செப்டம்பர் மாத ராசி பலன் 2021 தனுசு | DHANUSU SEPTEMBER MONTH RASI PALAN 2021 | Vamanan Seshadri Remedies
தொட்டது துலங்கும் காலம் என்றாலும் மாதம் 10 தேதிக்கு பிறகு எதையும் அவசர கதியில் முடிக்க முயற்சி செய்யாமல் நிதானமாக நிறுத்தி ஆராய்ந்து செய்வது பலனை நல்லதாகும். பணவரவு,தொழில் முன்னேற்றம்,வேலை வியாபாரத்தில் மனம் மற்றும் பண நிம்மதி ஏற்படும். வீட்டிலும் அமைதி நிலவ கூடிய காலகட்டமே. திடீர் லாபங்களையும் அதிர்ஷ்டத்தையும் தனுசு ராசியினர் செப்டெம்பர் மாதம் எதிர்பார்க்கலாம். விநாயக வழிபாடு மற்றும் சூரிய வழிபாடு நன்மை தரும். தினசரி அலுவல்களை துவங்குமுன் 'ஓம் கால பைரவாய நமஹ' மந்திரம் சொல்லி துவக்குங்கள்-மேலும் பேச்சில் கடும் சொற்கள் எவ்விதத்திலும் இம்மாதம் வராமல் பார்த்து கொள்வது தனுசு ராசியினருக்கு நன்மையை பெற்றுத்தரும்.