Wednesday, 30 March 2016

அனுதினமும் வெற்றியடைய தாந்த்ரீக மூச்சு பயிற்சிகாலை கண்விழித்தவுடன் படுக்கையில் இருந்தபடியே சுவாசம் எந்த நாசி வழியே வருகிறது என்று பார்க்கவும். உதாரணமாய், வலது நாசி வழியே வரின், வலது கையால் முகம் முழுதும் நன்றாக தேய்த்து கொள்ளவும். பின்பு வலது காலை எடுத்து வைத்து படுக்கையில் இருந்து எழவும். இப்படியே இடது நாசி வழியே வரின், இடது கையால் தேய்த்து கொண்டு, இடது காலை எடுத்து வைத்து எழவும். சில சமயம் இரு நாசிகளிலும் வரின், இரண்டு கைகளாலும் முகத்தை தேய்த்து கொண்டு, இரு கால்களையும் கீழே தரையில் படும் படி வைத்து எழவும். இப்படி செய்யும் ஒவ்வொரு நாளும் மிகுந்த மன அமைதி, கூரிய புத்தி கூர்மை கொண்டு செயல் படும் நாளாக அமையும். நம் 'தாந்த்ரீக மூச்சு' பயிற்சி'யில் வழங்கப்படும் மிக முக்கியமான முறை இது.  

Monday, 28 March 2016

தடைப்பட்ட பண வரவு பிரச்சனை தீரகோள்களில் செவ்வாயின் ஆதிக்கத்தை பெற்ற இஞ்சியை (காய்ந்தது) நன்கு பொடி செய்து அதை சிறு சிகப்பு காகிதத்தில் வைத்து மடித்து பாக்கெட் / பர்சில் வைத்து செல்ல மேற்சொன்ன பிரச்சனை
தீரும். வீட்டில் / வியாபார இடத்தில் பணம் வைக்கும் இடத்தில் சிறு துண்டுகளை போட்டு வைத்து அவ்வப்போது மாற்றி வரலாம். இதை ஆரம்பிக்க உகந்த நாள் : செவ்வாய் ஆகும். மதியம் 1:15 மணி முதல் 2 மணிக்குள் செய்யலாம். தெற்கு திசையில் நின்றவாறு செய்ய பலன் கூடும். 

Sunday, 27 March 2016

தொடர்ந்து வரும் காரிய தடைகள் மற்றும் எதிலும் தோல்வி நிலை மறையசூரியனின் ஆதிக்க சக்தி கொண்ட குங்குமப்பூவை சிறிது நீரில் குழைத்து தினசரி நெற்றியில் திலகமாக இட்டு செல்ல, மேற்கண்ட நிலை மாறி அனைத்திலும் வெற்றி உண்டாகும்

சிலிர்க்க வைக்கும் ஜின் மாந்த்ரீகம் 2ஜின்களுக்கு தன் விருப்பப்படி எந்த மத சம்பிரதாயங்களை பின்பற்றும் சுதந்திரம் உண்டு. இவைகள் தன் இஷ்டப்படி வாழவும் சுதந்திரம் உண்டு ஜின் லோகத்தில். 

முக்கியமான ஐந்து ஜின் வகைகள் : 
ஈப் ப்ரீட் :

சமூகத்தில் மனிதர்களோடு இணைந்து வாழும் இவைகள் மிகுந்த அறிவை கொண்டவை-குகைகள் போன்றவற்றிலும் வாழும். பைசாச மற்றும் நற் குணங்கள் என இரண்டையும் கொண்டவை இவை. தன்னை வைத்து வேலை வாங்குவோரையே சுலபமாக ஏமாற்றி தீங்கு செய்யும் வல்லமை பெற்றவை. மனிதர்களை மனித குணங்களை அப்பட்டமாய் அறிந்தவை. தன்னை ஏவுபவரின் வேலைகளை சுலபத்தில் முடித்து கொடுக்க கூடியவை. கிங் சாலமன் இவ்வித ஜின்களை தான் பயன்படுத்தினார் என கோனில் குறிப்பும் உண்டு.

மாரிட்

அலாவுதீன் தன் தேவைகளுக்கு உபயோகித்த வகை இந்த ஜின் தான். நீர் மற்றும் நீர் நிலைகளில் உள்ள இவைகளை அதே இடங்களில் வைத்து தேவைகளை கூற, உடனடியாக நம் காரியங்கள் இவற்றால் நிறைவேற்றப்படும். 

க்ஹௌல் 

பைசாச தன்மை கொண்ட இவைகள் மிகுந்த துன்பத்தை ஏற்படுத்த வல்லவை. இவைகளை தான் செய்வினை மற்றும் மாரணம் ஏற்படுத்த உபயோகிப்பர். ஆனால்  இவைகளை கட்டுக்குள் வைத்திருப்பது மிக மிக சிரமம். சுடு மற்றும் இடுகாடுகளில் வாழும் இவை மிகுந்த ஆபத்தை ஏற்படுத்த கூடியவை. கை தேர்ந்த மாந்த்ரீகர்கள் கூட இவற்றை அழைக்க தயங்குவர். 

வேட்டல 

மிகுந்த சுவாரசியம் மிக்க விஷயங்களை செய்ய கூடிய இவைகள் போலவே 'யோகினி தாந்த்ரீகத்திலும் சில உண்டு. பெயருக்கு ஏற்றார் போல் வேதாள குணம் மிக்க இவை நோய் உள்ளோர் மற்றும் உடல் பலவீனர் ஆகியோரிடும் புகுந்து அட்டகாசம் செய்யும்.

சீலா 

இவைகளிடம் தாரளமாக பாதுகாப்பாக நாம் உணர முடியும். மனிதர்களின் தேவைகளை உணர்ந்து முடித்து கொடுக்கும் வல்லமை பெற்றவை இவை. கூப்பிட்டவுடன் வரக்கூடியவை எனலாம். பெண் ரூபங்களில் வரும் திறமை பெற்றவை. அடிக்கடி உருவம் மாறுவதில் தேர்ந்தவை இந்த வகை ஜின் கள். 

அடுத்த பதிவில் முடிவுறும்..