Sunday, 21 December 2014

தீய சக்திகளை எதிர்த்து விரட்ட சுலப பரிகாரம்

தூய சைவர்கள் முட்டையை எதிர்மறை சக்திகளை விரட்டக்கூட உபயோகப்படுத்துவதில்லை (யாம் உட்பட). ஆகவே முக நூலில் பல உயிர் கொல்லாமை விரும்புவோர் யாம் கொடுத்த முட்டை பரிகாரத்திற்க்கு ஏதேனும் மாற்று  தொடர்ந்து கேட்டு வந்தனர். அதற்காகவே மிக சக்தி வாய்ந்த மிக சுலபமான இந்த பரிகாரம். இதை வாரம் ஒரு முறை செய்யலாம். நல்ல பலன் தெரியும்-நாள், கிழமை,திசை போன்ற எதுவும் பார்க்க தேவை இல்லை. தாந்த்ரீக முறைப்படி சில காரணங்கள் இருப்பினும் அறிவியல் ரீதியாகவும் இதன் பலன் நிச்சயம். ஆகவே செய்து பலன் அடையுங்கள். மேலும் இவை மேலை நாடுகளில் தங்கள் உடலில் புகுந்துள்ள தீய சக்திகள், மற்றவர் கண் பார்வையால் நமக்கு ஏற்படும் அசதி, காரியத்டை  துரதிர்ஷ்டம் போன்றவைகளை போக்க உபயோகிப்பது வழக்கம். 

டிபார்ட்மெண்ட் ஸ்டோர்ஸ் எனப்படும் பெரிய மளிகை கடைகளில்  சைனீஸ் வினீகர் அல்லது ரைஸ் வினீகர் என கேட்டு வாங்கவும். அதை ஒரு பாத்திரத்தில் / வாணலியில் இட்டு நன்கு கொதித்து புகை வர ஆரம்பித்ததும் அந்த புகையை வீட்டின் / வியாபார இடத்தின் அனைத்து மூலைகளில் அறை முழுதும் காட்டி விட்டு பின்பு அந்த அறைகளில் ஒரு நல்லெண்ணெய் விளக்கேற்றி வைத்து அதில் ஒரு டையமன்ட் கற்கண்டு மற்றும் கிராம்பு போட்டு வைக்கவும்.உங்களுக்கு நல்லனவற்றை அளிக்கும் படி பிரபஞ்சத்தை வேண்டி கொள்ளவும் பின்பு 
தீபம் எறிந்து முடிந்ததும், விளக்குகளை எடுத்து வைத்து விடலாம்-அவ்வளவே. செய்த நாள் இரவு கொதிக்கும் நீரில் ரைஸ் வினீகர் விட்டு அந்த புகையை சுவாசித்து கொண்டே குளிக்கவும். இந்த முறை உங்கள் உடல் மற்றும் நீங்கள் இருக்கும் வீடு-இரண்டிலுமே உள்ள தீய மற்றும் எதிர் மறை சக்திகளை விரட்டும்-வாரம் ஒரு முறை கூட செய்யலாம். செய்து பயன் அடையுங்கள். 

இயற்கை மஞ்சள்பட்டின் மந்திர அகர்ஷன தன்மைபட்டு, வசீகர பொருட்களில் ஒன்று என்பது அனைவரும் அறிந்ததே. அதில் மிக அதிக வசிய சக்தியை தன்னுள் கொண்டது இயற்கை மஞ்சள் பட்டு தான்-அதாவது பூச்சிகளை கொல்லாமல் நெய்த பட்டு. இதில் முக்கியமாக பணத்தேவைக்கு ஸ்ரீ யந்திரம் மற்றும் மந்திர உருவேற்றம், உடல் நிலை பிரச்சனைகளுக்கு தன்வந்திரி யந்திரம் மற்றும் உடல் நிலைக்கேற்ற மந்திர உச்சாடனம், வேறு கிரக கோளாறுகளுக்கு தகுந்த யந்திரம் மற்றும் மந்திர உருவேற்றம், வியாபாரத்திற்கு ற்றும் கொடுத்த பணம் திரும்பி வர என பல்வேறு பிரச்சனைகளுக்கு எம்மிடம்  வருவோருக்கு தற்சயம் யாம்  பரிந்துரை செய்வது இதைத்தான். காரணம், தற்செயலாக இரண்டு நபர்களின் பெரிய பிரச்னைகளுக்கு இதை செய்து கொடுத்து வைத்து கொள்ளச்சொல்லி, உடன் பலன் அளித்தது தான்.இந்த மஞ்சள் பட்டை எப்போதும் உடன் எடுத்து செல்லலாம்-கையில் வைத்துக்கொண்டு நாம் கூறும் ஒரு வரி மந்திரத்தை தினசரி கூறி வரலாம். மிகுந்த பாதுகாப்பு கவசம் போல் செயல்படும் இது. வீட்டில்  தீட்டு இருந்தால் அவர்கள் தொடக்  கூடாது மற்றும் அசுத்த இடத்தில் வைக்க கூடாது, துவைத்து விடக்  கூடாது என்பது போன்ற மிக சுலப  விதி முறைகளே இதற்கு உண்டு. மற்ற தகடு யந்திரங்களை போலவோ, இலை யந்திரங்களை போலவோ வேறு எந்த கட்டுப்பாடும் இல்லை-வேண்டிய வேலையை வேண்டிய நேரத்த்தில் செய்து நம்மை வெற்றியும் அடைய செய்யும் என்பதால் இதை கொடுத்து வருகிறேன்-நல்ல பலன் கொடுத்து வருகிறது. 

கருப்பு மஞ்சளின் அற்புத பலன்கள்கருப்பு மஞ்சள் நர்மதா நதிக்கரையில் மற்றும் மத்திய பிரதேசத்தில் கிடைக்கும் அற்புதமான தாந்த்ரீக மஞ்சள் மற்றும் மருத்துவ குணம் கொண்ட ஒன்று. கிடைப்பது கொஞ்சம் அரிது. இதை தாந்த்ரீக வழிமுறைகளில் பல விஷயங்களுக்கு உபயோகப்படுத்துவதுண்டு. மேலும், இதை காளியின் அம்சம் கொண்டதாக கூறுவது வழக்கம். மேலும்  இதை காளி மற்றும் பைரவர் உபாசணைக்கும் பயன்படுத்தலாம். இதை வைத்திருப்போருக்கு செய்வினை, எதிர் மறை சக்திகளின் தீண்டல் அறவே இருக்காது. கோர்ட்டுகளில் வழக்குகளை சந்தித்து வருவோருக்கு மிக முக்கியமான பாதுகாவலாகவும் வெற்றியை தேடி தரும் ஒன்றாகவும் இது கருதப்படுகிறது. வீட்டில் சதா சண்டை சச்சரவு தம்பதிகளுக்குள் நிகழ்ந்து வந்தால், இருவரும் இதை முகத்தில் அரைத்து தேய்த்து வந்தால், சச்சரவுகள் தீரும்-அதாவது மிக முக்கியமாக இது ஜன வசியம் செய்யக்கூடியது ஆகும். முத்தாய்ப்பாக இதை மேலே கொடுக்கும் எதற்கும் அல்லாமல் பலர் இதை தன வசியத்திற்காகவே உபயோகப்படுத்துகின்றனர். பணத்தை வசீகரிக்கும் தன்மையை உடைய இதை வட மாநிலங்களில் தினமும் நெற்றியில் இட்டு செல்வர்-பண தேவைகளுக்கு செல்லும் பொழுது. மேலும் இதை ஆட்காட்டி விரலில் ஊசியால் சிறிது குத்தி குருதி எடுத்து அத்துடன் குழைத்து நெற்றியில் இட எப்பேர்ப்பட்ட வராத பணமும் வந்து சேரும் என்பதாகவும் கூறப்படுகிறது. எம் அனுபவ ஆராய்ச்சியை பொருத்த வரை இது மிகுந்த நல்ல விஷயங்களை இதை அணிபவருக்கு அளித்து வருகிறது என்பதே உண்மை-மேலும் ராகு,குரு ஜாதகத்தில் அல்லது நடப்பு திசையில் அல்லது கோட்சாரத்தில் பலவீனமாக இருந்தால் இதை தினசரி நெற்றியில் இட்டு வர, மற்றும் தன்னுடன் வைத்து கொண்டு வெளியே செல்ல பலவீனங்கள் குறைந்து நன்மைகள் பெருகும் என்பது கண்கூடு.