ஒவ்வொருவருக்கும் உரிய அதிர்ஷ்ட தெய்வங்கள்ஒரு முறை பக்தியில் திளைத்த ஒருவர் ஆலோசனைக்கு வந்திருந்தார். மிகுந்த ஆன்மீக ஞானம் மற்றும் தினசரி பூஜைகள், ஜெபங்கள் செய்து வரும் அவர் ஓர் மீளாத்துன்பத்தில் இருந்தார். தனக்கு ஏன்  இந்த நிலை என மனம் வருந்தினார். அவரின் நிலையினை சோதித்ததில், அவர் வழிபட்டு வரும் தேவதை, தெய்வத்தின் ஆற்றல் அவருக்கு உதவும் நிலையில் இல்லை என தெரிந்தது. ஒவ்வொருவரும் தனக்கு இஷ்டமான  தெய்வங்களை வழிபட்டு, ஆராதனை செய்து வந்தாலும், முக்கியமாக அவருக்கு உதவும் நிலையில் உள்ள தெய்வம் அல்லது தேவதை என உண்டு. அடுத்ததாக அவருக்கு வாழ் நாள் முழுதும் அதிர்ஷ்டம் மற்றும் பண வரவை கொடுக்கும் தெய்வம். மூன்றாவதாக, தற்சமயம் பிரச்சனைகள் நீங்க வழிபட வேண்டிய தெய்வம். இந்த மூன்றையும் முறைப்படி கடைபிடிக்க, நம் தொல்லைகளில் இருந்து நிரந்தரமாக விடுபடலாம். இது தெரியாமல் நாம் செய்து வரும் வழிபாடுகள், நமக்கு மன அமைதியையும், ஞானத்தையும் தருவது உறுதி என்றாலும் பிரச்சனைகளில் இருந்து விடுபடுவது கடினமே. மேலும் பரிகார வகைகளில் பல உண்டு, உதாரணத்திற்கு சில முக்கிய மூலிகைகள், இலைகள் அல்லது பொடிகளை போட்டு தினசரி நீராடிவருவதும் பலம் வாய்ந்த ஓர் பரிகாரமாகும். இவைகள் அனைத்தும் நம் கிரந்தங்களில் உள்ளவை. மேற்கண்டவற்றை அவருக்கு விளக்கி கூறி, அவருக்கு உரிய முக்கிய மூன்று தெய்வங்களை வழிபட கூறினோம். மேலும், தற்சமயம் வழிபட்டு வரும் தெய்வ ஆராதனைகளும் தொடருமாறு கூறப்பட்டது, மிக பெரும் துன்பத்தில் இருந்த அவர் மேற்கண்ட வழிபாடு முறையை தொடங்கியதும், சிறிது சிறிதாக, சூரியனை கண்ட
பனி போல் பிரச்சனைகளில் இருந்து வெளிவந்தார்.

(குறிப்பு : இந்த கட்டுரை குலதெய்வத்தை பற்றியது அல்ல-குலதெய்வ வழிபாடு மிக அவசியம். ) 

Post a comment

0 Comments