அற்புதம் நல்கும் சனி திரயோதசி (பிரதோஷம்) 22.9.18இவ்வருடத்தில் கடைசி சனி பிரதோஷம் புரட்டாசி முதல் சனிக்கிழமையில் வருகின்றது. ஏழரை சனி, கண்டக சனி, அஷ்டம சனி நடப்பில் உள்ளோருக்கு இந்த நாள் ஒரு வரப்பிரசாதமாகும். சனீஸ்வரருக்கு மாலை சூரிய அஸ்தமனத்திற்கு பின் நல்லெண்ணெய் விளக்கேற்றி வழிபடுவது மிக பெரிய நன்மையை சேர்க்கும். இந்நாளில் காக்கை மற்றும் எருமைகளுக்கு, கால் இல்லாத முடவோருக்கு உணவிடுவதும் அதீத பலன் தரும். மழை காலம் நெருங்கி வருவதால், கருப்பு குடை, கருப்பு கம்பளி, கருப்பு செருப்பு போன்றவற்றை வசதிக்கு ஏற்றார் போல் கால்கள் இல்லாதோர், கண்கள் இல்லாதோருக்கு, அசுத்தம் நிறைந்த பகுதியில் வசிப்போருக்கு கொடுத்து உதவலாம். இந்நாளில் வீட்டு உபயோகத்திற்கு எண்ணெய் வாங்குவதையும், தோல் பொருட்கள் உபயோகம் மற்றும் அசைவம் அனைத்தையும் தவிர்த்தால் வாழ்வாங்கு வாழலாம். முக்கியமாக பேஷன் என்ற பெயரில் கிழிந்த உடைகளை அணிவோர், அதை இந்நாளில் தவிர்க்கவும். மேற்சொன்ன ஏழரை, கண்டக மற்றும் அஷ்டம சனி நடப்பில் உள்ளோர் மற்றும் சனி திசாபுத்தியில் இருப்போர் இந்நாளில் கருப்பு மற்றும் நீல நிறம் அணிவதை தவிர்த்தல் நலம் சேர்க்கும்.

ஹரி ஓம் தத் சத்

ஸ்ரீ.வாமனன் சேஷாத்ரி
ருத்ர பரிஹார் ரக்‌ஷா சென்டர்
ஜோதிஷ தாந்த்ரீக தீர்வுகள்
9840130156 / 8754402857
www.youtube.com/amanushyam

Post a comment

0 Comments