டு 12 இலைகளை ஆயுதம் படாமல் பறித்து வீட்டிற்கு எடுத்து வந்து மாலை அந்த இலைகளை சூடு நீரில் இட்டு கொதிக்க வைத்து பின்பு அன்றாடம் குளிக்கும் நீரில் இட்டு குளிக்க, சென்ற ஆண்டில் உங்களை அழுத்தி வந்த அனைத்து பிரச்சனைகளும் விலகி நன்மைகள் சேரும். மிகுந்த சூட்சுமங்கள் நிறைந்த பரிகாரம் இது. 

Sunday, 12 April 2015

பௌர்ணமியில் செய்ய வேண்டியவை

இந்நாளில் இல்லற சேர்க்கை, அசைவ உணவு கண்டிப்பாக தவிர்த்தல் நலம். மேலும் அன்னதானம் செய்ய மிக உகந்த தினம். தயிர் தேய்து குளித்தாலும் நலம் தரும். அண்ணாமலையாரை வணங்கி சிவ ஸ்தோத்திரம் கூறி வர மனம் மகிழ்ச்சியுறும். 

வளர்பிறை சதுர்தசியில் செய்ய வேண்டியவை
இந்நாளில் அசைவ உணவு அறவே தவிர்த்தல் வேண்டும்-மேலும் சண்டை சச்சரவுகள், வீண் வாக்குவாதங்களை தவிர்த்தல் நல்லது.108 மணிகள் கொண்ட ருத்திராக்ஷ மாலையை அணிந்தவாறு ருத்ர ஜபம் செய்தல் அல்லது 'ருத்ரம் சமகம்' கேட்டு வருதல்-சிவ சன்னதியில் உழவார பணி செய்தல் நலம். 

வளர்பிறை த்ரியோதசியில் செய்ய வேண்டியவைபிரதோஷ வழிபாட்டிற்கு பூஜை சாமான்கள் வாங்கி கொடுப்பது, பிரதோஷ வேலை முழுதும் கர்ப்ப கிரகம் அருகில் அமர்ந்த படி சிவ தியானம் செய்து வருவது பாவங்களை போக்கும். சண்டை சச்சரவுகளில் இருந்து இந்நாளில் ஒதுங்கி இருப்பது நலம் தரும். 

வளர்பிறை துவாதசியில் செய்ய வேண்டியவைகாலையில் குளித்தததும் மூன்று முறை விஷ்ணு சஹஸ்ரநாம பாராயணம் அல்லது ஒலிப்பேழையில் கேட்டு வருதல் நலம் தரும். மாலையில் விஷ்ணு (பெருமாள்) கோவில் சென்று கர்ப கிரக விளக்கிற்கு நெய் கொடுத்தல் மற்றும் அலங்காரத்திற்கு பூ கொடுத்து வர நன்மை பன்மங்காகும். இந்நாளில் 
பண செலவு விஷயங்களில் எச்சரிக்கை தேவை. 

வியாபாரத்தில் / தொழிலில் லாபம் அதிகரிக்க


இதை செவ்வாய் கிழமை அன்று தொடங்கி தொடர்ந்து செவ்வாய்கிழமைகளில் செய்து வரலாம். எவ்வளவு வாரங்கள் தொடர்கிறோமோ அவ்வளவு நன்மை வந்து சேரும்.
செவ்வாய் அன்று அதிகாலை ஆறு மணியளவில் குளித்து ஆஞ்சநேயர் படம்/விக்கிரகம் முன்பு சுந்தர காண்டம் புத்தகம் வைத்து அதற்கு சந்தனம் மஞ்சள் மற்றும் குங்குமம் இட்டு தூப தீபம் காட்டி வழிபட்டு பின்பு 'ஓம் ஹம் அனுமதயே நமஹ்" மந்திரத்தை 108 முறை கூறி பின்பு நிவேதனம் செய்யவும். இந்நாளில் பால் பழம் மட்டும் உண்டு விரதம் அனுஷ்டிப்பது நன்மை சேர்க்கும். மாலையில் ஆறு மணியளவில் செம்பினால் ஆன சொம்பு ஒன்றில் சுத்தமான நீர் நிரப்பி அதில் பச்சை கற்பூரம், ஏலக்காய் மற்றும் ஒரு ரூபாய் நாணயம் இட்டு அதன் மேல் ஒரு தேங்காயை வைக்கவும்.சொம்பை சிகப்பு துணியினால் அலங்கரித்து அதன் மேல் பூக்கள் வைக்கவும். பின்பு கீழ்க்கண்ட மந்திரத்தை 1008 கூறி அனுமனை வழிபட்டு நிவேதனம் செய்து பூஜையை முடித்து விடலாம். மறு நாள் சொம்பில் உள்ள நீரை யாரும் கால் படாதவாறு ஏதேனும் மரத்தில் விட்டு விடலாம். மிகுந்த சக்தி வாய்ந்த இந்த பூஜை முறை உடனடியாக தொழில்/வியாபாரம்/வேலை வாய்ப்பு மற்றும் பதவி உயர்வை பெற்று தரும். செய்து பயன் அடையுங்கள்.
மந்திரம் : ஓம் நமோ பகவதே ஆஞ்சனேயாயை மஹாபலாயை சுவாஹா ||

தொடர் பிரச்சனைகள், தரித்திர நிலை நீங்க எளிய பரிகாரம்


தொடர்ந்து 12 வியாழன் அன்று மதியம் 1-2 மணிக்குள் அரச மர நிழலில் 30 நிமிடங்கள் இருந்து பின்பு தானாக விழுந்த 3 இலைகளை எடுத்து, வீடு வந்ததும் அதை மஞ்சள் நீரில் அலம்பி பின்பு சிறு அரச மர குச்சியால் மஞ்சள் கொண்டு 'ஸ்ரீம்' மந்திரம் எழுதி அது மூன்றையும் இரவு 8-9 மணியளவில் மஹாலக்ஷ்மி கோவிலில் மறைவான இடத்தில் வைத்து வந்து விடவும். இதனால் நீண்ட கால பிரச்சனைகள், தரித்திர நிலை,பண பிரச்சனைகள்,தொடர் தோல்விகள் அனைத்தும் நீங்கி அனைத்து நன்மைகளும் தேடி வரும்.

திடீர் பண வரவிற்கு எளிய தாந்த்ரீக பரிகாரம்


தொடர்ந்து ஆறு வெள்ளிக்கிழமைகள் காலை ஆறு முதல் ஏழு மணிக்குள் அல்லது மதியம் ஒன்றிலிருந்து இரண்டு மணிக்குள் அதுவும் இயலாதோர் இரவு எட்டு முதல் ஒன்பது மணிக்குள் கீழ்காணும் பரிகார முறையைசெய்து வர திடீர் பண வரவு உண்டாகும்-செல்வ நிலை உயரும்.
இருபது மொச்சை கொட்டைகளை சிறிது சக்கரை சேர்த்து வேக வைக்கவும்.குழைந்து விடக்கூடாது. முழு மொச்சைகளாக தெரிய வேண்டும். அவற்றை ஒரு வெள்ளை துணி அல்லது கைகுட்டையில் இட்டு முடிச்சு அவிழுமாறு லேசாக கட்டிக்கொள்ளவும் பின்பு கீழ்க்கண்ட மந்திரத்தை ஆறு முறை கூறி முடித்து அதை ஓடும் நீர்நிலைகளில் விட்டு விடவும். கைமேல் பலன் தரும் சிறந்த தாந்த்ரீக பரிகாரம் இது.
மந்திரம் :
ஓம் ஸ்ரீம் ஹ்ரீம் ஸ்ரீம் கமலே கமலாலயே ப்ரஸீத ப்ரஸீத ஸகல சௌபாக்யம் தேஹி தேஹி ஓம் ஸ்ரீம் ஹ்ரீம் ஸ்ரீம் ஓம் மஹாலக்ஷ்ம்யை நமஹ :

பணப்புழக்கம் அதிகரிக்க சக்தி வாய்ந்த மந்திரம்

மிகவும் சக்தி வாய்ந்த கீழ்க்கண்ட மந்திரத்தை தினசரி அறுபது முறை கூறி வர பணப்புழக்கம் அதிகரிக்கும்-வீடு,வாகன வசதிகள் உண்டாகும்.
ஓம் தேவராஜய வித்மஹே||
வஜ்ரஹஸ்தாய தீமஹி ||
தந்நோ இந்த்ர ப்ரசோதயாத் ||