Saturday, 25 October 2014

வசியத்திற்கு பயன் பெறும் இரண்டு அபூர்வ தாந்த்ரீக பொருட்கள்

டாக்டர்.எல்.ஆர்.சவுத்ரி மற்றும்  இவருக்கும் முன் இருந்து வந்த பல தாந்த்ரீகர்கள் உபயோகித்து வந்த  இரண்டு மிக அபூர்வ விசயங்கள்- ஒன்று : குள்ள நரி கொம்பு "ஷீயார் சிங்கி" என அழைக்கப்படும் இது வீட்டில் இருக்க சொத்துக்கள் சேரும் மற்றும் பண விரயங்கள் நிற்கும். இயற்கையாக இறந்த குள்ள நரியின் சிறு கொம்பை-இது எல்லா குள்ள நரிக்கும் இருக்காது-ஆகவே உண்மையாக கிடைப்பது மிக கடினம்-ஆனால் பலர் உபயோகித்து வெற்றி கண்டது இது-குறிப்பாக வட நாட்டு தலைவர்கள் மற்றும் பெரும் தொழில் அதிபர்கள் அனைவர் வீட்டிலும் இது கட்டாயம் இருக்கும்-சில ஆண்டுகள் முன்பு வரை.ஆனால் இப்போது வியாபார நோக்கத்தில் இதற்காக பல குள்ள நரிகள் கொல்லப்படுவதாலும், அரசாங்க கெடுபிடிகளினாலும் மற்றும் இதை எடுக்கத்தெரிந்தோர் மிக அபூர்வமாகிவிட்டதாலும் நிறைய போலிகள் உலவத்தொடங்கி விட்டதாக தகவல்.இதை எடுத்து நம் வீட்டு பணப்பெட்டியில் அல்லது பணம் வைக்கும் இடத்தில் சிகப்பு துணியால் முடிந்து வைத்து விட வேண்டும்.இதற்கு சாமானியர்கள் செய்யும் படியான வேறு எந்த பூஜை முறையும் இல்லை. சொத்துக்களை எதிர்பார்த்து காத்திருப்பவர்கள், புதிய சொத்து சேர்க்க ஆசைப்படுபவர்களுக்கு இது பெரிய வரப்பிரசாதம். மேலும் இதை தலைமுறை தலைமுறையாக பத்திரப்படுத்தி நம் சந்ததி வளர உபயோகிக்கலாம்.உண்மையானது கிடைக்கப்பெற்றோர், கண்டிப்பாக அதிர்ஷ்டசாலிகள் ஆவர். தனது புத்தகத்தில் இதன் மேன்மையை பற்றி சிலாகித்து எழுதி உள்ளார் டாக்டர்.எல்.ஆர்.சவுத்ரி. 

மற்றொன்று : "பில்லி கா ஜெர்" என அழைக்கப்படும் பூனையின் தொப்புள் கொடி  பொதுவாக நம் முன்னோர்கள் கூற்றுப்படி தலைச்சன் பிள்ளையின் தொப்புள் கொடியை தகப்பன் தாயத்தாக அணிந்து வரும் முறையை பற்றி அனைவரும் அறிந்திருப்போம். அது போல் பல மடங்கு தன ஆகர்ஷணம்  ெய்ய கூடியது "பில்லி கா ஜெர்". தனது புத்தகத்தில் 'அனைவர் வீட்டிலும் இருக்க வேண்டிய ஒன்று இது என்று கூறியுள்ளார் 
டாக்டர்.எல்.ஆர்.சவுத்ரி . ஆனால் சாத்தியமே இல்லை. பூனையானது தனது குழந்தை பிறந்த உடன் அதன் நாபியை தின்று விடும். இதை எடுப்பது மிக மிக சிரமம். ஆனால் அந்த காலத்தில் பிரத்யேகமாக சிலரை இதற்கென்று வைத்திருப்பார்களாம். அவர்களுக்கு பூனை குட்டியிடும் முன்பு கொடுக்கும் சப்தங்கள் மூலம் அதன் பிரசவ நிலை தெரிந்து பின்பு குட்டிக்கும் தாய்க்கும் சிரமமில்லா வண்ணம் எடுத்து பக்குவப்படுத்துவார்களாம். இப்படி செய்பவர்கள் இப்போதும் சீனாவில் இருப்பதாக கேள்வி. திபெத், தாய்லாந்து போன்றவை மாந்திரீகம், தாந்த்ரீகம், செய்வினை போன்றவைகளுக்கு பிரசித்தம்.அவர்களுக்கு இதை பல ஆயிரங்களுக்கு விற்பதாக தகவல். நம் நாட்டில் முன்பு போல் இதை தற்போது எடுப்பவர் அருகி விட்டனர் எனவும் தெரிவித்தார் டாக்டரின் சீடரின் சீடரான என் நண்பர். பல ஆண்டுகளுக்கு முன் உண்மையாக எடுத்த மேற்கண்ட இரண்டையும் சிறு அளவு என் வேண்டுகோளுக்கு இணங்க கொடுத்து சென்றார். படங்கள் இணையத்தில் எடுத்தவை-தங்கள் பார்வைக்காக. 
குறிப்பு : இது எம்மிடம் விற்பனைக்கு இல்லை. 


தாந்த்ரீகத்தில் உலக புகழ் பெற்ற டாக்டர்.எல்.ஆர்.சவுத்ரி

ராஜஸ்தான் நண்பரை பற்றி ஏற்கனவே கூறி இருந்தேன். அவர் தாந்த்ரீகத்தில் உலக புகழ் பெற்ற டாக்டர்.எல்.ஆர்.சவுத்ரி அவர்களின் சீடரின் சீடர். டெல்லியில் வாழ்ந்த டாக்டர்.எல்.ஆர்.சவுத்ரி அவர்களின் இழப்பு
(October 1996) எங்களை போன்றோர்க்கு பேரிழப்பு. ஜோதிடத்தை தொழிலாக கொண்ட அவர் தாந்த்ரீகம் போன்றவைகளில் நம்பிக்கை இல்லாமல் இருந்து வந்தார். ஒரு முறை அவரின் மகளுக்கே தாந்த்ரீக ரீதியான சில தொல்லைகள் ஏற்பட்ட பொழுது வேறொரு புகழ் வாய்ந்த தாந்த்ரீகரை அணுகி பெண்ணின் பிரச்சனையை தீர்த்து கொண்டார்-1980களில் . பிறகு அவரிடமே கற்று தேர்ச்சி பெற்று இவ்வுலகிற்க்கு மாபெரும் அந்த பொக்கிஷங்களை புத்தக வாயிலாக கொடுத்தார். அவரை பற்றி சில விசயங்களை ராஜஸ்தான் நண்பர் மூலம் அறிந்தேன். அவருக்கு பிறகு அவர் குடும்பத்தில் யார் ஒருவரும் ஜோதிடம்,தாந்த்ரீகம் போன்ற எதிலும் ஈடுபடுவதில்லை. நண்பரின் குருவே அதிஷ்டவசமாக அவரின் புத்தகங்களின் மூலம் கற்று கொண்டு பின்பு அவரிடம் நேரடியாக சந்தேகங்கள் கேட்டு விளக்கங்கள் பெற்று தேர்ச்சி பெற்றதால் அவரின் சீடர் என்று சொல்லி கொள்வாராம். அவரின் சீடரின் சீடர் என்று சொல்லி கொள்வதற்கே தற்போது எம் ராஜஸ்தான் நண்பர் பெருமை கொள்கிறார். எனக்கும் அவர் மானசீக குருவே. அவர் விட்டு சென்ற 600 க்கு மேற்பட்ட யந்திர, தாந்த்ரீக விசயங்கள் என்னிடம் உள்ளன. தற்போது தமிழகம் மற்றும் இந்தியாவில் உள்ள (கேரளம் தவிர) பல தாந்த்ரீகர்கள், பயிற்சி கொடுப்பவர்கள் அவர் முறையை தான் பின் பற்றுகிறார்கள். இவரை பற்றி பலர் அறிந்து கொள்ள முடியாது போனது எனக்கு மிக வருத்தமே. இதே போல் தமிழகத்தில் ஒருவர் தற்போதும் உள்ளார். பல மாணவர்களை இந்தியாவிலும் வெளிநாடுகளிலும் உருவாக்கி விட்டார். இருந்தும் அதிகம் வெளியில் தெரியாமல் ஒரு சிறு டவுனில் வசித்து வருகிறார். எமக்கு மெத்த பழக்கம். அவரிடம் தொலை பேசும் போதும் நேரில் காணும் பொழுதும் எம் முறையை மிக பாராட்டுவார். தற்போது அவர் பொது மக்களுக்கோ ஏன் சொந்த குடும்பத்தில் உள்ளோருக்கோ கூட தாந்த்ரீக பரிகாரங்கள் கொடுப்பதில்லை-வயசாகி விட்டது ஓய்வில் இருக்கிறேன் என கூறுவார். மரியாதை கருதி இந்த பதிவை இடும் முன் அவர் பெயர் பதிய அனுமதி கேட்கவே- வேண்டாம் என கூறி விட்டார். நான் மேற்சொன்ன டாக்டர்.எல்.ஆர்.சவுத்ரி பற்றி அவர் புகழ் பரப்பப்பட வேண்டும் அதே போல் தான் நீங்களும் என்றும் கூற, அதற்க்கு வெகு சீக்கரம் நாள் வரும் அதன் பின்பு கூறலாம்-இப்போது வேண்டாம் என கூறி விட்டார் !! மேலும், ஏன் நீங்களே பயிற்சி கொடுக்க தொடங்கலாமே எனவும் கேட்டார். என் கால நேரமின்மையை கூறி அவரிடம் இருந்து விடை பெற்றேன். இருவருமே மிக பெரிய விஷயங்களை தற்காலத்தில் நம் மக்களின் நலனுக்கு கொடுத்தவர்கள் !! மேற்சொன்ன டாக்டர்.எல்.ஆர்.சவுத்ரி குறிப்பிட்டு உள்ள தற்காலத்தில் கிடைக்க முடியாத இரண்டு வீரியமான தாந்த்ரீக பொருட்கள் எனக்கு ராஜஸ்தான் சீடர் மூலம் கிடைத்தது !! பதிவு மிக நீண்டு விட்டதால் அது பற்றி மற்றொரு சமயம் தனி பதிவிடுகிறேன் !!

Tuesday, 21 October 2014

தீப ஒளி திருநாள் பரிகாரங்கள் !!

தீப ஒளி திருநாள் மஹாலக்ஷ்மி தாயாரின் நாள் என்றே கூறலாம். இந்த நாளில் தீபங்கள் ஏற்றி தாயாரை வழிபட்டு பசுக்களுக்கு மஞ்சள் நிற  லட்டு மற்றும் மஞ்சள் வாழை பழம் கொடுத்து வர நம் குடும்பம் செல்வ செழிப்போடு இருக்கும். தீப ஒளி திருநாளில் செய்ய வேண்டிய சில முக்கிய விஷயங்களை இங்கே உங்களுக்காக அளிக்கிறேன்.

தீப ஒளி திருநாளில் புதியதுடைபத்தில் வீட்டை பெருக்கி சுத்தம் செய்வது மிகுந்த நன்மை தரும்-வறுமையை நீக்கும்.

மஹாலக்ஷ்மி / பெருமாள் கோவிலுக்கு புதிய துடைப்பம் மற்றும் வாசனை ஊதுவத்திகள் இந்நாளில் தானம் செய்யவும்.

கொட்டை பாக்கு ஒன்றை சிகப்பு நூலால் கட்டி லக்ஷ்மி தேவியின் படத்தில் மாலையாக இட்டு வழிபட்டு பின் அடுத்த நாள் அதை எடுத்து பணம் வைக்கும் இடத்தில் வைத்து வர, செல்வ நிலை ஓங்கும். 

வியாபாரத்தில் உள்ளோர் / தொழில் செய்வோர் கண்டிப்பாக இந்நாளில் தொழில் செய்யும் இடத்திற்கு பூஜைகள் செய்து வழிபட வேண்டும். 

இந்நாளில் அனுமனை வழிபடுவது சிறப்பு- அனுமனுக்கு ஒரு மண் அகலில் எண்னை விளக்கேற்றி அதில் ஒரு கிராம்பு இட்டு வழிபடுவது நன்மை தரும்.

திருமணமான பெண்களுக்கு இந்நாளில் அழகு பொருட்கள் (முக பவுடர், லிப்ஸ்டிக் போன்றவை) தானம் செய்யவும்.

அதிகாலை ஸ்நானம் (குளியல்) நீரில் சிறிது பால் கலந்து குளிக்கவும். 

பூஜையில் மஞ்சள் கட்டைகளையும் வைத்து பூஜித்து பின்பு அவற்றை பண பெட்டியில் வைத்திருக்கவும். 

அசோக மரத்து இலைகளால் வீட்டின் முன் வாசலை அலங்கரிக்கவும்-மாமரத்து இலைகளையும் சேர்த்து கொள்ளலாம். 

கோமதி சக்கரத்தை கண்டிப்பாக தீப ஒளி நாள் வழிபாட்டில் சேர்த்து கொள்ளவும்.

முன்பே கொடுக்கப்பட்ட குபேர மந்திரத்தை 108 முறை கூறி வழிபட்டு வரவும்.

தீப ஒளி நாள் இரவு அரச மரத்திற்க்கு அடியில் விளக்கேற்றி வைத்து பின்பு திரும்பி பார்க்காமல் வீடு வந்து சேரவும்.தீப ஒளி நாள்  காலையில் மரத்திற்க்கு நீர் ஊற்றவும். 

தீப ஒளி நாள் பூஜையில் அரிசியின் மேல் தேங்காய் வைத்து அதற்கு மஞ்சள் குங்குமம் வைத்து வழிபடவும்.

அனைவருக்கும் தீப ஒளி திருநாள் வாழ்த்துக்கள்-அசைவம் தவிர்த்து அனைத்து உயிர்களுக்கும் நன்மை செய்து இறை வழிபாட்டுடன் இந்நாளை இனிதே கொண்டாடி மகிழ்வீராக !! Monday, 20 October 2014

அபூர்வ சங்குகளின் அற்புத சக்திகள்
சமீபத்தில் ராஜஸ்தானில் தாந்த்ரீகத்தில் சிறந்த பெயர் பெற்ற நண்பர் ஒருவர் சென்னை வந்திருந்தார். பல நாட்களாய் நான் தேடிகொண்டிருந்த அபூர்வ பொருட்கள் சிலவற்றை அவரிடமிருந்து பெற்று கொண்டேன். அதில் ஒன்று தான் 'ஹத ஜோரி" . அதை பற்றி ஏற்கனவே விவரங்கள் கொடுத்துள்ளோம். இப்போது மிக அரிதான இரண்டு வகை சங்குகளை பற்றிய விவரங்களை நீங்கள் அறிந்து கொள்வதற்காக கொடுக்கிறேன். இவற்றை தற்போது (புதிதாக கிடைப்பவைகளை) விற்க கூடாது எனவும் (அபூர்வ பொருள் என்பதால்) சட்டம் இருப்பதாக தெரிவித்தார்.
"ஹத ஜோரி" எடுக்கப்படும் 'பிர்வா' மரங்களை வெட்டப்பட தடை போட்டு விட்டதாகவும் தெரிவித்தார் !! சமயத்தில் எமக்கு அவர் மூலம் கிடைத்தது மிக்க சந்தோஷம் !! சங்குகள் இரண்டிலும் சேர்த்து 9 மட்டுமே கிடைத்தது !!
ராக்கெட் சங்கு : இது ராக்கெட் போன்ற வடிவத்தில் இருப்பதால் இந்த பெயர். மேலும் இது தான் இருக்கும் இடத்தை அந்த ராக்கெட் போல மிக உயர்ந்த இடத்துக்கு இட்டு செல்லும் என்பது கண்கூடு-அதனாலும் அந்த பெயர் வந்திருக்கலாம். முக்கியமாக வட மாநிலத்தில் பெரிய வியாபாரிகள் அனைவர் இடத்திலும் இந்த சங்கானது இருக்கும்.இது வியாபாரத்தை பல உச்ச கட்ட நிலைக்கு கொண்டு செல்லும் என்பது உறுதி- கிடைத்த பத்து நாட்களில் என்னாலும் உணர முடிந்தது !! தற்போது இவை கடலில் இருந்து புதிதாக எடுக்கப்பட்டால் அரசாங்கத்திடம் ஒப்படைக்க வேண்டுமாம் !! எம்மிடம் கொடுக்க பட்டவை நாள் பட்டவை !! (புதிதாக எடுக்கப்படும் சங்கு மிகுந்த நாற்றம் மற்றும் வழவழப்பு உடையதாக இருக்கும்-அதை தான் சுத்தம் செய்து பின்பு விற்கிறார்கள் )
மஹாலக்ஷ்மி வாசம் செய்யும் கோமுகி சங்கு : அடுத்த அபூர்வம்-மாட்டின் முகத்தை போல் இருக்கும்
கோமுகி சங்கு !! இது இருக்கும் இடம் காமதேனு இருக்கும் இடத்திற்கு சமமானது !! மஹாலக்ஷ்மி இதில் வாசம் செய்கிறாள் என்பது ஐதீகம் !! மேலும் சுக்கிரன் மற்றும் குரு அருள் கூடும் இது இருக்கும் இடத்தில் !! ஒரு வம்சத்தில் இருக்கும் அனைத்து குடும்பம் / தலைமுறைகளுக்கும் முன்னேற்றமே இல்லாத நிலைமை இருப்பின் அதை மாற்றும் சக்தி உடையது இந்த சங்கு !! (வழிபட்டு வந்தால் மட்டுமே-வரவேற்பரையில் வைத்தால் பலன் இல்லை) மேலும் தொடர்ந்து வரும் தடைகள் மற்றும் அதிர்ஷ்டம் இல்லாத நிலையையும் மாற்றும் சக்தி உடையது !! துரதிர்ஷ்ட வசமாக இதுவும் தற்போது கிடைப்பதில்லை !!
இது போன்று பல சங்குகள் உள்ளன. முக்கியமாக மேற்கண்டவற்றில் ஓங்கார நாதம் எப்போதும் ஒலித்து உரைகின்றன !! வேத மந்திர சக்திகளை கிரகித்து தர கூடிய சக்திகள் உடையவை உண்மையான சங்குகள் !! இவற்றை இல்லத்தில்-வியாபார தளத்தில் வைத்திருப்பதால் எளிதில் எதிர் மறை சக்திகளை விரட்டி பரவெளியை புனிதப்படுத்தலாம் !! மேற்கண்டவை எம்மிடம் வியாபாரத்திற்க்கு இல்லை !! தகவல்கள் உங்கள் புரிதல்களுக்காக மட்டுமே வழங்கப்பட்டு உள்ளது !!