Thursday, 3 September 2015

'லக்ஷ்மி கட்டு' அறுபட சூட்சுமமான பரிகாரம்


வெள்ளிகிழமை இரவு 8-9 மணியளவில் ஒரு மனையில் குன்மதினால் 'ஸ்ரீம்' என எழுதி அதை சுற்றிலும் 6 மண் அகலில் சுத்தமான நெய் சேர்த்து பின்பு குங்குமத்தை நீரில் குழைத்து அதில் நனைக்கப்பட்ட தாமரை தண்டு திரியினை கொண்டு விளக்கேற்றி 'ஸ்ரீம்' மந்திரத்தை மனதினுள்ளே ஜபம் செய்து கற்கண்டு நிவேதனம் செய்யவும். பின்பு நிவேதனத்தை அப்படியே வைத்திருந்து மறு நாள் 9 வயதுக்குட்பட்ட ஐந்து பெண்களுக்கு அதை கொடுக்கவும். மீதம் இருப்பதாய் வீட்டில் உள்ள அனைவரும் உண்ணலாம். தொடர்ந்து வீட்டில் உள்ள எவரேனும் இதை 21 வெள்ளிகிழமைகள் செய்து வர 'லக்ஷ்மி கட்டு' எனப்படும் சதா பணகஷ்ட நிலைமை அடியோடு அழிந்து நிதி நிலை மேம்படும். இந்த 21 வாரங்களும் அசைவ உணவு சேர்க்காமல் இருப்பின், ஆரம்பித்த ஓரிரு வாரங்களிலேயே மிக நல்ல முன்னேற்றம் தெரியும். 'லக்ஷ்மி கட்டு' ஏற்பட்டு அழிந்த பல குடும்பங்களை மீண்டும் முன்னேற்றி நல்ல நிலைக்கு கொண்டு வந்துள்ளது சக்தி வாய்ந்த இந்த பரிகாரம்.

மஹா மிருத்யுஞ்ச மந்திரம்

வாழ்வின் அனைத்து பிரச்சனைகளுக்கும் முக்கியமாக சனியினால் ஏற்படும் வேலையின்மை, தொழில் நஷ்டம், மரண பயம் போன்றவைகளுக்கு அருமருந்து கீழ்க்கண்ட மந்திரம். தினசரி கூற முடியாதவர்கள் கேட்டு வந்தாலும் மிக்க பயனை தரும்-மஹா மிருத்யுஞ்ச மந்திரம். 

Wednesday, 2 September 2015

"ருத்ர பரிஹார் ரக்க்ஷா சென்டர்" தற்போது திருச்சியில்....


இனி அனைத்து பொருட்களும் திருச்சியில் கீழ்க்கண்ட முகவரியில் வரும் சனிக்கிழமை (5.7.15) முதல் கிடைக்கும். சென்டர் காலை 10 முதல் 7 மணி வரை செயல்படும். மாதம் இரு முறை நேரடி ஆலோசனையும் உண்டு. முக்கியமாக, சென்னை சென்டரில் தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டு இருந்த "அனைத்து நலன்களையும் அருளக்கூடிய அகத்தியர் அருளிய மூலிகை வசிய விநாயகர்" திருச்சியில் விநாயக சதுர்த்தியை முன்னிட்டு விற்கப்படுகிறது. சங்கல்பம் செய்து கொண்டு (கோரிக்கை வைத்து) வணங்கி வர 45 நாட்களுக்குள் தேவையை நிறைவேற்றி தரும் சக்தி அகத்தியர் அருளிய விநாயகருக்கு உண்டு. மிக சக்தி வாய்ந்த பரிகார முறை இது. இதன் அருமை பற்றியும் மேலும் சில முகமதிய அன்பர்களும் இதை செய்து வருவதை பற்றி எல்லாம் ஏற்கனவே நம் பதிவுகளில் குறிப்பிட்டு உள்ளது நினைவிருக்கலாம். இனி பொருட்களை டெபிட் கார்ட் மற்றும் கிரெடிட் கார்டு மூலமும் பெற்று கொள்ளலாம்-சென்னையிலும்.
ருத்ர பரிஹார் ரக்க்ஷா சென்டர்
32, எல்.ஆர்.எஸ். காம்ப்ளெக்ஸ், 3 வது மாடி, (பெரியசாமி டவர்ஸ் அருகில்)
சிந்தாமணி பஜார், திருச்சி 620002
+919364161122
தொலைபேசியில் வேலை நேரம் மட்டும் அழைக்கும்படி கேட்டு கொள்கிறோம்.
திருச்சியை சேர்ந்த அன்பர்கள் குபேர காசு, தன வசிய விபூதி மற்றும் பவமல்லி வேர் போன்றவைகளை கட்டணமின்றி நேரிடையாக சென்று பெற்று கொள்ளலாம். 70 வயதிற்கு மேற்பட்டோர் மற்றும் 5-15 வயது குழந்தைகளுக்கு கட்டணம் ஏதும் இன்றி மருத்துவ சேவை மாதம் இரு முறை வழங்கப்படும். மேலும் மாதம் இரு முறை 'யோகா முத்திரை' பயிற்சியும் கட்டணம் எதுவும் இன்றி வழங்கப்படும்.

அடுத்து நமது சேவை வேலூர் மற்றும் கோவையில் நீங்கள் எதிர்பார்க்கலாம்..

Sunday, 30 August 2015

வீண் விரயங்களை கட்டுப்படுத்தும் கிறிஸ்டல் பால்எவ்வளவு பணம் சம்பாதித்தும் சேமிக்க முடியாமலும் அவசர தேவைகளை நிறைவேற்றிக்கொள்ள முடியாமலும் சூழல் இருப்பின் வீட்டு கழிவறை/குளியலறை வெளியே மேல் பகுதியில்  ஒரு "கிறிஸ்டல் பந்து" கட்டி வைக்க வீண் விரயங்கள் படிப்படியாக நிற்கும்.