ராக் சால்ட் விளக்குகளின் வீட்டு குறிப்புகள்ராக் சால்ட் விளக்குகளின் அற்புதங்களை பற்றி ஏற்கனவே கூறியிருந்தோம். இப்போது அவை வீட்டில் எந்த இடங்களில் இருப்பின் என்னென்ன பயன்கள் என்பதை பாப்போம்.

சமையலறை

வீட்டின் மிக முக்கியமான இடம். அனைவரின் உடல் நலம் மற்றும் மன நலனுக்கு பொறுப்புள்ள இடம். இவ்விடத்தில் விளக்கை வைப்பின், செய்யும் உணவுகளின் நச்சு தன்மைகளை அடியோடு நீக்கும். மேலும், கடைகளில் வாங்கும் பொருட்களில் படிந்துள்ள எதிர் மறை ஆற்றல்களை நீக்கி நேர்மறை சக்திகளை உண்டாக்கும்.

ஹால்

இவ்விடத்தில் விளக்குகள் இருப்பின், வெளியில் இருந்து வரும் அனைத்து எதிர்

மறை சக்திகளையும் போக்கும். மேலும், வெளியில் இருந்து உள்ளே வரும் நபர்களால் உண்டாகும் எதிர் மறை சக்திகள், துஷ்ட எண்ணங்களால் அவ்விடத்தில் உருவாகும் எதிர் மறை ஆற்றல்கள், திருஷ்டி போன்றவை நெருங்க விடாது.

குழந்தைகளின் படுக்கையறை மற்றும் படிப்பறை

சிறு குழந்தைகளாயின் அவைகளுக்கு ஏற்படும் படுக்கையில் சிறுநீர் கழிக்கும் பழக்கம் நிற்கும். மேலும் திடீரென அலறும் குழந்தைகள், கனவு கண்டு அலறும் அல்லது பயப்படும், இரவெல்லாம் காரணமின்றி அழும் விஷயங்கள் மட்டுப்படும். படிக்கும் படிப்பானது வெறும் ஞாபகமாக இல்லாமல் ஞானமாக மாறும். படிப்பில் ஆர்வத்தை தூண்டும்.

பெரியவர்களின் படுக்கையறை

தம்பதிகள் அவரவர் வெளியில் சென்று ஏற்படும் ஏமாற்றங்கள், தோல்விகள் போன்றவையினால் ஏற்படும் சலசலப்பு, ஒருவர் மேல் ஒருவருக்கு இனம் தெரியாத வெறுப்புணர்ச்சி நீங்கும். அந்நியோன்னியத்தை உருவாக்கும் சக்தி இவைகளுக்கு உண்டு. வயது முதிந்தவர்களின் மூச்சு கோளாறுகளை சரி செய்யும்.வயதான காரணத்தால் ஏற்படும் மன அழற்சியை அடியோடு நீக்கும்.

வேலை செய்யும் இடம் / தொழில் புரியும் இடம்

மேற்கண்ட இடங்களில் மேஜை மீது வைத்திருக்க நம் உள்மன ஆற்றல்கள் அதீதமாய் வெளிப்பட ஆரம்பிக்கும். வேலையில், தொழிலில் நாட்டம் மிகும்.சக ஊழியர்களால் ஏற்படும் மன உளைச்சல்கள் நிற்கும்.

இவற்றை கொண்டு நம் வாழ்வில் மேலும் எவ்வித மாயாஜாலங்களை செய்யலாம் என்பதை வேறொரு பதிவில் விளக்குகிறேன்.

Post a comment

0 Comments