இரத்தின கற்களின் வீரியங்கள்பொதுவாக ரத்தினங்கள் கிரக கோளாறுகளை கட்டுப்படுத்தும் மற்றும் கிரகங்களினால் ஏற்படும் துன்பத்தை நீக்கியமைக்கும் என்பது புராதன கிரந்தங்களின் கூற்றாகும். பொதுவாக பல இடங்களில் பல முறைகளையும் பார்த்து 'உடனடி' முன்னேற்றம் காண முடியாதவர்கள் இது போன்ற இரத்தின கற்களின் உதவியை நாடி விரைவாக ஏற்றம் பெறலாம். எம்மை பொறுத்தவரை விலை குறைவான 'செமி பிரீசியஸ்' என வகைப்படும் கற்களை மட்டுமே பரிந்துரை செய்து வருகிறோம். காரணம் 'பிரீசியஸ்' வகைப்படும் கற்கள் 12 உள்ளது. இவைகளை மிக ஆராய்ந்து அணிய வேண்டும். இல்லையேல்,அணிந்தவரை பாடாய் படுத்த ஆரம்பித்து விடும். அணிந்தவருக்கு நல்லவை மட்டுமே அளிக்க கூடிய வகை ரத்தினக்கற்கள் உண்டு. அவை மட்டுமே நம் பரிந்துரை. இனி வரும் நாட்களில் அவற்றின் தன்மைகளை உயர்வுகளை ஒவ்வொன்றாக கூற இருக்கிறோம்.

சிட்ரீன்

தடைகள் மற்றும் சுப காரிய  தடைகள், பண வரவு பிரச்சனைகளை நீக்கி நலம் தரக்கூடியது இவ்வகை கற்கள். மேலும், பயம் மற்றும் படபடப்பை
நீக்கும் சக்தி இவைகளுக்கு உண்டு. மிக முக்கியமாக இவை அதீத பண வரவை ஏற்படுத்த கூடியவையாகும். நம் உடல் சக்கரங்களில் 'மணிப்பூரத்தை' சம நிலைப்படுத்தும் சக்தி இக்கற்களுக்கு உண்டு. குறைந்தது 10 காரட் அளவில் அணிந்தால் உடனடி பலனை எதிர்பார்க்கலாம்.  முடிந்தவர்கள் தங்கத்திலோ அல்லது ஐம்பொன்னிலோ அணியலாம். வலது கை மோதிர விரலில் அணிவது சிறப்பு தரும். 

Post a comment

0 Comments