இன்றைய நல்ல நேரம் 26.7.23 | Indraya Nalla Neram 26.7.23
இன்று : ஸ்வாதி திருநாள்-நரசிம்மருக்கு உண்டான தினம்.வீட்டில் நரசிம்மர் படத்தை வைத்து கோலமிட்டு நெய் விளக்கேற்றி நரசிம்ம ருண விமோசன ஸ்தோத்திரம் 3 முறை படித்தால் கடன் நிவர்த்தி, நரசிம்ம பிரபத்தி 11 முறை கூறி வணங்கினால் அனைத்திலும் ஜெயம். மாலை பிரதோஷ வேலையில் செய்வது மேலும் நன்மை தரும். நரசிம்மருக்கு பானகம் நிவேதனம் மற்றும் துளசி மாலையிட தவறாதீர்கள்.
நிஷித்த முகூர்த்தம் பற்றி : நிஷித்த முகூர்த்தம் -தேவி மஹாலக்ஷ்மியின் அருள் ஆற்றல் நிறைந்திருக்கும் நேரம் ஆகும்.இந்நேரத்தில் மஹாலக்ஷ்மி வழிபாடு மற்றும் ஸ்ரீ சூக்தம் கேட்டு வருவது அளவற்ற நற்பலன்களை அள்ளித்தரும். நிஷித்த முகூர்த்தத்தில் செய்யக்கூடாத விஷயங்கள் என பெரிதாக ஒன்றும் இல்லை.பொதுவாக நல்ல நேரங்களில் வேண்டாத எண்ணங்கள், அசைவம் உண்பது,பிறருக்கு தீங்கு நினைப்பது போன்ற விஷயங்களை தவிர்த்தால் போதுமானது.
மங்கள யோக நேரங்கள்
அபிஜித் : இன்று இல்லை
விஜய முகூர்த்தம் பகல் 2:23 முதல் 3:13 வரை
கோதுளி முகூர்த்தம் மாலை 6:25 முதல் 6:49 வரை
மாலை முகூர்த்தம் மாலை 6:37 முதல் 7:49 வரை
நிஷித்த முகூர்த்தம் இரவு 11:53 முதல் 00:38 வரை
பிரம்மமுகூர்த்தம் ஜூலை 27 : 4:23 முதல் 5:08 வரை
துர் முகூர்த்தங்கள் 26.7.23
காலை 10:08 முதல் 10:59 வரை
மாலை 03:14 முதல் 04:05 வரை
விலக்கவேண்டிய நேரம் : ஜூலை 27 காலை 06:55 முதல் 8:32 வரை