Saturday, 30 April 2016

பண பிரச்சனைகள் முடிவிற்கு வர..நாம் வழங்கி வரும் தன ஆகர்ஷன ஊதுவத்தியின் சிறப்பு அனைவரும் அறிந்ததே. சுக்கிரன் மற்றும் குருவின் ஆகர்ஷன மூலிகைகளை கொண்டு தயார் செய்யப்பட்ட இந்த பத்தியை வரம் ஒரு பாக்கெட் முழுதும் வீதம் 6 வாரங்கள் தொடர்ந்து மகாலட்சுமி தாயார் சந்நிதியில் வெள்ளியன்று காலை 6:15-7 க்குள் ஏற்றி வர, தொடர்ந்து இருந்து வரும் பண தடைகள், எவ்வளவு முயற்சித்தும் வராத பணம் போன்ற தன ரீதியான பிரச்சனைகள் தீரும். பலருக்கு நாம் கொடுத்து, அனுபவ ரீதியாக கண்டு வரும் பரிகாரம் இது.
கிரக கோளாறுகளினால் வரும் துன்பங்கள் மற்றும் காரிய தடைகள் விலக 9 வாரங்கள் நவக்ரஹ ஊதுவத்தியை சனியன்று மேற் கூறிய வேளையில், நவக்ரஹ சன்னதியில் ஏற்றி வர, வாழ்வில் ஏற்றம் உண்டாகும்.


தேவைப்படுவோர் +919840130156 அணுகவும் 

Friday, 29 April 2016

செல்லும் பணம் திரும்பி வர சூட்சும பரிகாரம்


நாம் அன்றாடம் செலவழிக்கும் பணமானது, நம்மிடமே பன்மடங்காக திரும்பி வர நாம் கொடுத்து வரும் 'மணி தெரபி' யில் இருந்து ஒரு பயிற்சி.அன்றாடம் நாம் பிறருக்கு பணத்தை கொடுக்கும் பொழுது, அதாவது செலவழிக்கும் பொழுது பெரும்பாலும் பணத்தை அப்படியே எடுத்து கொடுத்து விடுகிறோம். மாறாக, பணத்தை நன்கு கைகளால் தடவி, உணர்ந்து பின்பு "சென்று வா-திரண்டு வா" என்ற மந்திரத்தை 3 முறை மனதினுள்கூறியவாறே பணத்தை கொடுக்க, கொடுக்கும் பணம், பன் மடங்காக நம்மிடம் திரும்பும் என்பது உறுதி. முடிந்தால் பணத்தை நெற்றி பொட்டருகே மடித்து வைத்து மந்திரம் கூறியும் கொடுக்கலாம்

வீட்டில் சந்தோஷம் நிலைக்க, அனைத்து செல்வமும் பெற


ஒரு வெள்ளை ரிப்பனில் கீழ்க்கண்ட மந்திரத்தை சிகப்பு நிற இங்க் பேனாவில் எழுதி வீட்டில் காற்றில் ஆடும் படி தொங்கவிட்டு, தினசரி அதை பார்த்தபடி அதே மந்திரத்தை வீட்டில் உள்ள அனைவரும், அல்லது விருப்பமுள்ளோர் 6 முறை கூறி வர, வீட்டில் கலகலப்பான சூழல் ஏற்படும்-அனைத்து நலன்களும் வந்து சேரும். தனிவீடுகள் உள்ளோர், மரம் அல்லது வளர்ந்த செடி இருப்பின் அதிலும் தொங்க விடலாம்.
மந்திரம் : "சுகம் சௌபாக்கியம் சௌஜன்யம் அநேகம்"

காதலில் வெற்றி பெற மற்றும் சுகமான தாம்பத்திய வாழ்க்கைக்கு


வலது கை கட்டை விரலில் வெள்ளியிலான எந்த உருவங்களும் பதிக்காத வெள்ளி மோதிரத்தை மேற்கண்ட தேவைகள் உள்ள ஆண் பெண் அணிந்து வர, நியாயமான காதலில் வெற்றி மற்றும் கணவன் மனைவி இடையே அன்னியோனியம் ஏற்படும்- சுகமான திருமண வாழ்வு தரும்

கவலைகள் மறைய, துன்பங்கள் தீர
ஒரு சனிக்கிழமை அன்று வெள்ளை தாள் ஒன்றில் கருப்பு நிற இங்க் கொண்டு, உங்களுக்கு உள்ள உடனடி கஷ்டத்தை, குறையை எழுதவும். பின்பு கருப்பசாமியை நன்றாக மனதில் வேண்டி கொண்டு, அந்த பேப்பரை சுருட்டி அதில் கருப்பு நிற நூலால் லேசாக கட்டி வைக்கவும். பின்பு கருப்பு நிற மெழுகுவர்த்தி ஒன்றை ஏற்றி, மனதினுள் குறைகள் அனைத்தும் அகல வேண்டும் என கருப்பசாமியை நினைத்து வேண்டுதல் வைத்து, அதை மெழுகுவர்த்தி நெருப்பில் காட்டி ஏறிய விடவும். எரிந்து முடிந்த பின் அனைத்தையும் அகற்றி விடலாம். சிறிய அளவில் உள்ள குறைகள் ஒரே வாரத்தில் நீங்குவதை அனுபவத்தில் காணலாம். பெரிய அளவில் உள்ள பிரச்சனைகளுக்கு 8 வாரங்கள் தொடர்ந்து செய்யவும். நேரம், திசை போன்றவை பார்க்க தேவை இல்லை. பலர் செய்து வெற்றி கண்ட சூட்சுமம் நிறைந்த பரிகாரம் இது.

அன்றாடம் பண வரவு பெறகாலை எழுந்து பல் துலக்கியதும் வெறும் வயிற்றில், ஒரு டம்பளர் நீரை கையில் எடுத்து கொண்டு வட கிழக்கு திசை நோக்கி, நாவை வாயின் மேல் புறம் படுமாறு மடக்கி வைத்து கொண்டு வாய் மூடி, மனதினுள்       "ஏராளம் தனம் தான்யம் தாராளம் தாராளம்"  என்ற மந்திரத்தை 6 முறை ஜெபித்து பின் கண்கள் மூடிய நிலையில் வாய் திறந்து நீரில் ஊதவும். பின் அந்த நீரை குடித்து விடவும்.
நாள் முழுதும் எதிர்பார்த்த, எதிர்பாராத பணவரவு, நற்செய்திகள் மற்றும் உயர்வுகள் கொடுக்கும் சக்தி வாய்ந்த முறை இது. அனுதினமும் தேவைகள் உள்ள வரை செய்து வரலாம்.