Friday, 21 August 2015

உங்கள் அனைவருக்கும் செல்வம் சேர குபேர காசு


தனி நபர் ஆலோசனைக்கு என்னிடம் வரும் பலரின் பிரச்சனைகளுக்கு முக்கிய காரணம் கடன் மற்றும் பணம் சார்ந்த பிரச்சனைகளாகவே இருந்து வந்துள்ளது. மேலும், தற்சமயம் கடன் பிரச்னையால் தற்கொலை செய்து கொள்ள போகிறோம் என்கிற அளவில் கடிதங்கள் அதிகமாக வர தொடங்கியுள்ளன. தற்கொலை செய்து கொள்வது, பிரச்சனைகளை தீர்க்காது, மேலும் பாவத்தை சேர்த்து பல பிறவிகள் எடுக்க வைக்கும் என்பதை நினைவில் கொள்க. பலருக்கு இதற்காக தாந்த்ரீக பரிகாரங்கள் மூலம் நிரந்தர தீர்வுகள் கொடுத்து 
 வந்தாலும், அனைவரும் பயன் பெறும் படி ஏதேனும் செய்ய வேண்டும் என்ற எண்ணம் இருந்து கொண்டே இருந்தது. ஆகையால் மிகுந்த சூட்சுமங்கள் நிறைந்த குபேர பூஜை 3 நாட்கள் செய்து அதில் குபேர காசுகளை வைத்து மந்திர உருவேற்றி மிகுந்த சக்தி கொண்டதாக ஆக்கியுள்ளோம். இதை வீட்டில் பணம் வைக்கும் இடத்தில் வைத்து வாரம் ஒரு முறை தூப தீபம் காட்டி கொடுக்கப்பட்டுள்ள குபேர மந்திரம் கூறி வழிபட்டு வர செல்வ நிலை மிக நல்ல நிலையில் முன்னேற்றம் காணும். லெதர் அல்லாத பர்சில் கூட வைத்து தினசரி உள்ளங்கையில் வைத்து கண் மூடி மந்திரத்தை 15 முறை கூறி மேலும் சக்தி உள்ளதாக ஆக்கி கொள்ளலாம்-வற்றாத பண வரவை தரும் படி இதை உருவாக்கியுள்ளோம். இதற்கு எவ்வித கட்டணமும் இல்லை. கொடுத்துள்ள தொலைபேசி எண்ணில் அழைத்து நேரில் வந்து பெற்று கொள்ளலாம்.வெளியூர் அன்பர்கள் சுய விலாசமிட்ட போதிய தபால் தலையுடன் கூடிய கவர்களை அனுப்பி பெற்று கொள்ளலாம்.
கண்டிப்பாக கடை பிடிக்க வேண்டியவை :
கொடுக்கப்பட்டு உள்ள தொலைபேசி எண்ணில் மட்டுமே அழைக்கவும். காலை 10 முதல் மாலை 7 வரை மட்டுமே அழையுங்கள். ஞாயிறு அழைப்பதை தவிர்க்கவும்.
ஒரு குடும்பத்திற்கு ஒன்று மட்டுமே வழங்க முடியும்-தற்சமயம். ஆகையால் குடும்பத்தினர் ஒவ்வொருவருக்கும் கேட்பதை தவிர்க்கவும். வேலை/தொழில் செய்வோர் வைத்திருந்தால் மட்டுமே பயன் தரும்.
ஒரு நபர் பல் வேறு முகவரிகளில் கவர் அனுப்புவதை தவிர்த்தால் கஷ்டப்படும் அனைத்து நபர்களுக்கும் கிடைக்க வழி வகுக்கும்.
மந்திரம் : ஓம் ஸ்ரீம் ஓம் ஹ்ரீம் ஸ்ரீம் ஓம் ஹ்ரீம் ஸ்ரீம் க்லீம் வித்தேஸ்வராய நமஹ :
முகவரி :
Rudra Parihaar Raksha Centre, 69, AF Plaza,1st Flr, Arya Gowda Road,West Mamblam, Chennai 600033
ருத்ர பரிஹார் ரக்‌ஷா சென்டர்
69, AF பிலாசா, முதல் மாடி,
ஆரிய கவுடா ரோடு, மேற்கு மாம்பலம், ஸ்ரீ கிருஷ்ண சுவீட்ஸ் எதிரில், சென்னை 33
அழைக்க வேண்டிய எண் : +918015656926

Sunday, 16 August 2015

சந்திராஷ்டம நாளிற்கு எளிய பரிகாரம்


பலர் சந்திராஷ்டமம் என்றாலே இரண்டரை நாட்கள் பயந்து நடுங்குவர். முக்கிய வேலைகளை தவிர்ப்பர்-அந்த அளவிற்கு சந்திராஷ்டமம் பற்றி பய உணர்வு ஏற்படுத்த பட்டுள்ளது. மிக எளிய பரிகாரம் மூலம் அந்த நாளை சிறப்பாக எதிர்கொள்ளலாம்.
அரிசி மாவை நீரில் குழைத்து உடல் முழுதும் 20 நிமிடங்கள் ஊற வைத்து பின்பு வழக்கமான முறையில் குளித்து விட்டு, மருந்து கடைகளில் கிடைக்கும் வெள்ளை பிளாஸ்திரியை மிக சிறிய அளவில் வெட்டி, அதில் ஒரு நெல் மணியை வைத்து நம் இடது கை புஜத்தில் ஒட்டி கொண்டு அன்றாட அலுவல்களை கவனிக்கலாம். எளிய ஆனால் மிக சக்தி வாய்ந்த முறை இது-சந்த்ராஷ்டம நாட்களை 

எதிர்கொள்ள. 
மேலும் சந்திராஷ்டம நாளில் உடலில் நீர் சத்து குறையாமல் பார்த்து கொள்வது முக்கியமான ஒன்று. அந்த நாட்களில் நிலவை தொடர்ந்து இருபது நிமிடங்கள் தரிசித்து வருவதும் நல்ல பலன் தரும். அதே போல் நம் தலை நடு உச்சி பாகத்தில் 20 முறை இடது கை ஆட்காட்டி விரலால் அழுத்தம் கொடுத்து கொள்வதும் நன்று. 

ராகு, செவ்வாய் மற்றும் சூரிய பலம் சேர எளிய பரிகாரம்


செம்பு : இது ஜோதிட சாஸ்திரத்தில் மிக முக்கிய பங்கு கொண்டதாகும். செவ்வாய், ராகு மற்றும் சூரியனின் ஆகர்ஷன சக்தி கொண்ட இதை வளையமாக கைகளில் அணிந்து வர பய உணர்வு குறைந்து தைரியம் பிறக்கும்-மேலும் நம் உடலில் சக்தியை தூண்டகூடியதும் ஆகும் செம்பு. ஆண் பெண் இருவரும் அணியலாம். தினசரி செம்பு பாத்திரத்தில் வீட்டில் உள்ள அனைவரும் நீர் அருந்தி வர, ஜோதிட ரீதியாகவும் உடல் நல ரீதியாகவும் மிக நல்ல முன்னேற்றம் ஏற்படும்.
செம்பு வளையம் அணிவது, செம்பு பாத்திரத்தில் நீர் அருந்தி வருவது, கை கால் மூட்டு வலி வராமலும், ஏற்கனவே இருப்பின் நோயை குணப்படுத்தவும் உதவும்.

வற்றாத வளமைக்கு எளிய பரிகாரம்


இதை வீட்டில் ஆண்கள் அல்லது பெண்கள், யார் வேண்டுமானாலும் செய்யலாம். இதை வாழ் நாள் முழுதும் செய்து வர வீட்டில் தனம் தான்யம் இரண்டிற்கும் குறையில்லாது, வளமை வற்றாது குடும்பம் நன்று வளர்ச்சி பெறும்.
காலையில் எழுந்து முதலில் குளிப்பவர்கள், அவரவர் முறைப்படி கடவுளை தொழுது விட்டு, சமையல் அறை சென்று அடுப்பை நோக்கி மானசீகமாய் அக்னி தேவனை நினைத்து வழிபடவும். பின்பு சிறிது அரிசியை எடுத்து கொண்டு அத்துடன் ஒரு சிறு துளி மஞ்சள் சேர்த்து கையில் எடுத்து கொண்டு கீழ்க்கண்ட மந்திரத்தை கண்களை மூடிக்கொண்டு 21 முறை கூறி வாசலில் காக்கைகள் அல்லது எறும்புகள் உண்ணும்படி போட்டு விடவும். பின்பு அன்றாட அலுவல்களை தொடரலாம்.
" ஏராளம் தனம் தான்யம்"
மேற்கண்ட முறை மிக சக்தி வாய்ந்தது- வளமை மட்டுமின்றி மிகுந்த புண்ணியமும், திடமான நேர்மறை சக்தியையும் நம்முள்ளே கொண்டு வரக்கூடிய ஒன்று. செய்து பயனடையுங்கள்.