பூ, பல வகை பழங்கள்
சகல காரியங்களும் சித்தி பெற கொப்பரை,
எதிர்ப்புகள் அகல பூசணி, தாமரை
பதவி உயர்வு பெற தேங்காய்
வசீகர சக்தி அதிகரிக்க மஞ்சள் கட்டை
கவலைகள் தீர எலுமிச்சை
வாக்கு பலிதம் பெற மாதுளை
தன லாபம் செழிக்க தேன் நெய் மற்றும் கரும்பு துண்டுகள் எடுத்து வரலாம்.

ஒவ்வொரு அத்யாயத்திற்குமான பலன்கள் 

சண்டி ஹோமத்தின் முதல் அத்தியாயத்திற்கு விளாம்பழம் சேர்க்க, சாட்சாத் மஹாகாளியின் அருள் பரிபூரணமாய் கிட்டும்.

மஹாலக்ஷ்மியின் அருள் கிட்ட இரண்டாம் அத்தியாயத்திற்கு தேங்காய் சேர்க்கலாம்.

இலுப்பைப்பூ மற்றும் தேன் மூன்றாம் அத்தியாயத்தில் சேர்க்க மஹாதேவியின் அருள் கிட்டும்.

ராகு திசை மற்றும் இருப்பினால் துன்பத்தில் உள்ளோர், நான்காம் அத்தியாயத்தில் பாக்கு பழம் சேர்க்க, ஜெயதுர்க்கையின் அருள் பரிபூரணமாய் கிட்டும்.

பிள்ளைகள் கல்வியில் தேர்ச்சி பெற ஐந்தாம் அத்தியாயத்தில் கொய்யாப்பழம் சேர்க்க, மஹாசரஸ்வதின் அருள் கிட்டி, தேர்ச்சி பெறுவர்.

ஆரஞ்சு மற்றும் நாரத்தை பழங்களை ஆறாம் அத்தியாயத்தில் சேர்க்க பத்மாவதி தேவியின் அருள் கிட்டி நல்ல  குடும்ப  அமைதி ஏற்படும்.

சண்டமுண்ட வதம் செய்யும் ஏழாம் அத்தியாயத்தில் பூசணி துண்டு சேர்ப்பதால் சாமுண்டிமாதங்கியின் பரிபூர்ண அருள் சேர்ந்து எதிரிகள் அழிவர், அரச சம்பத்து கிட்டும்.

எட்டாம் அத்தியாயத்தில் கரும்புத்துண்டு சேர்ப்பதால், பவானிசப்தமாதாவின் அருள் ஏற்படும். வாழ்க்கை கரும்பு போல் இனிக்கும்.

அர்தாம்பிகையின்  அருள் சேர்ந்து, தடம் தெரியாது போய் கொண்டிருக்கும் வாழ்க்கை, பொருள் நிறைந்ததாக வேண்டினால் ஒன்பதாம் அத்தியாயத்தில் பூசணி மற்றும் கரும்பு சேர்க்க வேண்டும்.

காமேஸ்வரியின் அருள் கிட்டி, வசீகரராய் மாற பத்தாம் அத்தியாயத்தில் நாரத்தை பழம் சேர்க்கலாம்.

புவனேஸ்வரி தேவியின் அருள் கிட்டி, தாம்பத்ய வாழ்வு மணமும்,தனமும் நிறைந்திருக்க பதினொன்றாம் அத்தியாயத்தில் மாதுளை பழம் சேர்க்கவேண்டும்.

பன்னிரெண்டாம் அத்யாயத்தில் வில்வப்பழம் சேர்ப்பதால், அக்னிதுர்க்கையின் அருள் கிட்டி, நம்மை அசைக்க முடியாத சக்திகொண்டவராய் மாற்றும்.

சிவபெருமான் மற்றும் சண்டி தேவியின் அருள் பரிபூரணமாய் கிட்ட கடைசி பதிமூன்றாம் அத்தியாயத்தில் செவ்வாழை பழம் சேர்த்து வழிபடவேண்டும்.Post a Comment

Previous Post Next Post

Get in touch!