கருப்பு மஞ்சள் (காளி ஹால்டி எனும் கருமஞ்சள்) வசீகரம்-ஆகர்ஷணம் செய்யக்கூடியதா ?
2014 ஆம் ஆண்டு வேந்தர் டிவி-மூன்றாவது கண் நிகழ்ச்சி ஆரம்பிக்கப்பட்டு ஒரு சில மாதங்கள் ஆன நேரம்.எம்மை பற்றி கேள்விப்பட்டு நிகழ்ச்சிக்காக அணுகியிருந்தனர். நிகழ்ச்சி படப்பிடிப்பின் சமயம் அங்கு எம்மை பேட்டி கண்டுகொண்டிருந்த அன்பர், கருப்பு மஞ்சள் பற்றி விரிவாக சொல்லுங்கள் என்றார். இதே பக்கத்தில் (yantramantratantra) கருப்பு மஞ்சள் பற்றி வெளியிட்டிருந்த நேரம். அது வரை அப்படி ஒரு தாந்த்ரீக பொருள் இருப்பதாக தமிழகத்தில் எவருக்கும் தெரியாது. முதன் முதலில் கருப்பு மஞ்சள் தாந்த்ரீக மகிமை பற்றி வெளியிட்டது நாம் தான். சந்தேகம் உள்ளோர் முகநூல், யூ டியூப் அல்லது இணைய தளங்கள் என எல்லாவற்றிலும் வெளியிட்ட தேதியுடன் தேடி தெரிந்து கொள்ளலாம்.
தற்சமயம் பலர் இதை 100 ருபாய்க்கு கூட விற்க துவங்கிவிட்ட இந்த நேரத்திலும் இதன் அருமை பலருக்கும் தெரிவதில்லை.
சண்டியின் அம்சமானது கருப்பு மஞ்சள். கிரகங்களில் சனி மற்றும் குருவை சார்ந்தது.பஞ்சபூதத்தில் நில தத்துவத்தையும் அக்னி தத்துவத்தையும் ஒருங்கே கொண்டது. இதை மருத்துவத்திற்கு உபயோகம் செய்ய எவ்வித கட்டுப்பாடுகளும் இல்லை. அதே சமயம் வசீகரம் ஆகர்ஷணம் போன்ற விஷயங்கள் மற்றும் தன ஆகர்ஷணம் செய்ய உபயோகம் செய்ய கண்டிப்பான விதிகள் உள்ளது. நாம் இதை தாந்த்ரீக பூமியான ஒரிசாவில் பிரத்யேகமான முறையில் காப்பு கட்டி நாள் முகூர்த்தம் பார்த்து விளைவித்து, ஆகர்ஷண,வசீகரண மற்றும் சித்தி மந்திரம் கூறி எடுத்து தருவிக்கிறோம். இவை வருடத்திற்கு ஒரு முறை அல்லது இரு முறை மட்டுமே குறிப்பிட்ட அளவில் கொடுக்க முடியும். தற்சமயம் தெருவில் விற்கப்படுபவை ஏன் பலன் தருவதில்லை என இப்பொழுது உங்களுக்கு தெரிந்திருக்கும்.
எவ்வளவு விலையென்றாலும் நாம் கொடுப்பது மட்டுமே பலன் தருகிறது என இன்றளவும் காத்திருந்து பெற்று கொள்வோர் பலர் உண்டு.அவர்கள் கடந்த ஒன்பது வருடங்களாக அதன் அருமையை உணர்த்திருப்பவர்களாக இருப்பார்கள்.
மஹாராஷ்டிரா உத்திர பிரதேசம் போன்ற இடங்களில் கருப்பு மஞ்சள் மிக பிரபலம்.குறிப்பாக வசீகரத்திற்கு அல்லது முடிக்கமுடியாத காரியத்தை முடிப்பதற்கு இதை வலது கை மோதிர விரலின் ரத்தத்தில் குழைத்து நெற்றியில் இட்டு செல்வர் என்கிற விஷயத்தி நிகழ்ச்சியில் கூறியதும், நிகழ்ச்சி படப்பிடிப்பிற்கு வந்திருந்த அன்பர், தானும் முயற்சிப்பதாக கூறி முயற்சித்தார். பின்னர் வேறொரு சமயம் சந்திக்கும் பொழுது, குறிப்பிட்ட விஷயம் ஒன்று மனத்திற்கேற்றது போல் அன்றிரவே செய்தி வந்ததாக தெரிவித்தார். கருப்பு மஞ்சளை வீட்டில் வளர்க்கலாமா என்பது பலரின் கேள்வியாக உள்ளது ? தாராளமாக வளர்க்கலாம்-தேவியின் அம்சம் கொண்டது அது, அதே சமயம் அதை தெய்வீகமாக மற்றும் மருத்துவ ரீதியாக உபயோகம் செய்ய மட்டுமே முடியும். கருப்பு மஞ்சள் மந்திர காப்பு இன்றி ஆகர்ஷணத்திற்கு பயன் தராது. அன்பர்களுக்கு மேலும் கருப்பு மஞ்சள் பற்றிய கேள்விகள் இருப்பின் இங்கு பதியலாம்.
குறிப்பு : நம் சென்டரில் நடைபெறவிருக்கும் ஆடி பௌர்ணமி சண்டி ஹோமத்தில் பிரசாதமாக சண்டி தேவியின் மந்திர ஆகர்ஷணம் செய்து கருப்பு மஞ்சள் திலக பொடி வழங்க உள்ளோம்.
விவரங்கள் : www.poojahomam.org