Saturday, 21 February 2015

சதுர்த்தியில் செய்ய வேண்டியவை-22.2.2015



இந்த திதியில் புதிய நல்ல காரியங்கள் தொடங்குவதை தவிர்க்கவும். போட்டியாளர்கள், எதிரிகள் போன்றோரை எதிர்கொள்ள திட்டம் தீட்ட உகந்த திதியாக கருதப்படுகிறது. மேலும் தடைகள் அனைத்தும் அகல இந்நாளில் எவ்வளவு முடியுமோ அவ்வளவு முறை மனதினுள் 'கங்' என்ற மந்திரத்தை கூறி வர, தடைகள் அனைத்தும் அகன்று நல் வழி பிறக்கும். விநாயகருக்கு அருகம்புல் மாலையிட்டு அவரின் பின்புறம் இலுப்பெண்ணை கொண்டு மண் அகல் ஏற்றி வைக்க வாழ்வு சிறக்கும்.

Friday, 20 February 2015

திரிதியையில் செய்ய வேண்டிய எளிய பரிகாரம் (21.2.2015)

காலை ஆறரை முதல் ஏழு மணிக்குள் சிவாலயம் சென்று வில்வ மலர் சாற்றி 'சிவயநம' 108 முறை கூறி கற்ப கிரக விளக்கிற்கு  தூய நெய் கொடுத்து பதினைந்து நிமிடங்கள் கற்ப கிரகம் அருகில் நின்று தரிசித்து வர அனைத்து காரியங்களும் சித்தியாகும். இது கல்வி மற்றும் கலைகள் கற்க ஆரம்பிக்க மிக சிறந்த திதி.  

Thursday, 19 February 2015

துவிதியை (20.2.2015) யில் செய்ய வேண்டியவை



நிலவை பதினைந்து முதல் இருபது நிமிடங்கள் பார்த்து கொண்டு இருந்து மனதினுள் "ஓம் சந்திரமஷே நமஹ்" மந்திரம் கூறி வர மனம் தெளிவடையும்-கவலைகள் அகலும்.யாருடனும் வீண் வாக்கு வாதங்களை தவிர்ப்பது நன்று. திருமணம் மற்றும் விசேஷங்களுக்கு தங்க நகைகள் வாங்க ஏற்ற திதி. கொடுக்கப்பட்டு உள்ள விவதேவரின் படத்தை வைத்து வணங்கி வர நன்மைகள் பெருகும். 

Wednesday, 18 February 2015

பிரதமையில் செய்ய வேண்டிய பிரமாத பரிகாரம்



பிரதமை குபேர வழிப்பாட்டிற்கு மிகவும் ஏற்ற நாள். இந்நாளில் குபேர வழிபாடு செய்ய, அனைத்து சம்பத்தும் கிட்டும். கீழ்க்கண்ட மந்திரத்தை 108 முறை கூறி வழிபட்டு வரலாம்.செல்வம் கொழிக்க நாம் ஏற்கனவே கொடுத்துள்ள குபேர கோலம் போட்டு குபேர பூஜை செய்யலாம். மேலும், இந்நாள் கடன் வாங்க மற்றும் கொடுக்க மிகவும் ஏற்ற நாள். இந்நாளில் கடன் வாங்கினால் மிக எளிதாக அடைத்து விட முடியும். கொடுத்தவராகில் ஏமாற்றம் இல்லாமல் பணம் திரும்ப வரும் என நம்பலாம். மேலும், வீடு மராமத்து வேலைகள், வீடு,வியாபார ஸ்தலங்களில் உள் அலங்கார வேலைகளுக்கு மிகவும் ஏற்ற நாள்.

மந்திரம் : 'ஷம்' (மனதிற்குள் கூறி வரவும்)