KAL UPPU PARIHARAM IN TAMIL


KAL UPPU PARIHARAM IN TAMIL | கல் உப்பு பரிகாரம் | Vamanan Seshadri 

அருள் இல்லார்க்கு அவ்வுலகில்லை.பொருளில்லார்க்கு இவ்வுலகில்லை என்பது நாம் அறிந்த ஒரு பழமொழி.அதே போல் கஷ்டங்கள் பிரச்சினைகள் வாழ்க்கையில் ஏற்படுவது சகஜம்.  என்பதும் உலகறிந்த ரகசியம்.

இதை விரிவான விடியோவாக காண இங்கே க்ளிக்கவும் 

பணம் என்ற ஒன்றினால் பெருவாரியான பிரச்சினைகளை எதிர்கொள்ள முடியும்  என்றாலும் பணம் மற்றும் பணரீதியான விஷயங்களே பிரச்சினைகளானால் என்ன செய்வது? 

பொதுவாகவே எந்த விதமான பிரச்சினைகளுக்கும் தீர்வு என்பது கட்டாயம் உண்டு என்பார்கள். ஆனால் அந்த மார்க்கத்தை கண்டறிவது தானே சவாலே.எப்படி? எவ்வாறு ?எங்கே?என்னவழி? அறிவதற்குள் திண்டாடி திணறி மூச்சு முட்டி விடுகிறது.

PANAM VARA MANTHIRAM IN TAMIL | WEALTH MANTRA IN ENGLISH | VAMANAN SESHADRI TIPS

இதற்கு இதோ அருமையான எளிமையான குருஜியின் இந்த ஒரு வழிமுறையை(தீர்வு)தெரிந்து கொள்ளலாம்.சிறு திருத்தம். முறை ஒன்றுதான் வழி(தீர்வு) ஒன்றல்ல இரண்டல்ல மூன்று.அட ஆடி மாதம் அல்லவா  1+1

1+2

1+3 என ஆடித் தள்ளுபடி ஸ்டைலில் இருக்கிறதே என்று தானே நினைக்கிறீர்கள்? (சும்மா சொல்லக்கூடாது என்னதான் பிரச்சினைகள் நம்மை புரட்டி போட்டாலும், இந்த குசும்பு sorry குறும்பு தானே நாம் சும்மா உட்கார்ந்து விடாமல் உந்தித்தள்ளுகிறது)   Secret of our energy !! 

🌞ஜோதிட ரீதியாகவும்,🌞ஐம்பூதங்கள் ரீதியாகவும், 🌞கிரகங்கள் ரீதியாகவும்🦋1.பணவரவு,🦋2. கனவுகள் (ஆசைகள்) நிறைவேற

🦋3.கடன்தீர என

      3 IN ONE விபரங்களை அறியலாம் வாருங்கள்.


கல் உப்பு பரிகாரம் : செல்வம் சேர செல்வம் வர கல் உப்பு


செல்வ வளம் சேர-SELVAM VARA 

தேவையான பொருட்கள்: 

1.ஒரு சிறிய கைப்பிடி அளவு கல் உப்பு

2. ஒரு ஏலக்காய்

3. சிறிய வெள்ளை நிறத்துணி

4.அதைவிட சற்று பெரிய அளவில் சிகப்பு நிற துணி

5.வைக்கவேண்டிய திசை அக்னி மூலை ( தென்கிழக்கு)

 6.செய்யவேண்டியநாள் :திங்கள்/வெள்ளி

   7. சங்கல்பம் ( பிரார்த்தனை)பணம் சேர, செல்வவளம் பெருக.                            🌼நினைத்தது நிறைவேற & செல்வம் சேர

தங்கம் வாங்க நல்ல நாள் ஆகஸ்ட் 2021 |  THANGAM VANGA NALLA NAAL AUGUST 2021

தேவையான பொருட்கள்:

1.ஒரு சிறிய கைப்பிடிகல் உப்பு

2.ஆள்காட்டி விரலில் பாதி அளவு மஞ்சள் கட்டை-1

3.சிறியமஞ்சள் நிற துணி

4. அதைவிட சற்று பெரிய சிகப்பு நிற துணி

5.வைக்கவேண்டிய திசை -அக்னிமூலை( தென்கிழக்கு)

6.செய்யவேண்டிய நாள்: புதன்/ வியாழன்

7.சங்கல்பம்-( பிரார்த்தனை) ஏதாவது இரண்டு மனவிருப்பங்கள் மட்டும்.

கடன் தீர KADAN ADAIYA KADAN THEERA

தேவையான பொருட்கள்:

1. ஒரு சிறிய கைப்பிடிகல் உப்பு

2.மிளகு -1

3. ஒன்றுக்குள் ஒன்றாக வைக்கும்படி இரண்டு சிகப்பு நிற துணிகள்.

4.வைக்கவேண்டியதிசை: அக்னி மூலை (தென்கிழக்கு)

செய்யவேண்டிய நாள்: செவ்வாய்/சனி

5.சங்கல்பம்: எல்லாவித கடன்களும் விரைவில் தீரவேண்டும்.

 கடன் அடைக்க உகந்த நாள் ஆகஸ்ட் 2021 

❄️அவரவர் பிரச்சினைகளுக்கேற்ப தேவையான பொருட்கள் எடுத்து வைத்துக் கொண்டு பிறகு வலதுகையில் கல் உப்பை வைத்துக்கொண்டு  அதனுடன் எண் 2ல் கொடுக்கப்பட்டுள்ள ஏதாவது ஒன்றை வைத்து மூடி நன்கு பிரார்த்தனை செய்து விட்டு முதலில் சற்றே சிறிய அளவில் உள்ள துணியில் கட்டி முடித்து, அதை மீண்டும் பெரிய சிகப்பு துணியில் மீண்டும் மூட்டை போல் கட்டி கைகளில் வைத்து மீண்டும் ஒரு முறை மனதார பிரார்த்தனை செய்து விட்டு வீட்டின் அக்னி மூலையில் வைத்து விடுங்கள்.

அது பெரும்பாலும் சமையலறையாக இருக்கும்.அல்லது வேறு அறைகள் இருந்தாலும் அதில் உள்ள தென்கிழக்கு பகுதியில் வைக்க வேண்டும்.கவனிக்கவும் தென்கிழக்கு திசையில் தென்கிழக்கு மூலையில்.

இடத்தின் தன்மைக்கேற்ப 🔥 வேலைசெய்யும்.


நன்றி : தமிழில் வடிவாக்கம் : ஸ்ரீமதி.நிர்மலா 

Post a Comment

Previous Post Next Post

Get in touch!