Thursday, 27 August 2015

Astro Remedy-Money Wealth Attraction 108 Repetitions of Kubera Mantra( குபேர மந்திரம்)
 கொடுத்துள்ள குபேர மந்திரம்- வீடியோ மட்டுமின்றி ஆழ் மனதில் மற்றும் மூலையில் பண வசீகர சக்தியை ஏற்படுத்துவதும் ஆகும்.தினசரி மூன்று வேளை பார்த்தும் கேட்டும் கூறியும் வர நிதி நிலைமை முன்னேற்றம் காணும்.

பஞ்ச பூத சக்திகளையும் சமன்படுத்த எளிய முறைநாம் வாழும் இடத்தில பஞ்ச பூத சக்திகளும் சம நிலையில் இருக்க வாழும் இடம் வளமானதாக இருக்கும். இதையே சீன மற்றும் நம் வேத வாஸ்து சாஸ்திரங்கள் வலியுறுத்துகின்றன. இதை கீழ்க்கண்ட எளிய முறையின் மூலம் சுலபமாக பெறலாம்.

ஒரு கண்ணாடி பாட்டிலில் ஒரு கத்தி, பீங்கனால் ஆன எதேனும் ஒரு சமையல் பொருள், ஒரு மர ஸ்பூன், மற்றும் ஒரு அடுப்பு ஏற்றும் லைட்டர், இவற்றை இட்டு சமையல் அறையில் வைத்திருக்க பஞ்ச பூத சம நிலை ஏற்பட்டு தோஷங்கள் விலகும். 

Wednesday, 26 August 2015

க்ரிஸ்டல் பால் (Crystal Ball) தரும் வற்றாத வளமை
சூரிய ஒளியை உள் வாங்கி பிரதிபலிக்கும் மற்றும் தேக்கி வைக்கும் சக்தி கிறிஸ்டலுக்கு உண்டு. இதை வீட்டின் சமையலறை ஜன்னலில் கட்டி வைக்க சிறப்பான ஆற்றலை வெளிப்படுத்தி வற்றாத வளமை சேர்க்கும் வீட்டிற்க்கு.

Tuesday, 25 August 2015

வற்றாத பண வரவிற்கு


புதன் கிழமை காலை 6-7 அல்லது மதியம் 1-2 அளவில் ஒரு சிறிய பச்சை துணியில் சிறிய பாதாம் பருப்பு ஒன்றை சுற்றி பர்சில் வைத்து வரவும். மாதம் ஒரு முறை பருப்பை எறிந்து விட்டு வேறு மாற்றி விடலாம்.குறுகிய காலத்தில் பண வரவை ஏற்படுத்தும் தாந்த்ரீக பரிகாரம் இது. குறிப்பு : லெதர் பர்சில் இது பலனளிக்காது-மேலும் அடர் நீளம் மற்றும் கருப்பு நிற பர்ஸ்களை தவிர்க்கவும்.

நிரந்தர பண வரவை தரும் லவங்கப்பட்டை


பண பற்றாகுறை எப்போதும் இருந்து கொண்டே இருப்பவர்கள், வியாபாரத்தில் ஏற்ற இறக்கம் எப்பொதும் இருந்து கொண்டே இருக்கும் நிலையில் உள்ளோர் மற்றும் வறுமை நிலையில் உள்ளோர்கள் :
மிக சிறிய அளவில் சிகப்பு துணி (முடிந்தவர்கள் பட்டு துணி உபயோகப்படுத்தலாம், பயன் விரைவில் வரும்) 2 எடுத்து கொண்டு அதில் ஒவ்வொன்றிலும் ஒவ்வொரு லவங்க பட்டைகளை வைத்து மடித்து வீட்டின் வாசற்கதவின் மேல் பக்கம் ஒன்றும் அதே போல் வீட்டின் உள் பக்கம் ஒன்றும் கட்டி வைக்கவும். இதை செவ்வாய் கிழமை மதியம் 1-2 அல்லது இரவு 8-9 மணியளவில் செய்ய பலன் கூடும்.மாதம் ஒரு முறை துணியை துவைத்து வேறு லவங்க பட்ட வைத்து கட்டிவிடவும். நிரந்தர பண வரவை ஏற்படுத்தும் முறை இது.

Sunday, 23 August 2015

ஆன்மீக தாந்த்ரீக பொருட்களுக்கு முகவர்கள் தேவை

கீழ்க்கண்ட இடங்களில் நம் தயாரிப்புகளான ஹிமாலயன் ராக் சால்ட், தீய சக்திகளை அழிக்கும் மூலிகை தூப பொடி, பண வரவை தரும் 'தன வசிய தூப பொடி மற்றும் மற்ற அனைத்து தாந்த்ரீக, ஆன்மீக பொருட்களை விற்பனை செய்ய முகவர்கள் தேவை. ஒரு ஊரில் ஒருவர் மட்டும் நியமிக்கபடுவர்.

1. வேலூர்
2. திருச்சி
3. திருப்பூர்
4. நாமக்கல்
5.சேலம்
6. ஈரோடு
7.கரூர்
8.விழுப்புரம்
9. மதுரை
10. திண்டிவனம்

பெங்களூரு மற்றும் கோவையில் நேரடி கிளையும், திருவண்ணாமலை / மேல்மலையனூர் / பர்வதமலை / சதுரகிரி போன்ற இடங்களில் ஒவ்வொரு மாதமும் அமாவாசை மற்றும் பௌர்ணமி நாட்களில் பொருட்கள் கிடைக்கும்.

+919840130156 அழைத்து மேல் விவரங்கள் பெறவும். 

எதிர் மறை சக்திகளை அழிக்க ராக் சால்ட் பரிகாரம்ஹிமாலயன் கிறிஸ்டல் ராக் சால்ட் பற்றி ஏற்கனவே பல முறை கூறி வந்துள்ளோம். பொதுவாகவே கல் உப்பு மற்றும் ஹிமாலயன் ராக் சால்ட் நாம் அன்றாடம் அடையும் எதிர்மறை சக்திகளை போக்க வல்லவை. வாரம் ஒரு முறை நம் இருப்பிடத்தை / தொழில் செய்யும் இடத்தை முழுமையாக ராக் சால்ட் கொண்டு கழுவி விடுவது மற்றும் ராக் சால்ட் கொண்டு குளித்து வருவது மிகுந்த பயன் அளிக்கும் ஒன்று. தொழில் செய்யும் இடம் மற்றும் வீடுகளில் உள்ள எதிர்மறை சக்திகளை அழிக்கக்கூடிய ஒரு சூட்சுமமான முறையை இப்போது காணலாம்.

வாயகன்ற 4 கண்ணாடி கிண்ணங்களில் ஹிமாலயன் ராக் சால்ட் கொண்டு நிரப்பவும். பின்பு அதன் மேல் ஒரு கிராம்பு துண்டை குத்தி வீட்டின் உள் நான்கு மூலைகளில் வைத்து விடவும். இதை செவ்வாய்கிழமை தொடங்கவும். 3 நாட்கள் முடிந்து, அதாவது வியாழன் இரவு அவற்றை எடுத்து வீட்டில் உள்ள அனைவரும் அவற்றை கொண்டு தலையை சுற்றி பின்பு உப்புகளை  நீரில் (ஆறு, குளம், குட்டை,கடல்) விட்டு விடலாம். நான்கு திக்குகளிலும் உள்ள எதிர்மறை சக்திகளை அடியோடு அழிக்கவல்லது இந்த முறை. இதை மாதம் ஒரு நாள் செய்து வரலாம். தொழில் செய்யும் இடத்தில தொழில் நடத்துபவர் மட்டும் தலையை சுற்றி நீரில் விட்டுவிடலாம். வியாழன் இரவு நீரில் விட முடியாதோர் மற்றும் ஆறு, கடல் செல்ல முடியாதோர், கிராம்பினை ரோட்டில் நான்கு திக்குகளில் போட்டு விட்டு, வீட்டிற்கு வெளியே உப்பினை கரைத்து ஊற்றி விடலாம். இதை செய்து முடித்ததும், வீட்டில் உள்ள அனைவரும் ராக் சால்ட் கொண்டு குளித்து விடவும். உடனடி பலன் அளிக்க வல்ல முறை இது. 

மணி தெரபி பயிற்சி - நிரந்தர பண வரவிற்கு எளிய முறைகள்


சிம்பல் தெரபி-வாழ்வை வளமாக்கி கொள்ள எளிய பயிற்சிகள்