Wednesday, 16 March 2016

இழந்த செல்வம், சரிந்த புகழ் , கை நழுவிய சொத்து, மறைந்த கௌரவம்- அனைத்தையும் திரும்ப பெற

வாராஹி அம்மனுக்கு  8 சனிக்கிழமைகள் காலை 6-7 அல்லது இரவு 8-9 மணியளவில் மண் அகலில் கரு நீல துணியில் சிறிது வெண் கடுகை இட்டு முடிந்து அதில் நல்லெண்ணெய் விட்டு தீபமிட்டு மனமார வேண்டுதல் வைத்தால் மேற்கண்ட அனைத்தையும் திரும்ப பெறலாம். கோவிலுக்கு செல்ல முடியாதோர் வீட்டிலேயே அம்மனின் படத்தை வைத்து தனி பரிகார தீபமாக ஏற்றி வரலாம்

Tuesday, 15 March 2016

கல்வியில் தேர்வில் வெற்றி பெற(1) படிக்கும் அறையை / இடத்தை கண்டிப்பாக சுத்தமான முறையில் எபோதும் வைத்திருக்க அறிவுறுத்தவும். 

(2) குரங்குகளுக்கு வெல்ல கட்டி கொடுப்பது, படிக்கும் முன் அஞ்சநேயரை வழிபட்டு பின்பு படிப்பது அல்லது பரீட்சைக்கு செல்வது நல்ல பலன் தரும்

(3) குரங்குகளுக்கு உணவிடமுடியாதோர், பறவைகளுக்கு உணவிட்டு வரலாம். 

(4) அடிக்கடி மறதி ஏற்படும் மாணவர்கள் மற்றும் தோல்வி பயத்தில் எப்போதும் உள்ளோருக்கு, பாக்கெட்டில் சிறிய கற்பூர கட்டி மற்றும் படிகார  கட்டி வைத்து வர எதிர் மறை பயங்கள் நீங்கி, வெற்றி கிட்டும். பெண் குழந்தைகளுக்கு இவை இரண்டையும் கண் மூடி கையில் 10 நிமிடம் வைத்திருக்க கூறி பின்பு பர்சில் அல்லது பையில் வைத்திருக்க சொல்லவும். 

(5) குழந்தைகள் ஸ்கூல் அல்லது காலேஜ் செல்லும் முன் சிறிய கிண்ணத்தில் தயிரில் சிறிது சக்கரை கொண்டு கலக்கி, அதை உண்டு விட்டு செல்ல செய்யவும். 

(6) கீழ்காணும் முத்திரையில் உங்கள் குழந்தைகளை தினசரி 23 நிமிடங்கள் இருக்க செய்வீர்களேயானால் நூறு சதவீதம் தேர்வில் வெற்றி கிட்டும். 

மிரர் தெரபி

நாம் கொடுத்து வரும் வசிய வார்த்தைகள் பயிற்சி மற்றும் மணி தெரபி பயிற்சியில் உள்ள சில எளிதான அதே சமயம் மிக வீரியமுள்ள சில முறைகளை அடுத்து வரும் ஏழு நாட்களுக்கு உங்களுக்கு அளிக்க இருகின்றோம். இவை நம்பிக்கையுடன் தொடர்ந்து கடைபிடிக்கப்பட்டு வர, நிதி சார்ந்த பல பிரச்சனைகள் நிரந்தர தீர்வை தருவது உறுதி.
* தினசரி அதிகாலை எழந்தவுடன் பல் துலக்கும் முன் கண்ணாடியை கண் திறந்து உங்கள் பிம்பத்தை நோக்கியவாறு கீழ்க்கண்ட வசிய மந்திரத்தை 33 முறை கூறி வரவும். அன்றாடம் பல அற்புதங்கள் நிகழ்வதை கண்கூடாக காணலாம்.
" அநேகம் தனம் தான்யம் சௌஜன்யம் சித்திக்கும்"

நீண்ட நாள் துன்பங்கள் தடைகள் நீங்க


தினசரி செம்பு பாத்திரத்தில் குளித்து வர நீண்ட நாள் துன்பங்கள், தடைகள் ஒரு முடிவுக்கு வரும், மேலும் கங்கையில் குளித்த புண்ணியத்தை தரக்கூடியது செம்பு ஜல ஸ்நானம். இது சிவபெருமான் ராவணனுக்கு உபதேசித்த ஒன்றாகும்.

Sunday, 13 March 2016

நினைத்த பணம் வந்து சேர அமானுஷ்ய பரிகாரம்காலையில் பல் துலக்கியதும் கிழக்கு முகமாக அமர்ந்து சிறிய வெள்ளை தாளில் வெள்ளை  நிற பேனா கொண்டு (மூடி வேறு கலரில் இருக்கலாம்)    ' ஏராளம் எண்ணிக்கை 3300' என 33 முறை மனதினுள் கூறிக்கொண்டே எழுதவும், பின் அதை மடித்து பர்சில் வைத்து கொள்ளவும். பண வரவை திடீர் என ஏற்படுத்தும் அற்புத முறை இது. நேரம் கிடைக்கும் பொழுதெல்லாம் அதை எடுத்து பார்த்து 33 முறை கூறி வரலாம் (அதிகபட்சம் 6 முறை). மறு நாள் அந்த தாளை அப்புறப்படுத்தி  விட்டு, வேறு புதிதாக எழுதி கொள்ளவும். தினசரி தேவைகள் உள்ள வரை தொடர்ந்து செய்து வரலாம்-ஒவ்வொரு நாளும் புதிதாக !!