யக்ஷணி மற்றும் யக்ஷர்களை பற்றி அன்பர்கள் கேள்விகளும் பதில்களும்-பாகம் இரண்டு

:

கேள்வி: யக்ஷ யக்ஷினிகள் நேரில் வருவார்களா? அவர்களை உணர முடியுமா? 

பதில்: யக்ஷரான குபேரரை வழிபட்டு நாம் எப்படி பொருளாதார நிலையில் முன்னேற்றம் பெறுகிறோம் அல்லவா ? அது போல் தான், யக்ஷினிகள் அல்லது யக்ஷர்கள் நேரில் வருவது என்பது மிக அதீத தீவிர உபாஸனைக்கு பின்பே நடக்கும். நாம் கொடுத்து வரும் அனைத்தும், சுலபமாக (லகு) அவர்களின் சூட்சும சக்திகளின் மூலம் நன்மை அடையும் முறைகளே. மேலும் நாம் இப்பொழுது இருப்பது சத்ய,த்ரேத,துவாபர யுகங்களை தாண்டி கலியுகத்தில் வாழ்ந்து கொண்டுள்ளோம். அவர்களை நேரில் சந்திக்கும் வண்ணம் தவ வலிமையும், தீர்க்கமனமும் நம்மிடையே இன்று உள்ளதா என்பதையும் யோசித்து தெளிவு பெற வேண்டுகிறேன். 

கேள்வி : ஏன் தனதா யக்ஷினி, வேறு யக்ஷினிகள் உபாசனை இல்லையா?

பதில்: நிச்சயம் உண்டு. இருப்பினும் எமது அனுபவத்தில், மேற்கண்ட யக்ஷினி உடனடியாக உபாசனையில் மயங்கி வேண்டுவதை அருள கூடியவர். மேலும், தம்மை உபாசிப்பவருக்கு நன்மைகள் மட்டுமே செய்ய கூடிய அற்புத பலன்களை அளிக்க கூடியவர். வேறு யக்ஷினி உபாசனைகளும் விரைவில் கொடுக்கப்படும். 

கேள்வி பதில்கள்  தொடரும்...

ஹரி ஓம் தத் சத்

தாந்த்ரீக ஸ்ரீ.வாமனன் சேஷாத்ரி
ருத்ர பரிஹார் ரக்‌ஷா சென்டர்
ஜோதிஷ தாந்த்ரீக தீர்வுகள்
9840130156 / 8754402857
www.yantramantratantra.com

Post a comment

0 Comments