மஹாலட்சுமி அருள் கிடைக்க சக்தி வாய்ந்த பீஜ மந்திரம்
மஹாலட்சுமி வீட்டிற்கு வர ஆடி வெள்ளிக்கிழமை இதை வரைஞ்சு வைங்க என்கிற யூ டியூப் வீடியோவில் சில சூட்சும முறைகள் கொடுத்துள்ளோம்.இதை பற்றி மேலும் அறிய இங்கே க்ளிக் செய்யவும். முழுமையாக பார்த்து பின்னர் செய்யவும்.முக்கிய குறிப்பு : கோலத்தில் எழுத வேண்டிய முறை "ஸ்ரீ" . ஒவ்வொரு வெள்ளிக்கிழமைகளில் இந்த லட்சுமி கால் கோலத்தை போடலாம்.
நீங்கள் கூற வேண்டிய பீஜம் : "ஸ்ரீம்"
கண்டிப்பாக கடைபிடிக்கவேண்டிய முறைகள் :
எளிதாக உள்ளதே என நினைத்து விட வேண்டாம்.வாழ்நாள் முழுதும் பணப்பிரச்சனைகளே இல்லாமல் போக செய்யும் சக்தி உடையது இந்த மந்திரம்.இதை வெள்ளியன்று ஆரம்பித்தால் அதிக பலன்கள் சேரும். இதை மனதினுள் மட்டுமே சொல்லி வர வேண்டும். குளித்து முடித்து சொல்லி வருவது பல விதத்தில் நன்மை தரும். தலை குளிக்க வேண்டிய அவசியம் கிடையாது எனினும் இந்த மந்திரத்தை கூறுவதென்றால் குளிக்கும் முன் தலையில் நீரை மும்முறை தெளித்து கொள்ளவும்.
சித்தி பெற வழிமுறைகள் :
1 லட்சம் முறை தினசரியாக (பெண்கள் குறிப்பிட்ட நாட்கள் தவிர்த்து தொடரலாம் என்ற விதிவிலக்கு உண்டு).பூஜை அறையில் நெய் விளக்கேற்றி தினசரி 10008 வீதம் 10 நாட்களில் முடிப்பது ஒரு விதம். 45 நாட்களில் முடிக்கும் வண்ணம் கணக்கிட்டு முடிப்பது இரண்டாம் விதம். தினசரி நிவேதனம் மற்றும் தூப தீபம் முக்கியம்.சித்தி செய்யும் நாட்களில் புலால் உண்பதை மட்டும் கண்டிப்பாக தவிர்க்கவும்.
Vamanan Seshadri Tips : ஆகஸ்ட் மாதம் 2021 கடன் அடைக்க உகந்த நாட்கள்
ஹோம விவரம் :
எவ்விதத்தில் சித்தி செய்வது என்றாலும் செய்து முடித்த மறுநாள்,தாங்களே சிறிய ஹோம குண்டத்தில் வறட்டி, புரசு குச்சி, மர குச்சி, சிறிது வைத்து சுத்தமான பசு நெய்யினை ஆகுதியாக்கி (ஹோமத்தில் விட்டு) 10008 முறை ஒரே நேரத்தில் ஹோமம் செய்து முடிக்கவேண்டியது.
வரலக்ஷ்மி விரதம் பாடல் | Varalakshmi Vratham Song
ஹோமத்தின் பூர்ணாஹுதியில் (முடிவு) பூர்ணாஹுதி பட்டு (காட்டன் துணி) நாட்டு மருந்து கடையில் வாங்கி அதில் 108 ஹோம சமித்து சிறிது,ஒரு வெள்ளை தாமரை,ஒரு சிகப்பு தாமரை,6 ஒரு ருபாய் நாணயங்கள் இணைத்து கட்டி அக்னியில் இடவும். மறுநாள் பஸ்மத்தினை ஏதேனும் மரத்தடியில் அல்லது செடியில் இட்டு விட்டு அதில் இருக்கும் நாணயங்களை மட்டும் எடுத்து ஒன்றை லெதர் அல்லாத பர்சில் வைத்து கொள்ளவும். மற்றதை பணப்பெட்டியில் வைக்கவும். தினசரி நிவேதனம் மற்றும் தூப தீபம் முக்கியம்.
Vamanan Seshadri Tips : ஆகஸ்ட் மாதம் 2021 தங்கம் வாங்க முகூர்த்த நேரம்
மற்றவர்கள்:
மேற்கண்ட முறையில் சித்தி செய்ய முடியாதவர்கள் தினசரி பக்தியுடன் மற்றும் உடல் சுத்தி மனசுத்தியுடன் 108 முறை வாழ் நாள் முழுதும் கூறிவரலாம்.