நாககேசரின் செல்வம் வர தாந்த்ரீக பயன்முறைகள்நாககேசரின் செல்வம் வர தாந்த்ரீக பயன்முறைகள் | Vamanan Seshadri Tips 

குறிப்பு : இந்த வாரம் 2021 ஆகஸ்ட் கடைசி ஆடி வெள்ளி நாளில் நடைபெற உள்ள பணம் வர செல்வம் வர மஹாலக்ஷ்மி ஹோமத்தில் மகாலட்சுமிக்கு வசியமான நாககேசர் (15 Nos) பிரசாதமாக வழங்கப்பட உள்ளது. இதன் தாந்த்ரீக பயன்களை இங்கே கொடுத்துள்ளோம். மஹாலக்ஷ்மி ஹோமத்தில் பங்கு பெற இதில் கிளிக் செய்யவும்.

நாககேசர் மகாலட்சுமிக்கு ப்ரீதியான மூலிகை ஆகும்.

ஆகஸ்ட் மாதம் 2021 தங்கம் வாங்க உகந்த நாட்கள் தெரிய இதில் க்ளிக் செய்யவும் 

நாகதோஷம்,நாக பயம்,வீட்டில் பாம்பு அடிக்கடி தென்படுதல் போன்றவைக்கு இதை சிறு குப்பியில் இட்டு திறந்த நிலையில் வீட்டின் பூஜை அறை அல்லது தென் மேற்கு பகுதியில் வைக்கலாம்.இந்த மூலிகையை பொறுத்தவரை மற்ற கிராம்பு,பட்டை,ஏலக்காய்,மிளகு பரிகாரங்களை போல் அல்லாமல் ஆகர்ஷணம் செய்யப்பட்ட ஒன்றை இருந்தால் மட்டுமே பலனை முழுமையாக அனுபவிக்க இயலும்.

வீட்டிலோ அல்லது வியாபார இடத்திலோ பிரச்சனைகள் சண்டை சச்சரவுகள் தொடர்ந்தால், நாககேசரை குழைத்து (நீரில் கெட்டியாக)  தினமும் திலகத்திற்குப் பயன்படுத்தினால், மேற்கண்ட பிரச்சனைகள் நீங்கும்.

வீட்டில் செல்வம் சேர பூர்ஜ பத்திர சிறு இலையில் நாககேசர் மற்றும் சுத்தமான சிகப்பு சந்தனம் இணைத்து குழைத்து "ஸ்ரீம்" என திலகமிட்டு அதை பணப்பெட்டியில் வைக்கவும்.பணத்தை பன்மடங்கு அதிகரிக்க செய்யும் தாந்த்ரீக பரிகாரம் இது.முக்கிய குறிப்பு : நாககேசரை முதலில் சுத்தி  செய்து பின் மஹாலக்ஷ்மி மந்திரம் கொண்டு சித்தி செய்து உபயோகித்தால் மட்டுமே பயனும் பலனும் தரும்.

ஆகஸ்ட் மாதம் 2021 கடன் அடைக்க கடன் தீர உகந்த நாட்கள் தெரிய இதில் க்ளிக் செய்யவும் 

சிறு குப்பி அல்லது கண்ணாடி பாட்டிலில் சுத்தி சித்தி செய்யப்பட்ட நாககேசர் 6 தேனுடன் சேர்த்து நகைகள் வைக்கும் இடத்தில் வைக்க ஸ்வர்ண வசீகரணம் சித்திக்கும்.

இதை செம்பு கிண்ணத்தில் சிறிது சுத்தமான சந்தனம் அல்லது சந்தன கட்டை, மஞ்சள் கிழங்கு மற்றும் முழு உருண்டை உரிக்கப்படாத கொட்டை பாக்குடன் (நாட்டு மருந்து கடைகளில் கிடைக்கும்) மஹாலக்ஷ்மி விக்ரஹம் அருகில் வைத்து வழிபட வீட்டில் செல்வம் வர வழிவகை செய்யும்.

சிவலிங்கம் வைத்து வழிபடுவோர் இதை, கற்கண்டுடன் பிரசாதமாக சிவலிங்கத்திற்கு நிவேதனம் செய்யலாம்.

வசீகர சக்தி அதிகரிக்க வியாழன்,வெள்ளி,ஞாயிறு நாட்களில் இதை மல்லி என்னை சிறிது மட்டும் பசு நெய் சிறிது சேர்த்து குழைத்து நெற்றியில் இட்டு வரலாம்.

மிகுந்த பணக்கஷ்டத்தில் உள்ளோர் இதை மஹாலக்ஷ்மிக்கு உரிய ஹோமத்தில் அல்லது ஸ்ரீ சூக்த (இதுவும் மகாலட்சுமிக்கு சார்ந்தது தான்)  ஆகுதியாக இட உடனடி பலனை காணலாம்.

வீட்டில் தினசரி இதை புகைத்து (சாம்பிராணி போல் இதை மட்டும்) வர துஷ்ட ஜந்துக்கள், இனம் தெரியாத பயம், வியாதிகள் மற்றும் கபசுரம் நீங்கும். 


Post a Comment

Previous Post Next Post

Get in touch!