Thursday, 19 April 2018

சகல செல்வங்களையும் தரும் ஸ்ரீ பஞ்சமி 20.4.18



சித்திரை மாதத்து சுக்லபக்ஷ பஞ்சமி நாளை ஸ்ரீ பஞ்சமி அல்லது லட்சுமி பஞ்சமி என்றழைப்பர். இன்றைய நாளில் மஹாலக்ஷ்மி தேவியை வழிபடுவது, பன் மடங்கு உயர் பலன்களை தரும்.கோவிலுக்கு  சென்று கர்பகிரக விளக்கிற்கு சுத்தமான நெய் கொடுத்தோ அல்லது வீட்டிலேயே நெய் தீபம் ஏற்றி வைத்து, தெரிந்த மந்திரங்களை கூறி வழிபடுவது சிறப்பு. தொழில் செய்யும் இடத்தில் லட்சுமி தேவிக்கான பூஜைகள் செய்வது பலனை இரட்டிப்பாக்கும்.

ஹரி ஓம் தத் சத்

தாந்த்ரீக ஸ்ரீ.வாமனன் சேஷாத்ரி
ருத்ர பரிஹார் ரக்‌ஷா சென்டர்
ஜோதிஷ தாந்த்ரீக தீர்வுகள்
9840130156 / 8754402857
www.yantramantratantra.com

Tuesday, 17 April 2018

அக்ஷய திருதியையில் முன்னோர் வழிபாடு 18.4.18

இந்த நாளில் நம் முன்னோர்களுக்கு தர்ப்பணம் செய்து அவர்களின் ஆசிகளை பெறுவது மிக மிக முக்கியமான ஒன்று. பல்வேறு குழப்பங்களும், இனம் தெரியாத சங்கடங்களும் மிகுந்திருப்பின் அவை அனைத்தும் மேற்கண்டபடி செய்வதால், பனி போல் விலகும். மனமுருக அவர்களை வேண்டி வழிபட்டால், பலன் கை மேல். மேலும், இந்த நாளில் மரங்களை நடுவது,பறவைகள் மிருகங்களுக்கு உணவு மற்றும் நீர் அளிப்பது அளவற்ற புண்ணிய பலன்களை தேடித்தரும்.வருடத்தில் ஒரே முறை அமையும் இந்த அருமையான சந்தர்ப்பத்தை தவற விடாதீர். குறிப்பு : இந்து சமயத்தை கடைபிடிக்கும் அனைவரும், மேற்கூறிய முன்னோர்களுக்கு வழிபாடு செய்வது அவசியம். குறிப்பிட்ட சமூகத்தினருக்கு மட்டும் என நினைப்பது தவறு. ஹரி ஓம் தத் சத்

Monday, 16 April 2018

அக்ஷய திருதியையில் என்ன செய்ய வேண்டும் 18.4.18



வருடத்தில் மூன்று நாட்களுக்கு நல்ல நேரம், தோஷம் போன்ற எவையும் பார்க்க தேவையில்லை. அது போன்ற பொன்னான நாட்கள் அவை. உகாதி, அக்ஷய திருதியை மற்றும் விஜய தசமி தான் அது. வரும் 18.4.18 நாளன்று காலை ஆறு மணி முதல் மதியம் பன்னிரண்டு வரை மிக சிறப்பான முகூர்த்த நேரம்- திருதியை வழிபாடு செய்ய, தானங்கள் செய்ய, உங்களுக்கு தெரிந்த கலையை, கல்வியை  மற்றவருக்கு போதிக்க, மஹாலக்ஷ்மி அல்லது குபேர பூஜை அல்லது லட்சுமி நாராயண பூஜை மேற்கண்ட நேரத்தில் செய்ய  மிக சிறப்பு. மேலும் இந்த நாளில் புனித நீரில் நீராடுவது மிக சிறப்பான ஒன்று. முடியாதவர்கள், கையளவு கல் உப்பை நீரில் கரைத்து, கிழக்கு முகம் பார்த்து கங்கையை மனதில் தியானித்து குளிக்கலாம். அசைவம் முட்டை உட்பட, தோல் பொருட்கள் தவிர்ப்பதும் மிக அவசியம். இந்நாளில், எந்த அளவு தானம் செய்கிறீர்களோ, அந்த அளவு புண்ணிய பலனும் ஆத்மார்த்த திருப்தியும் வந்து சேரும். வெயிலில் வாடுவோருக்கு , வறியோருக்கு குடை,விசிறி,செருப்பு போன்றவை தானம் செய்ய, வீடு பேறு வந்தடையும். நீர் மோர், நீர் போன்றவை தானம் தர வற்றாத வாழ்வமையும். அன்னம், பணம் போன்றவை தானம் செய்ய செல்வ செழிப்பு மிக்க வாழ்வமையும். மேலும், திருமண தடை அல்லது திருமண வாழ்வில் பிரச்சனைகளை சந்தித்து வருவோர் இந்நாளில் சுமங்கலிப்பெண்களுக்கும், பன்னிரண்டு வயதுக்குட்பட்ட பெண் குழந்தைகளுக்கும் தங்களால் முடிந்த புதிய ஆடை, மஞ்சள், வளையல்,தாம்பூலம்,மஞ்சள் லட்டு, தேங்காய் போன்றவையில் எவை முடிகிறதோ, எவ்வளவு நபருக்கு தங்கள் வசதிக்குட்பட்டு செய்ய முடியுமோ அதை தானம் செய்யலாம். முதியவர்களுக்கு தங்களால் ஆன உதவிகளை செய்வது மிக பெரும் நல்வாழ்வு அமைய வைக்கும். விரும்பிய தெய்வ உருவ படங்கள்,பொருட்கள் வைத்து வழிபாட்டினை செய்வதும் சிறப்பு தரும்.

ஹரி ஓம் தத் சத்