Saturday, 25 August 2018

இனம் புரியாத கவலைகள் நீங்க

#காகதந்தரம் #AirElement


தானாக கீழே விழுந்த காக்கையின் கரு நிற இறக்கை ஒன்றினை எடுத்து கொள்ளவும். பின் வீட்டிற்கு வெளிப்புறம் வந்து, இறக்கையினை இடது கையில் வைத்து, அதன் மேல் வலது கையினை வைத்து மூடி, தன் கவலைகள் தீர ஒரு வாய்ப்பினை கொடுத்த காகத்திற்கு மனதார நன்றி தெரிவித்து, பின் உங்களை வாட்டிக்கொண்டிருக்கும் கவலை ஒன்றினை  மனதில் நினைத்தவாறே ஒரு கருப்பு நிற மெழுகுவர்த்தி தீபத்தில் அந்த இறக்கையினை நிதானமாக முழுதும் எரிய விடவும். பின் மெழுகு தீபத்தை அனைத்து விட்டு , அவ்விடத்தை கழுவி பின் வீட்டினுள் சென்று கால்  பாதங்களை முழுதாக அலம்பவும். பலருக்கு இவை முதன் முறையே வெற்றியினை கொடுத்துள்ளதெனினும், குறிப்பிட்ட கவலை/துன்பம் நீங்கும் வரை வாரம் ஒரு முறை தொடர்ந்து செய்யலாம். முதலில் செய்த அதே நாளில் அதே நேரத்தில் செய்தல் அவசியம். கவலைகளை துன்பங்களை அதிசயத்தக்க வடிவில் நீக்கும் அமானுஷ்ய பரிகாரம் இது. 

ஹரி ஓம் தத் சத்

ஸ்ரீ.வாமனன் சேஷாத்ரி
ருத்ர பரிஹார் ரக்‌ஷா சென்டர்
ஜோதிஷ தாந்த்ரீக தீர்வுகள்
9840130156 / 8754402857   
www.youtube.com/amanushyam 

Friday, 24 August 2018

தொடர்ந்து சம்பந்தமில்லாத தொல்லைகள் வருகிறதா ??

எவரேனும் நம் தவறில்லாது நமக்கு தொல்லை கொடுத்து

வந்தாலோ, நமக்கு சம்பந்தமில்லாத விஷயங்கள் நம்மை தொல்லைப்படுத்தினாலோ கீழ்கண்ட விஷயத்தை ஒரு முறை மட்டும் செய்யலாம். கவனம் : ஒரு பிரச்சனைக்கு ஒரு முறை மட்டுமே செய்து விட்டு, பலனை பிரபஞ்சத்திற்கு விட்டு விடவும். வெவ்வேறு சம்பந்தமில்லாத தொல்லைகளுக்கு தனித்தனியே செய்யலாம். இந்த முறையானது நம் மீது ஏதேனும் தவறு இருப்பின் பலன் தாரா.

தகாது பிரச்சனை செய்யும் நபரின் பெயரை அல்லது சம்பந்தமில்லாது நம்மை துரத்தும் பிரச்சனையை சுருக்கமாக ஒரு வெள்ளை தாளில் எழுதி  நீங்கள் அணியும் ஷூ வின் உள்ளே வைக்கவும். பின் அதை அணிந்து கொண்டு இரவு எட்டு மணிக்கு மேல் வீதியில் ஐந்து அல்லது பத்து நிமிடங்கள் வேகநடை போடவும். பின் வீடு வந்து அந்த தாளை வலது  கையினால் எடுத்து, கழிவறையில் கழிவுகள் செல்லும் இடத்தினில் போட்டு நீர் ஊற்றி விடவும்.

எதிர் மறை துர்  சக்திகளை பிரபஞ்ச சக்தியின் துணை கொண்டு விரைவில் அழிக்கும் முறை இது. நீங்கள் நடக்கும் சமயம், உங்கள் கால்கள் வழியே அந்த எதிர் மறை துர் சக்திகள் வெளியேறுவதாக மனதில் நிறுத்தவும். 

ஹரி ஓம் தத் சத்

ஸ்ரீ.வாமனன் சேஷாத்ரி
ருத்ர பரிஹார் ரக்‌ஷா சென்டர்
ஜோதிஷ தாந்த்ரீக தீர்வுகள்
9840130156 / 8754402857  
www.youtube.com/amanushyam

Thursday, 23 August 2018

வீட்டில் அல்லது தொழில் செய்யும் இடத்தில் இன்பம் நிலவ

மேற்சொன்ன இடங்களில் ஊழியர்களாலோ அல்லது வீட்டு
உறுப்பினர்களாலோ ஏதேனும் சண்டை சச்சரவுகள் அல்லது குழப்பங்கள் தொடர்ந்து கொண்டே இருப்பின், நான்கு அன்னாசிப்பூவினை ஒரு டம்பளர் நீரில் கொதிக்கவிடவும்- இதன் நறுமணத்திற்கு மேற்சொன்னவைகளை நீக்கும் அபார சக்தி உள்ளது, அதுமட்டுமல்ல நறுமணம் இருக்கும் இடத்தை அதிர்ஷ்டத்தை அதிகரிக்கும் இடமாக மாற்றும் சக்தியும் இதற்கு உண்டு .  தேவைப்படும் சமயங்களில் எல்லாம் செய்து வரலாம்.

ஹரி ஓம் தத் சத்

ஸ்ரீ.வாமனன் சேஷாத்ரி
ருத்ர பரிஹார் ரக்‌ஷா சென்டர்
ஜோதிஷ தாந்த்ரீக தீர்வுகள்
9840130156 / 8754402857  

Wednesday, 22 August 2018

புத்தகங்கள் கிடைக்கப்பெறும் இடங்கள்

சனீஸ்வர ரகசியங்கள் , தாந்த்ரீக ரகசியங்கள் பாகம் ஒன்று மற்றும் இரண்டு - மூன்று புத்தகங்களும் தற்சமயம் சென்னை ராயபேட்டை YMCA மைதானத்தில் நடந்து வரும் புத்தக கண்காட்சியில் கடை எண் : 14, 27 மற்றும் 156 கடைகளில் மற்றும் நம் சென்டரில், தமிழ்நாடு முழுதும் உள்ள கிரி டிரேடிங் கம்பெனியில் கிடைக்கும். வரும் 2018 ஆகஸ்ட் 31 முதல் செப்டெம்பர் 9 வரை நடக்கவிருக்கும் மதுரை தமுக்கம் மைதான புத்தக கண்காட்சியிலும் கிடைக்கும். 

மேல்விவரங்கள் பெற : +919840130156 / +918754402857 

Tuesday, 21 August 2018

பணமுடைகளை தகர்க்க அமானுஷ்ய முறை


பணமுடை அடிக்கடி ஏற்படின், இரவு நேரத்தில் ஐந்து மிளகுகளை எடுத்து, நான்கு சாலைகள் கூடும்  இடத்தில் மத்தியில் நின்று , மிளகு கொண்டு தலையை ஏழு முறை சுற்றி, ஒவ்வொரு மூலையிலும் ஒரு மிளகினை  எறிந்து, ஐந்தாவதை மேல் நோக்கி எறியவும்.

மாதத்தில் ஒரு முறை செய்யலாம்-செவ்வாயன்று. திசை பார்க்க தேவையில்லை. இரவு எட்டு மணிக்கு மேல் செய்யவும். பணமுடைகளை தகர்க்கும் முறை இது.

ஹரி ஓம் தத் சத்

ஸ்ரீ.வாமனன் சேஷாத்ரி
ருத்ர பரிஹார் ரக்‌ஷா சென்டர்
ஜோதிஷ தாந்த்ரீக தீர்வுகள்
9840130156 / 8754402857

Monday, 20 August 2018

தாந்த்ரீக ரகசியங்கள் பாகம் 2 வெளியீடு

இன்று எளிமையான முறையில் 'தாந்த்ரீக ரகசியங்கள்' இரண்டாம் பாகம் வெளியிடப்பட்டது. சென்னை ராயப்பேட்டை YMCA மைதானத்தில் நடந்து வரும், புத்தக கண்காட்சியில் கடை எண் : 15 ஆனந்த நிலையம்  மற்றும் கடை எண் : 156 நியூ புக் லாண்ட்ஸ்  இரண்டிலும் புத்தகங்கள் கிடைக்கும். மேலும், நம் சென்டரில் நேரடியாகவோ, கொரியர் மூலமோ பெற்று கொள்ளலாம். வரும் 2018 ஆகஸ்ட் 31 முதல் செப்டெம்பர் 9 வரை நடக்கவிருக்கும் மதுரை புத்தக கண்காட்சியிலும் 'சனீஸ்வர ரகசியங்கள்' , தாந்த்ரீக ரகசியங்கள் பாகம் ஒன்று மற்றும் இரண்டு என மூன்று புத்தகங்களும் கிடைக்கும். மேல் விவரங்கள் வேண்டுவோர் :

+919840130156 / +918754402857