ஐம்புலன்களால் அனைத்தையும் சாதிக்கும் முறை என பஞ்ச பூத யந்திரங்களை பற்றிய ஒரு கட்டுரை முன்பே கொடுத்திருந்தோம். தொடர் ஹோட்டல்கள் வைத்து நடத்தி கொண்டிருந்த ஒரு நபர் ஆலோசனைக்கு வந்திருந்தார். நல்ல நிலையில் ஓடி கொண்டிருந்த அவரின் ஹோட்டல்கள் மூன்றுக்கும் திடீரென 5 மாதங்களாய் ஒரே சறுக்கல். ஒரு சிலரிடம் சென்று பார்த்ததில் அவரின் தொழில் சறுக்க செய்வினை செய்யப்பட்டிருப்பதாக கூறியுள்ளனர். ஒரு சில பரிகாரமும் செய்து பார்த்தும் பலனில்லை. அந்த ஹோட்டலின் மேலாளர் மூலம் எம்மிடம் வந்துள்ளதை தெரிவித்தார். அவரின் விடயங்களை சோதித்து பார்த்ததில், எதிர் தொழில் போட்டியாளர்கள், அவரின் தொழில் முடக்கத்திற்கு 'லட்சுமி கட்டு' கேரளாவில் உள்ள தேர்ந்த நபர்கள் மூலம் செய்திருப்பதை அறிய முடிந்தது. முக்கியமாக, இது போன்று செய்வினை, திருஷ்டி அல்லது சூன்யம் போன்றவைகளுக்கு ஆட்பட்டிருந்தால், எது எந்த விதத்தில் செய்யப்பட்டு உள்ளது என்பதையும் அதன் வீரிய தன்மை பற்றியும் ஆராய்வது முக்கியம். பின்பே அதற்கான பரிகார விடயங்களை கொடுக்க வேண்டும். அவருக்கு மேற்கண்ட "லட்சுமி கட்டு" விலக பஞ்ச பூத எந்திரங்கள் கொடுக்கப்பட்டு அதை கடைபிடிக்கும் முறையும் கூறப்பட்டது. மகிழ்ச்சியுடன் வாங்கி சென்ற அவர், ஒரு மாதம் கழித்து, மீண்டும் வாடிய முகத்துடன் வந்தார். விசாரித்ததில், முன்னேற்றம் ஏதும் இல்லை என்றவரிடம், முறையாக அனைத்தையும் செய்தாரா என வினவியதில் , தன் கையோடு கொண்டு வந்த (நாம் சூடு செய்ய கொடுத்ததை) யந்திரத்தை காண்பித்தார். யந்திரம் தினசரி 10 நிமிடங்கள் சூட செய்ய கூறப்பட்டு இருந்தது. மனிதர், உடனடி முன்னேற்றம் வேண்டி, தினசரி சில மணி நேரங்கள் சூடு செய்து யந்திரத்தை கரியாக பொதிந்த நிலையில் காண்பித்தார். கோபம் கொண்ட நிலையில் கேட்கையில், " சீக்கிரம் முன்னேற்றம் தெரியுமேனு  தான் சுவாமி இப்படி செய்தேன்" என்கிறார். இது போன்ற பேராசைகள் தோல்வியில் தான் முடியும் என்பதை விளக்கி, வேறு எந்திரம் அவருக்காக செய்ய பட்டு கொடுக்கப்பட்டது. இது கிட்டத்தட்ட ஒரு வருடம் முன்பு நடந்த விஷயம். ஆறு மாதங்கள் கழித்து  ஒரு கிளை தொடங்கும் அழைப்பிதழுடன் காண வந்தார். சரியாக கடைபிடித்தால் மட்டுமே எந்த ஒரு விஷயமும் பலன் தரும். மேற்கண்ட பஞ்ச பூத சக்திகளை கொண்ட யந்திரங்கள் சரியாக ஏழு ஆண்டுகள் வரை பலனளிக்க வல்லவை. தொழில் விஷயம் மட்டுமின்றி அனைத்து வித துன்பங்களுக்கும் அதி விரைவில் பலன் தர வல்லவை இவை. நம் அதீத ஆசை அவற்றின் தன்மையை அழித்து விடும் படி செய்யக்கூடாது.

தவறான நபரை காதலித்து பெற்றோரை கதறடித்த மகன் ஒருவன் , மேற்கண்ட முறை மூலம் மனம் திருந்திய நிகழ்ச்சியை அடுத்த பதிவில் விளக்குகிறேன். 

Post a Comment

Previous Post Next Post

Get in touch!