ஜின் மாந்த்ரீகம் - பாகம் ஒன்றுகுரானில் இவற்றை பற்றி பல விடயங்கள் உள்ளன. மேலும், குரானில், " மனிதர்களை களி மண் உருண்டயினால் படைத்தோம்-அதற்கு முன் ஜின்களை புகையற்ற தீபிழம்பினால் படைத்தோம்' என கூறப்பட்டு உள்ளது. வயது முதிர்ந்த நன்கு பக்குவப்பட்ட முஸ்லிம் பெரியவர் ஒருவரால் இவை எமக்கு கற்பிக்கப்பட்டது. பலர் இவற்றை தீய காரியங்களுக்கு மட்டுமே உபயோகித்து வருவதாலும், இங்கே இந்தியாவில் 'ஜின்' - சைத்தான் என்று அழைக்கப்படுவதாலும், இவற்றை பற்றி ஒரு தவறான கருத்து பரவியுள்ளது. இதை சொந்த விஷயங்களுக்கு பயன்படுத்த கூடாது என்றும், பரிட்சார்த்த முயற்சியாக கைகூடுகிறதா என சோதித்து விட்டு, நிறுத்தி விடுங்கள், மிக மிக அதீத துன்பத்தில், வேறு முறைகளில் காப்பாற்றவே முடியாது என்கிற நிலையில் உள்ள அன்பர்களுக்கு மட்டும் இதை பயன் படுத்துங்கள் எனவும் அறிவுறுத்தினார் அந்த பெரியவர். பொதுவாகவே நான் தாந்த்ரீக முறைகள் அல்லது வேறு முறைகளை சொந்த விஷயங்களுக்கு பயன்படுத்துவது இல்லை என்பதால் இவை எனக்கு கடின விதிகளாக  தெரியவில்லை. பலர் இதை செய்வினை, பேய் பிசாசுகளை விரட்ட, வியாபார விஷயங்கள் மற்றும் ஆண் பெண் விஷயங்களுக்கு பயன்படுத்துவதாகவும் கூறினார். வேறு முறைகளில் பரிகாரங்களை வழங்குவதாக கூறியும், வெளிப்படையாக கூறாமல் ஜின் உபாசனை செய்து பல மாந்த்ரீக வேலைகள் சிலர் செய்கின்றனர் எனவும் தெரிவித்தார். இவையெல்லாம் சில காலம் முன்பு. 
பரிட்சார்த்த முயற்சியில் வெற்றி கண்டு, பின்பு நாமும் மிகுந்த துன்பத்தில் உள்ளோர், கை விட முடியாதோருக்கு  மட்டும் உபயோகிக்கலாம் என விட்டு விட்டோம். இனி, அவைகளின் தன்மைகளை பார்ப்போம்.

அரபிக் வார்த்தை 'ஜன்னா' என்ற வார்த்தையில் தோன்றியது தான் 'ஜின்'. ஜின் என்பது ஆண் வர்க்கத்தையும் 'ஜின்னையாஹ்' என்பது இதில் பெண் வர்க்கத்தையும் குறிக்கும். மனிதர்களை போலவே வாழும் இவைகளுக்கும் திருமணம், இறப்பு, சுவர்க்கம் நரகம் போன்றவை உண்டு. ஆதாம் பிறப்பிற்கு இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன் இவை தோன்றியதாக ஐதீகம். மனிதர்களுக்கும் இவைகளுக்கும் திருமணம் நடந்ததாக கூட குர்ஆனில் குறிப்புகள் உண்டு. 

இவைகளின் தனித்துவம் என்ன ?

மனிதர்களை போலவே மிகுந்த ஆற்றல்கள், ஏன் மனிதர்களை விடவும் பன் மடங்கு ஆற்றல்கள் கொண்ட இவை, ஒளியின் வேகத்தை கொண்டவை என கூறப்பட்டு உள்ளது. எனில், நமக்கு தேவை ஆனதை எவ்வளவு சீக்கிரம் இவை நடத்தி தரும் என்பதை புரிந்து கொள்ளலாம். கடவுள் (குரானில்) உயிரை பத்து மடங்காக படைத்தது அதில் மனித குலத்தை ஒரு மடங்காகவும், மீதம் ஒன்பதை ஜின் களாகவும் படைத்ததாக கூறப்படுகிறது. ஆரம்பத்தில் இவை மிகுந்த அட்டகாசங்கள் செய்து வந்ததாகவும் பின்பு கடவுளினால் அடக்கி வைக்கப்பட்டதாகவும் கூற்று உண்டு. அலிபாபா (நாற்பது திருடர்கள் கதை ) மற்றும் கிங் சாலமன் இவற்றை முழுவதுமாக வசப்படுத்தி வெற்றி கண்டுள்ளனர். குறிப்பாக, கிங் சாலமன், தனது அந்தபுர தேவைக்காக மற்றும் எதிரி நாட்டு பெண்களை, அரசிகளை, இளவரசிகளை கவர இதை உபயோகித்து வெற்றி கண்டுள்ளார். மேலும், எதிரிகளை வெல்ல, மரணிக்க வைக்க, எதிரி நாடுகளை கவர இதை உபயோகித்து வெற்றி கண்டுள்ளதாக வரலாறு கூறுகிறது. (குறிப்பு : இவைகள் 'வரலாறு' என்பதை அறிக. வெறும் கட்டு கதைகள் அல்ல) 

இவை எப்படி இருக்கும்? எங்கு வாழும்? 

இவை அழுக்கான இடங்கள், குப்பைகள் அசுத்தம் உள்ள இடங்கள் மற்றும் கழிவறை, சில நதிக்கரைகளில், சபிக்கப்பட்ட மற்றும் பாழடைந்த இடங்களில் வசிக்கும் தன்மை கொண்டவை. இவைகளுக்கு சுய உருவ அமைப்பு கிடையாது. மேலும், கருப்பு நிற நாய்கள் வடிவத்தில், பூனை, கழுதை மற்றும் ஒட்டகம் வடிவத்திலும் (அல்லது அவற்றினுள் புகுந்து) வெளிவரும். மேலும் இவை பாம்பு வடிவத்திலும் வரக்கூடியவை. பொதுவாக பாம்பு வடிவத்தில் வரக்கூடிய 'ஜின்' கள் நன்மைகள் மட்டுமே செய்யக்கூடியவை. ஆகவே தான் இஸ்லாம் மதத்தில் பாம்புகளை கொல்வது தடை செய்யப்பட்ட ஒன்றாகும். 

அஷ்ட கர்மங்கள் மற்றும் தாந்த்ரீக முறைகள் போலவே இதன் மூலமும் பல் வேறு அற்புதங்களை நம் வாழ்வில் ஏற்படுத்தி கொள்ள முடியும்- தக்க துணையிருந்தால். 

இவைகளின் அமானுஷ்ய, அற்புத தன்மைகள் வகைகள் போன்றவை அடுத்த பதிவில் பார்க்கலாம். 

Post a Comment

Previous Post Next Post

Get in touch!