ஆடி மாதத்தில் செய்யப்படும் சில முக்கிய ஆன்மீக விஷயங்களுக்கு நிரந்தர நன்மையை பெற்றுத்தரும் குணம் உண்டு. அப்படிப்பட்டதில் வியாழக்கிழமை அன்று செய்ய வேண்டிய முக்கிய ஆன்மீக விஷயத்தை வீட்டில் செல்வம் சேர, வீட்டில் பணம் வர, வீட்டில் மஹாலக்ஷ்மி குடியேற, சொத்து சேர வீடியோவில் வழங்கியுள்ளார் தாந்த்ரீக ஜோதிட ஸ்ரீகுரு.வாமனன் சேஷாத்ரி. மஞ்சள் மிகுந்த வசீகர சக்தியை ஏற்படுத்தும் தன்மையை கொண்டதாகும். விநாயகரின் வடிவங்களில் ஹரித்ரா (மஞ்சள்) கணபதி வடிவும் ஒன்று. 32 கணபதி வடிவங்களில் ஹரித்ரா கணபதி அதீத வசீகர சக்தியை கொடுக்கும் கடவுளாகும்.பண வசியம், முக வசீகரம்,தேஜஸ், தன செல்வ வசியம் போன்ற வேண்டுபவரின் கோரிக்கைக்கு ஏற்ப அள்ளிக்கொடுப்பவர் ஹரித்ரா கணபதி ஆவார். செய்யப்படும் ஆன்மீக விஷயத்தில் கூறவேண்டிய மந்திரம் கொடுத்துள்ளோம். இதை ஆடி மாதத்தில் வியாழன் தொடங்க முடியாதவர்கள் வேறு மாதங்களில் வியாழன் குறிப்பாக வளர்பிறை வியாழன் தொடங்கி செய்து வருவது அனைத்து வித நலன்களையும் கொடுக்கும்.
ஹரித்ரே க்ருஹம் தனம் தான்யம் வசமானய ஸ்வாஹா
மேலும் அறிய : ஆடி வியாழன் பணம் வர இதை கரைச்சு விட தவறாதீங்க