Friday, 27 October 2017

அவரவருக்கு பலனை கொடுக்கும் தெய்வங்கள் மற்றும் வெற்றி தரும் மந்திரங்கள்மேற்கண்ட தலைப்பு தான், தற்சமயம் பலர் எம்மை தொடர்ந்து விசாரித்து
கொண்டிருப்பது. தனிப்பட்ட முறையில் அவரவருக்கு பலனை உடனடியாக தரும் தெய்வ சக்திகளையும், அவர்களை பூஜிக்கும் மந்திரங்களும். ஆம், உங்கள் ஒவ்வொருவருக்கும் தனிப்பட்ட முறையில் பலன் கொடுக்க வல்ல இறை சக்தியை, ஜாதகத்தின் துணை கொண்டு, அல்லது ஜாதக விவரங்கள் இல்லாதோர், ப்ரசன்னத்தின் துணை கொண்டு அறியலாம். பல கோவில்களுக்கு சென்றும், பல தெய்வ சக்திகளை தொழுதும், எதிர்பார்த்த பலன் கிட்டாதோர் இந்த முறையில் வழிபட்டு பூஜித்து வரின், அந்த இறை சக்தி துணை நிற்பதோடு மட்டுமல்லாமல், நாம்  அன்புடன் -பக்தியுடன்  கேட்கும் அனைத்து தேவைகளையும் பூர்த்தி செய்து அருளுவார்.

அன்பர்களின் வசதிக்காக மேற்கண்ட  பலன்களை தனியாக கொடுக்க எண்ணம். உங்கள் விவரங்கள் பெற்று கொண்ட நாற்பத்தியெட்டு மணி நேரத்தில் பலன்கள் கொடுக்கப்படும். மேல் விவரங்கள் பெற தொலைபேசியில் அழைக்கவும்.

+919840130156 / +918754402857 

Thursday, 26 October 2017

அற்புதம் நிகழ்த்தும் அக்க்ஷய நவமி - 28.10.17 மதியம் முதல் 29.10.17 மாலை மூன்று வரை


குறிப்பாக சில பரிகாரங்கள் மற்றும் ஆன்மீக விஷயங்களை இன்றளவும் தொடர்ந்து செய்து வருவதினால் செல்வ செழிப்பில் வட நாட்டினர் திகழ்ந்து கொண்டுள்ளனரே..எப்படி தெரியுமா ??

வருடத்தில் தானமளிக்க, முக்கியமான ஆன்மீக பரிகாரங்கள் செய்ய மற்றும் ஆன்மீக போதனைகள், பூஜை பொருட்கள் மற்றும் அதிர்ஷ்டம் தரும் பொருட்களை வாங்கி வைத்து பூஜிக்க ஏற்ற தினமாக அக்ஷய திரிதியை உள்ளது. அதே போல் அவ்வளவு வீரியங்களையும் உள்ளடக்கிய நாள் தான் தீபாவளியை தொடர்ந்து வரும் சுக்ல பக்ஷ நவமி- அக்க்ஷய நவமி என்ற பெருமை பெற்ற நாளிது.

இந்நாளில் முடிந்த தானங்கள் மற்றும் மிருகங்கள், பறவைகளுக்கு உணவிடுவது மிக சிறந்த நற்பலனை கொண்டு சேர்க்கும்.

இந்நாளில் பூஜையறையில் மஹாலக்ஷ்மி தாயார் மற்றும் துர்கைக்கு, பூக்கள் சாற்றி தூப தீபம் செய்வித்து, மஹாலக்ஷ்மி தாயார் கழுத்தில் ஒரு நெல்லி கனியினை சிகப்பு நூலில் மாலையாக கட்டி வழிபட்டு வர செல்வ வளம் சேரும்.

பணப்பெட்டியின் அருகில் அல்லது பூஜை அறையில் வலம்புரி சங்கு, கோமதி சக்கரம், கணேஷா சங்கு, ராக்கெட் சங்கு மற்றும் முத்து சங்கு போன்ற ஐவகை சங்குகளை வைத்து வழிபட்டு வர, தீராத பணக்கஷ்டங்களும் தீரும்.

இந்நாளில் மஹாலக்ஷ்மி சன்னதியில் கர்ப கிரக விளக்கிற்கு தூய நெய் சேர்த்து வழிபட்டு வர மிகப்பெரும் தோஷ நிவர்த்தி பெறலாம். கோவிலில் தென்படும் குழந்தைகளுக்கு மஞ்சள் லட்டு கொடுத்து வரலாம்.

ஆன்மீக பரிகாரங்கள் செய்வது , ஜோதிட ரத்தினம் வாங்குவது அல்லது அணிவது, ஜோதிஷ பரிகாரங்கள் அல்லது கருத்துக்களை கேட்பது, சத்சங்கங்களில், கூட்டு பிரார்த்தனைகளில் கலந்து கொள்வது இந்நாளில் செய்ய அஷ்ட ஐஸ்வர்யங்களும் சேர்க்கும்.

இந்த நாளில் நெல்லி மரத்தினடியில் சிவன் மற்றும் விஷ்ணு இருவரையும் தூப தீபம் காட்டி, மலர் சாற்றி, நிவேதனம் செய்து வழிபட்டு வர, பல ஜென்ம பாவங்கள் தீரும். அது மட்டுமின்றி, நெல்லி மரத்தடியில் குடும்ப சகிதம் அமர்ந்து உணவருந்த, குடும்ப அமைதி நீடித்து நிலைக்கும். சொத்து பிரச்சனைகள் முடிவிற்கு வரும்.

வறியோர்க்கு உணவிடுவது மற்றும் உடைகள் தானமளிப்பது,இந்நன்னாளில் செய்ய மிக சிறந்த நற்செயலாய் அமையும்.

கிடைத்தற்கரிய இந்நாளை முழுமையாக பயன்படுத்தி அனைத்து நலன்களையும் சேர்த்து கொள்ளுங்கள்.

ஹரி ஓம் தத் சத்

ருத்ர பரிஹார் ரக்‌ஷா சென்டர்
ஜோதிஷ தாந்த்ரீக தீர்வுகள்
9840130156 / 8754402857
www.yantramantratantra.com

பசுவை பூஜிக்க அரியதொரு நாள்