இடம் : சென்னை தி.நகர் சங்கர மடம்
 நேரம் : மாலை 4:30 முதல்

முக்கிய குறிப்பு : அமாவாசை தினத்தில் தர்ப்பணம் செய்துள்ளோர் / திதி கொடுத்தோர் இரவு அன்னம் உண்ணலாகாது என்பதனை மனதிற் கொண்டு, ஹோமம் முடிந்ததும் அன்னதானத்திற்கு  சிற்றுண்டி ஏற்பாடு செய்யப்பட்டு உள்ளது.


நடக்கவிருக்கும் சண்டி ஹோமத்திற்கு அரசு சமித்து சேர்க்க பல புதிய வாய்ப்புக்கள் தேடி வரும். புரசு சமித்து எவ்வளவு அதிகமாக சேர்கிறோமோ அந்த அளவு, லட்சுமி தேவியின் அருள் தேடி வரும். புரசானது லக்ஷ்மி ஹோமத்திற்கு சேர்க்கப்படும் லக்ஷ்மிக்கு உகந்த ஒன்றாகும்.
மேலும் மஞ்சள் பொடி, குங்குமம், பேரிச்சை,கற்கண்டு,தேங்காய்,கொய்யாப்பழம்,நாரத்தை,ஆரஞ்சுப்பழம்,வில்வப்பழம்,தேங்காய், கற்பூரம்,எலுமிச்சை, செவ்வாழைப்பழம்,மாதுளை,தர்பூசணி,கரும்பு துண்டு என ஒவ்வொன்றிற்கும் ஒவ்வொரு பலன் உண்டு.  விருப்பமுள்ளோர் அனைத்திலும் சிறு அளவு வாங்கி ஹோமத்திற்கு அளிக்கலாம். மேலும், ஹோமம் நடக்கும் தினமானது மாசி அமாவாசை திதியும் அவிட்ட நக்ஷத்திரமும் சேர்வதால், அன்றைய தினத்தில் அன்னதானத்திற்கு பொறுப்பேற்று  உபயம் செய்வதால்  தேவியின் அருள் மட்டுமல்லாது, முன்னோர்களின் அருள், பித்ரு தோஷ நிவர்த்தி, பிரேத சாப நிவர்த்தி கிடைப்பது உறுதி.அவிட்ட நக்ஷத்ரம் பெண் நக்ஷத்ரமாகும். இதன் தேவதை அஷ்டவசுக்குள் எனப்படுவோர். இந்த நாளில் நடக்கும் சண்டி ஹோமத்தில் கலந்து கொண்டு வழிபாடு செய்து தேவியை உபாஸிக்க நிச்சயம் பல புண்ணியங்களை சேர்த்து வைத்திருக்க வேண்டும் என்பது நிதர்சனம். அடுத்த பதிவில், ஒவ்வொரு சண்டி அத்தியாயத்திற்கும் எவ்வித பொருட்களை சேர்த்தால் எந்த கடவுளின் ஆசி பரிபூரணமாய் கிட்டும் என்பது விளக்கப்படும்.

அன்னதான உபயம் செய்ய விருப்பம் உள்ளோர் அழைக்க :

+919840130156 / +918754402857 

Post a Comment

Previous Post Next Post

Get in touch!